Posts

Showing posts with the label பார்வதி பவன்

சாப்பாட்டுக்கடை - பார்வதி பவன்

ஏற்கனவே சொல்லியிருந்தது போல சாலிகிராமம் ஏரியாவில் நல்ல டீசெண்டான உணவகம்  இல்லை என்பது மட்டுமில்லாமல் கருணாஸ், திருநெல்வேலி கடை போன்றவற்றைத் தவிர  நல்ல சைவ உணவகமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  கருணாஸில் மதியம் சாப்பாடு மட்டுமே. திருநெல்வேலி கடையில் காலையிலும், மாலையிலும் டிபன் மட்டுமே. எனவே  மதிய நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாய் டிபன் அயிட்டங்கள் கொடுக்கும் சைவ உணவகங்கள் மிகக் குறைவு.  அப்படி டிபன் வேண்டுமென்றால் அதுவும் வெறும் பரோட்டா, சப்பாத்தி அயிட்டங்கள் வேண்டுமென்றால் அருகில் உள்ள லோக்கல் ஆனந்த பவனுக்கோ, அல்லது நம்ம வீடு வசந்தபவனுக்கோத்தான் போக வேண்டும். முதலாவது அவ்வளவு சிலாக்கியமில்லை என்றால் இரண்டாவது செம காஸ்ட்லி. கிட்டத்தட்ட சரவணபவன் ரேட் வந்துவிடும். அதிக விலையும் இல்லாமல், நல்ல சுவையுடனான சைவ உணவகமாய் உருவெடுத்திருக்கிறது பார்வதி பவன்.