Thottal Thodarum

Jul 27, 2013

சாப்பாட்டுக்கடை - பார்வதி பவன்

ஏற்கனவே சொல்லியிருந்தது போல சாலிகிராமம் ஏரியாவில் நல்ல டீசெண்டான உணவகம்  இல்லை என்பது மட்டுமில்லாமல் கருணாஸ், திருநெல்வேலி கடை போன்றவற்றைத் தவிர  நல்ல சைவ உணவகமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  கருணாஸில் மதியம் சாப்பாடு மட்டுமே. திருநெல்வேலி கடையில் காலையிலும், மாலையிலும் டிபன் மட்டுமே. எனவே  மதிய நேரத்தில் சாப்பாட்டிற்கு பதிலாய் டிபன் அயிட்டங்கள் கொடுக்கும் சைவ உணவகங்கள் மிகக் குறைவு.  அப்படி டிபன் வேண்டுமென்றால் அதுவும் வெறும் பரோட்டா, சப்பாத்தி அயிட்டங்கள் வேண்டுமென்றால் அருகில் உள்ள லோக்கல் ஆனந்த பவனுக்கோ, அல்லது நம்ம வீடு வசந்தபவனுக்கோத்தான் போக வேண்டும். முதலாவது அவ்வளவு சிலாக்கியமில்லை என்றால் இரண்டாவது செம காஸ்ட்லி. கிட்டத்தட்ட சரவணபவன் ரேட் வந்துவிடும். அதிக விலையும் இல்லாமல், நல்ல சுவையுடனான சைவ உணவகமாய் உருவெடுத்திருக்கிறது பார்வதி பவன்.


ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். முதல் நாள் அன்றைக்கு செண்டை மேளமெல்லாம் வைத்து கடை திறந்தார்கள். சுவீட் கடையோடு, ஹோட்டலும் சேர்ந்து திறந்திருக்கிறார்கள்.  மதிய நேரத்தில் கலந்த சாதங்கள், மினி மீல்ஸ், மற்றும் தோசை அயிட்டங்கள் தருகிறார்கள். எனக்கு சாம்பார் சாதம் பிடித்திருந்தது. அதிக  மசாலா இல்லாமல் நல்ல சுவையுடன் இருந்தது.  பரோட்டாவும் மதியத்தில் சூடாய் தருகிறார்கள். எனக்கு பரோட்டாவை விட அதனுடன் கொடுக்கும் குருமாவின் சுவை பிடித்திருக்கிறது. சப்பாத்தி நல்ல சாப்டாக இருக்கிறது.  தோசை பெரியதாய் இருப்பது போல இருந்தாலும் செம மெல்லீசு. ஏனோ தோசை பார்கையிலேயே மொழுக்கென்று இருப்பது போல எனக்கு படுவதால் அவ்வளவு சிலாகிக்க முடியவில்லை. ஆனால் சாம்பார், காரசட்னி ஆகியவை நன்றாக இருப்பதால் ஓகே.

கடந்த ஒரு மாதமாய் கிட்டத்தட்ட பத்திருபது முறை சாப்பிட சென்று விட்டேன். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு டிபன் ஐயிட்டத்தை ட்ரை செய்ய ஆரம்பித்தோம். ஒரு நாள் சில்லி பரோட்டா, இன்னொரு நாள் சில்லி சப்பாத்தி என்றார்கள். சில்லி பரோட்டா போல இல்லையென்றாலும் வித்யாசமான டேஸ்டிலிருந்தது.  சப்பாத்தி ஏற்கனவே சாப்டாக இருப்பதால் அதை பிய்த்து போட்டு சில்லி மசாலா பேஸ்டோடு கலந்து கொடுக்கும் போது இன்னும் சாப்டாக போய்விடுகிறது. எனவே வந்த சூட்டில் சாப்பிட்டு விட வேண்டும். ஆறினால் கொஞ்சம் கஷ்டம் தான். வெஜிட்டபிள் பிரியாணி நல்ல சுவை. கொஞ்சம் காரம் அதிகமென்று காரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத நண்பர் சொன்னார். பட்.. எனக்கு ஓகே.. வெஜிட்டபிள் ரைத்தாவும், உடன் எனக்கு மட்டும் ஸ்பெஷலாய் கேட்டால் குருமா தருவார்கள்.

