Thottal Thodarum

Jul 10, 2013

DJANGO UNCHAINED

அடிமைத் தளையிலிருந்து பவுண்டி ஹண்டரால் விடுவிக்கபட்ட ஜாங்கோ அவரின் உதவியுடன் வேறு ஊரில் மிக கொடூரமான மனம் கொண்ட டிகாப்ரியோவிடம் அடிமையாய் இருக்கும் அவனின் மனைவி ப்ரூமில்டாவை எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை. ஒரு பக்கா மசாலா கதை லைனுக்குள் இருக்கும் டீடெயிலிங். மேக்கிங், நடிப்பு என்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து பண்ணியிருக்கும் விதம் என வரும் போதுதான் தலைவன் குவாண்டின் நிற்கிறார்.


1858ல் ஆரம்பிக்கிறது. அடிமைகளாய் கறுப்பர்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வரும் ஸ்பெக் சகோதரர்களை டாக்டர் வால்ட்ஸ் வழிமறித்து அவர்களில் ஒருவனை விலைக்கு வாங்குவதாய் சொல்கிறார்.  அவர்களில் பிரிட்டில் சகோதரர்களை பற்றி தெரிந்தவனான ஜாங்கோவை தெரிந்தெடுக்க, அதற்குள் ஸ்பெக் சகோதரர்களில்  ஒருவன் துப்பாக்கியை தூக்குகிறான்.  தன் துப்பாக்கியால் அவனையும், இன்னொரு சகோதரனின் குதிரையையும் சடுதியில் சுட்டு, ஜாங்கோவை கூட்டு கொண்டு போகும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது விறுவிறுப்பு. 

டாக்டர் வால்ட்ஸ் ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகளை உயிருடனோ, அல்ல்து பிணமாகவோ பிடிக்க விலை வைத்திருப்பவர்களை தேடிப் பிடித்து அவர்களை கொல்வதுதான் இவரது தொழில். அப்படிப்பட்டவருடன் ஜாங்கோ பயணிக்கிறான். வழியில் அவனுக்கும் வால்ட்ஸுக்குமிடையே ஏற்படும் நெருக்கம். அந்த நெருக்கத்தால் வால்ட்ஸ் தன் திறமைகளையெல்லாம்  அவனுக்கு கற்றுக் கொடுத்து அவனையும் ஒரு பவுண்டி ஹண்டராக்கி, அவனது மனைவியை தேடும் பொறுப்பை ஏற்று அவள் இருக்கும் இடத்தை ஜாங்கோவுடன் அடைகிறார். 

ப்ரூமில்டா டிகாப்ரியோவிடம் அடிமையாய் இருப்பது தெரிய அவரை சந்திக்க செல்கிறார்கள். அவர் ஒரு டெரரான, குரூரமான ஆள். அப்படிப்பட்டவனிடமிருந்து மனைவியை காப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எப்படி காப்பாற்றுகிறான் என்கிற கடைசி அரை மணி நேர ஆக்‌ஷன் எபிசோடை பார்த்தால் மட்டுமே என்ஜாய் செய்ய முடியும். ஏரியாவிலிருந்து தப்பிக்க முயன்ற காரணத்தால் நிர்வாணமாய் பூமீக்குளிருக்கும் நிலவரையில் அடைக்கப்பட்டிருப்பவளை டாக்டர் வால்ட்ஸ் ஜெர்மன் பேசத் தெரிந்த அடிமைப் பெண் வேண்டும் என்று கேட்டு, தன் அறைக்கு  அனுப்ப சொல்லுமிடமும், அவளை சீவி சிங்காரித்து டாக்டருக்கு விருந்தாய் அனுப்பப் போகிறோம் என்று ரூமிற்குள் அனுப்பி வைக்க, டாக்டர் அவளது கணவனான ஜாங்கோவை அவளுக்கு காட்ட,  அட இங்கே ஒரு பெரிய மெலோட்ராமா சீன் வரப் போகிறது என்று நினைக்கையில் தலைவன் என் தலை மேல் ஒரு கொட்டு கொட்டு இதோ பார்.. என ஒரு சீன் வைத்தார்.. வாவ்.. க்யூட். இப்படி சிலாகித்து, சிலாகித்து எழுதுவதை விட ஒரு வாட்டி பார்க்காதவங்க பார்த்திருங்க.. 

