Thottal Thodarum

Jul 14, 2013

Sahasam

இந்தப் படத்தை மிக ஆர்வமாய் பார்க்கக் காரணம் இதன் இயக்குனர் சந்திரசேகர் ஏலெட்டிதான். இன்ஸ்பிரேஷனில் தான் படமெடுப்பார் என்றாலும், மிக சுவாரஸ்யமான லைன், வித்யாசமான கதைக் களன் என ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை படமெடுப்பவர். இவரின் முதல் படமான அய்தே சுமார் ஒன்னரை கோடியில் எடுக்கப்பட்டு, ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்த படம். இதை பிரகாஷ்ராஜ் நடிக்க தமிழில் கூட எடுத்தார்கள். ஓடவில்லை. அதே போல அனகோகுண்டா ஒக்க ரோஜு, ஒக்கடுன்னாடு, ப்ராயாணம், இதோ இப்போது இந்த சாகஸம். இதற்கு முந்தைய படங்கள் ஆந்திராவில் கிரிட்டிக்கலாகவும், வசூல் ரீதியாகவும் ஓகேயான படங்கள். எல்லா படங்களும் ஓரிரு நந்தி அவார்டுகளை தட்டிச் சென்றவை. நம்மூர் கலைமாமணி போல அல்ல நந்தி அவார்ட். இப்படியாப்பட்ட இயக்குனரிடமிருந்து ஒரு பேண்டஸி படமென்றால் ஆர்வம் வரத்தானே செய்யும்?. 


கெளதம் ஒரு செக்யூரிட்டி கார்ட். எதாவது அதிர்ஷ்டம் அடித்து தான் பணக்காரனாகி விட மாட்டோமா? என்று டாலர், தாயத்து, என்று வெட்டியாய் பணம் கட்டி ஏமாந்து கொண்டிருப்பவன். ஆனால் நல்லவன். ஒரு நாள் அவன் வீட்டின் கூரையிலிருந்து ஒரு பை விழுகிறது. அதில் அவனுடய தாத்தா சுமன் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காலத்தின் போது தன்னிடமிருந்த வைரங்களை எல்லாம் பத்திரப்படுத்திக் கொண்டு தப்பிக்க நினைக்கும் போது ஓரிடத்தில் மாட்டிக் கொண்டதாகவும் அங்கே அந்த வைரங்களை விட்டு விட்டதாகவும் எழுதியிருக்கிறது. பாகிஸ்தான் செல்ல ஏதுவாய் ஸ்ரீநிதி எனும் பக்தி முத்திப் போன இளவயது பெண்ணை சந்திக்க, அவள் பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவிலை தரிசிக்க செல்வதாய் வேண்டிக் கொண்டிருப்பதை அறிந்து அவளுடன் பயணமாகிறான். அவனுடய தாத்தாவின் வைரங்கள் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் கதை.

கோபிசந்த்க்கு ஏற்ற கதைதான். டீவி விளம்பரத்தில் அதிர்ஷ்டம் வரும் என்று ஏமாற்றி ஒரு டாலரை விற்று விட்டார் என்று ஒரு வயதான சாமியார் மீது கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கி, வெளியே வந்ததும், அதே சாமியார் அதைவிட ஒரு சிறந்த டாலரை தருகிறேன் என்று சொல்லி நஷ்ட் ஈட்டுத் தொகையை கட்டச் சொல்லி மேலும் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிச் செல்லுமிடத்தில் ரசிக்க வைக்கிறார். அதன் பிறகு பாகிஸ்தான் எபிசோடில் ஆங்காங்கே அட போட வைக்கிறார் மற்றபடி பெரிதாய் ஏதுமில்லை என்றே சொல்ல வேண்டும். டாப்ஸிக்கு வழக்கமான கவர்ச்சி கேரக்டரில்லை. இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபட்டு எப்பப்பார் சாமி, சாமி என்றலையும் கேரக்டர். இதில் கொஞ்சம் காதல் பாட்டு பாடும் பொருட்டு. மற்ற படி வில்லன் சக்திக்கபூர் சீரியஸ் வில்லனா? இல்லை காமெடியனா? என்று பல சமயங்களில் புரியவேயில்லை. ஆலி ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

படத்தின் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவாளர் ஷமத். எடிட்டர்  வெங்கடேஸ்வர ராவ். ஆர்ட் டைரக்டர் ராமகிருஷ்ணா இசையமைப்பாளர் ஸ்ரீ. முக்கியமாய் பின்னணியிசையில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு ஜெனரை வைத்து படமெடுப்பவர் இம்முறையும் அவருக்கு புதிய ஜெனரான பேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சரை எடுத்து கொண்டிருந்தாலும், லாஜிக்கென்ற ஒரு வஸ்துவை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. சாதாரண தெலுங்கு படங்களிலேயே அதை தேடக்கூடாது இது மாதிரி படங்களில் தேடலாமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு ட்ரெஷரை தேடிப் போகும் காட்சிகளில் எல்லாம் அபத்த களஞ்சியமாய் அம்பது பேர் ஏகே. 47 வைத்து கொண்டு கொலு காட்டியிருப்பது. துப்பாக்கியால் சுடப்பட்ட டாப்ஸி ஏதோ கையில் கீறல் வீழுந்தது போல அடுத்த காட்சிகளில் சாதாரணமாய் இருப்பது. ஆங்காங்கே வரும் சிஜி காட்சிகளைத்தவிர சுவாரஸ்யமில்லாத திரைக்கதை பொத்தென விழுந்து விடுவதால் பெரிய கொட்டாவிதான் வருகிறது. ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்கை ஏற்கனவே பல இந்திய திரைப்படங்கள் முயற்சி செய்தாகிவிட்ட ஓல்ட் கண்டெண்ட் அதை மீண்டும் முயற்சித்து சந்திரசேகர் ஏலட்டி தோற்றிருக்கிறார் எனும் போது வருத்தமாய் இருக்கிறது.
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

Unknown said...

ஓகே

Unknown said...

ஓகே