மாலை வேலைகளில் சாட் அயிட்டங்கள் வேறு இருக்கிறது. போளி வகைகளில் சிலவும், மேலும் வழக்கமான பேல், தாஹி பூரி வகையறாக்களும் இருக்கிறது. மசாலா பூரி என்று ஒன்றை சாப்பிட்டோம். சென்னாவோடு பானி பூரிக்கு தரும் பூரியை உடைத்து அதனுடன் போட்டு, அதன் மேல் லேசாய் மிக்சரைத் தூவி தந்தார்கள். குட். மசாலா போளி ஆர்டர் செய்தேன். கிருஷ்ணா ஸ்வீட்சைத் தவிர வேறெங்கும் சிலாகிக்க கூடிய அளவில் இந்த போளி இருந்ததில்லை. ஆனாலும் எங்கெங்கெல்லாம் இந்த போளியை தருகிறார்களோ அங்கேயெல்லாம் சாப்பிட்டு டெஸ்ட் செய்யாமல் இருந்ததில்லை. எனவே இங்கேயும். நல்ல காரமான மசாலாவோடு, கிருஷ்ணாவில் தருவது போல நெய் அதிகம் போட்டு வாட்டாமல் நல்ல கிரிஸ்பான போளி. இம்மாதிரியான போளியின் விஷேஷம் என்னவென்றால்  நல்ல எண்ணெயோ, அல்லது நெய் பசையுடன் கிரிஸ்பாக வெந்திருக்க வேண்டும். அப்போதுதான் லேசான முறுகலோடு இருக்கும். போளியின் மேல் தூவியிருக்கும் மிளகாய் பொடியோடு ஒரு பாதியை பிய்த்து ஒரு ரோல் உருட்டி சாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்.. உள்ளேயிருக்கும் மசாலாவின் காரத்தோடு, நெய்யில் வாட்டிய சுவையும், போளியின் கிரிஸ்பினெஸும்.. ம்ம்ம்ம்ம்.. சூப்பர் டிவைனாக இருக்கும். ஆனால் இங்கே கொஞ்சம் மட்டுத்தான் என்றாலும் பழுதில்லை.  எனக்கிருக்கும் ஒரே சந்தோஷம் ஒரளவுக்கு நலல் தரமான சுவையான, வித்யாசமான உணவுகளை, ஓரளவுக்கு நியாயமான விலையில் கொடுக்ககூடிய ஒர் ஏசி உணவகம் சாலிகிராமத்தில் வந்திருப்பது தான்.

பார்வதி பவன்
அருணாசலம் ரோடு
சாலிகிராமம்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

குரங்குபெடல் said...

"மசாலா போளி ஆர்டர் செய்தேன். கிருஷ்ணா ஸ்வீட்சைத் தவிர வேறெங்கும் சிலாகிக்க கூடிய அளவில் இந்த போளி இருந்ததில்லை. ஆனாலும் எங்கெங்கெல்லாம் இந்த போளியை தருகிறார்களோ அங்கேயெல்லாம் சாப்பிட்டு டெஸ்ட் செய்யாமல் இருந்ததில்லை. எனவே இங்கேயும். நல்ல காரமான மசாலாவோடு, கிருஷ்ணாவில் தருவது போல நெய் அதிகம் போட்டு வாட்டாமல் நல்ல கிரிஸ்பான போளி. இம்மாதிரியான போளியின் விஷேஷம் என்னவென்றால் நல்ல எண்ணெயோ, அல்லது நெய் பசையுடன் கிரிஸ்பாக வெந்திருக்க வேண்டும். அப்போதுதான் லேசான முறுகலோடு இருக்கும். போளியின் மேல் தூவியிருக்கும் மிளகாய் பொடியோடு ஒரு பாதியை பிய்த்து ஒரு ரோல் உருட்டி சாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்.. உள்ளேயிருக்கும் மசாலாவின் காரத்தோடு, நெய்யில் வாட்டிய சுவையும், போளியின் கிரிஸ்பினெஸும்.. ம்ம்ம்ம்ம். "


அந்த போளியே

கூச்சப்படும் அளவுக்கு ஒரு வர்ணனை . . .


அண்ணன் போளி சங்கர் வாழ்க . . .

குரங்குபெடல் said...

" எனக்கு மட்டும் ஸ்பெஷலாய் கேட்டால் குருமா தருவார்கள். ":


ஒகே . . ஒக்கே . . .

டைரக்டர் . . .டைரக்டர்

Ravikumar Tirupur said...

சாப்பிடும் போதே நெனைச்சேன்

'பரிவை' சே.குமார் said...

சாப்பாட்டுக்கடை அருமையான பகிர்வு...

vinthaimanithan said...

அருணாச்சலம் ரோடுல தமிழ்நிலா மூலிகை உணவகம்னு ஒண்ணு இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க தல