அக்காலக்கட்டத்தில் கருப்பர்களை அடிமைகளாய் நடத்தியவிதம். அடிமைகளின் நிலை. அதில் ஒருவன் சுதந்திர மனிதனாய் திரியும் போது அவனது ஆட்களாலேயே வெறுப்போடு பார்க்கும் நிலை. டிகாப்ரியோ கேரக்டரின் மூலம் கருப்பர்களை எப்படி கொடுரமாய் அவர்கள் நடத்தினார்கள் என்பதை காட்டுவதும், அவரது கேரக்டரைஷேஷனும்.. வாவ்.. கருப்பனாக இருந்தாலும் தலைமுறை தலைமுறையாய் விசுவாச வேலைக்காரனாய் வரும் சாமுவேல் ஜாக்சன் கேரக்டர் அட்டகாசம். கட்டக் கடைசியாய் டிகாப்ரியோவுக்கும், டாக்டர் வால்ட்ஸுக்குமிடையே ப்ரூமில்டாவை வாங்க ஆரம்பிக்கும் முன் வேறு ஒரு அடிமையை விலை கொடுத்து வாங்க சம்மதித்து மெல்ல அவளுக்கான விலையை ஆரம்பிக்கலாமெனும் போது  நடக்கும் வசனங்கள் வாவ்.. வாவ்.. நைல் பைட்டிங். இப்படி நான் ஒவ்வொன்றையும் சிலாகித்து சிலாகித்து சொல்வதை விட ஒரு வாட்டி பார்க்காதவங்க பாத்துருங்க.. நான் இதை எட்டாவது வாட்டியா பார்த்துட்டு சொல்லுறேன்.
கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

குரங்குபெடல் said...

தலைவன் குவாண்டின் நிற்கிறார்.

தலைவன் என் தலை மேல் ஒரு கொட்டு கொட்டு இதோ பார்..பாஸ் என்கிற பாஸ்கரன் . . . மட்டும் தான் எங்க தலைவன்" இதை எட்டாவது வாட்டியா பார்த்துட்டு சொல்லுறேன்."

8 வாட்டி படிச்சும் ஒன்னும் புரியல . .

anandhakumar said...

Good movie..nice review...

Karthik said...

ப்ரெஞ் பேசத் தெரிந்த.. அல்ல ஜெர்மன் பேசத் தெரிந்த..

kvn said...

Dear Shankar,

You have mentioned that you have seen the movie 8 times but i would suggest you see the movie one more time to verify that Dr.Waltz asks for a German speaking Slave and not a French speaking one...

regards,

வெட்டிபையன் said...

//டாக்டர் வால்ட்ஸ் ப்ரெஞ் பேசத் தெரிந்த அடிமைப் பெண் வேண்டும் என்று கேட்டு//

Its German!!

Cable சங்கர் said...

மாத்திட்டேன்.. மன்னிச்சூ

நந்தாகுமாரன் said...

டேரண்டினோவோட புத்தம்புது படம் பல்ப் ஃபிக்‌ஷன் பத்தி அடுத்து எழுதுங்க :)

Ratchagan said...

super sir ... i really love the way u review a movie, which makes me to watch it ... !

geethappriyan said...

Quentin vazhga

சீனு said...

"Calm yourself Gentlemen", "Now, you can get the Marshal", "In other words, you owe me 200$" - செம டயலாக்ஸ். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு டயலாக்கும் அட்டகாசம்.

ஸ்பெக் சகோதரர்களில் முதலில் ஒருத்தனை கொன்றுவிடுகிறான் (காரணம், அவன் சுட ஆயத்தமாகிறான்). இன்னொருவனை சுடுவதில்லை. அவன் குதிரையை சுட, அது அவன் கால் மேல் விழுகிறது. மற்ற அடிமைகளையும் விடுவிக்க சாவி கொடுத்து 'உங்களுக்கு 2 வழிகள் இருக்கு. ஒன்று, வந்தவழியே இந்த அடிபட்டவனையும் சுமந்து கொண்டு செல்லவேண்டும். 37 மைல்கள். இரண்டு, அவனை சுட்டுவிட்டு, அவன் பணத்தையும் எடுத்துக்கொண்டு சுதந்திரமாக செல்லலாம்' என்று போட்டும் கொடுத்துவிடுகிறார். காரணம், அவர் சட்டப்பட்டி தவறேதும் செய்யக்கூடாது என்பதால். அதே நேரத்தில் (டி)ஜாங்கோவை வாங்கியதற்கான ரசீதையும் பெற்றுக்கொள்கிறார்.

இதே லாஜிக், அவர் ஷெரீப்பை கொல்லும் போதும்...

அப்புறம் அவர் 'டாக்டர் வால்ட்ஸ்' இல்லை. Schultz. வால்ட்ஸ் அவர் நிஜப்பெயர்.

Anonymous said...

Nice movie.. Nice review..

geethappriyan said...

http://geethappriyan.blogspot.ae/2013/03/django-unchained2012.html

நேற்று லின்க் போட மறந்துட்டேன்

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை...