Thottal Thodarum

Jul 22, 2013

கொத்து பரோட்டா

ஹைதராபாத் முன்பு போல இல்லை.ஹைதை வந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலிருக்குமென நினைக்கிறேன். வழவழவென இருக்கும் ரோடுகள் இல்லை. மெயின் ரோடுகளில் கூட மேடும் பள்ளமுமாய் இருக்கிறது. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்காரர்கள் அனைவரும் ஒருமித்த குரலாய் மீட்டர் போடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எல்லோரும் பொத்தாம் பொதுவாய் முப்பது, ஐம்பது, என்பது, நூறு ரூபாய், என பிக்ஸட் அமெளண்டாக கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மீட்டர் போடக் கேட்டால்  ஊருக்கு புதுசா என்கிறார்கள். எலலாம் காங்கிரஸ் ஆட்சி செய்த கோலம். நம்மூரைப் போல மனசாட்சியில்லாத ஆட்டோக்காரர்களாய் மாறவில்லை. எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பத்திலிருந்து பன்னிரெண்டு ரூபாய் கணக்கில் தான் கேட்கிறார்கள். கோயம்பேட்டிலிருந்து சாலிகிராமத்திற்கு கூசாமல் 120 ரூபாய் கேட்கிறான். நான் பார்த்த வரையில் உயிரை மயிராய் மதித்து வண்டி ஓட்டுமிடம் ஆந்திராவாகத் தான் இருக்கும். ரெண்டு லாரிக்கிடையே ஒரு ஆட்டோவும், டிவிஎஸ் 50யும் போகிறார்கள். டெரர் ரைட் என்றால் என்ன என்பதை இங்கே கண் கூடாக பார்க்க முடியும். நண்பர் ஒருவரை பார்க்க ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். மெட்ரோ ரயில் வேலைக்காக போட்டிருந்த மறைப்பிற்கு நடுவே வண்டி நின்றுவிட்டது. பின்னால் போய் ஏதோ நோண்டியவன் வண்டியின் ஸ்டார்டிங் லீவரை உட்கார்ந்த வாக்கில் ஸ்டைலாய் காலில் தூக்கி, இடது கையில் பிடித்திழுத்து ஸ்டார்ட் செய்தவன் வண்டியை பர்ஸ்ட் கியர் போட்டு தூக்கினான். பின் பக்க டயர் ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் ஏறி அப்படியே குடை சாய, நான் அலறி அடித்துக் கொண்டி தூக்கிய பக்கம் என் வெயிட் முழுவதையும் போட்டு உட்கார, வண்டி சமநிலைக்கு வந்தது. “ஏண்டய்யா.. சூசி ஸ்டார்ட் செய்யகூடதா?’ என்று கேட்டவனை வண்டியோட்டியபடி “மீக்கு ஏம் காலேது காதா?” என்ற கேட்க நீ ரோட்ட பார்த்து ஓட்டுறா சாமி என்று நினைத்த போதே, ராங் ரூட்டில் ஒரு பஸ், மூணு லாரி ஒரு ஸ்கூட்டர் காரனுக்கு நடுவில் புகுந்து எதிர் ரோட்டிற்கு சென்றான். முடியலை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@


கிளம்பிய நாள் முதல் எங்களோடு மழையும் பயணித்தது. கேசினேனி ட்ராவல்ஸின் ஸ்லீப்பர். சீட் வசதிகள் எல்லாம் சரியாகவே இருந்தது. வழக்கமாய் தண்ணீர் பாட்டில், சின்ன டிவி ஸ்கீரின் மூலமாய் தெலுங்கு படமெல்லாம் போடுவார்கள். கேட்டால் இரவு நேர வண்டிகளில் அதெல்லாம் கிடையாது என்றார்கள். கூடவே தண்ணீரும் நீங்கள் தான் வாங்கி கொள்ள வேண்டுமென்றார்கள். வண்டியில் தனியாய் விற்பனை உள்ளதாய் சொன்னார்கள். மற்றபடி சுகமான ட்ராவல் தான். மழையின் காரணமாய் இரவு பத்து மணிக்கு கிளம்பியது அடுத்த நாள் மதியம் 12 மணிக்குத்தான் கொண்டு போய் சேர்த்தார்கள். சரி வரும் போதும் அதே கேஸினேனியில் தான் புக் செய்திருந்தோம். ஒன்பது மணிக்கு பிக்கப் என்றார்கள் சரியாய் ஒன்பதரைக்கு வந்தார்கள். லக்குடேக்காபூலில் உள்ள இடத்திற்கு வந்து சேரும் போது மணி பத்தரை. வண்டி வந்து கிளம்பும் போது மணி பதினொன்று. ஆனா சென்னையில் பத்து மணிக்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள். 
@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மீட்டர் போட்டு பணம் வாங்கிக் கொண்டிருந்த ஹைதை ஆட்டோக்காரர்களை மீட்டரில்லாமல் வாங்க வைத்த பெருமை காங்கிரஸுக்கே.. வாழ்க பெட்ரோல் விலையேற்றம்

விடிந்த பின்னும் பஸ்ஸில் வருவதும் மாஹா கொடுமை.
 • அடாது மழை பெய்தாலும் விடாமல் கூலிங் கிளாஸ் அணிபவர்கள் ஹைதை ஆண்கள்
  • Pecific rim other than imax effect mokkai 
   • இன்று ஒர் முக்காலடி கல்லின் மேல் ஒரு பக்க வீலை ஏற்றி ஆட்டோவை குடை சாய்க்க பார்த்தான். நல்லவேளை தூக்கிய பக்கம் ஜம்ப் செய்து பிழைத்தேன்
    • எறி இறங்கியதும் எதுவுமே நடக்காதது போல வண்டி ஒட்டிய ஆட்டோ ட்ரைவரின் நடிப்பு பிரமாதம்
     • ரோட் சென்ஸ் என்பது டன் என்ன விலை என்பவர்கள் வாழும் ஊர் ஹைதை
      • பணம் வைப்பதற்கு பர்ஸ் வாங்க பணம் தேவை படுகிறது
       @@@@@@@@@@@@@@@@@@@
       தமிழ் சிங்கம் ப்ரசாத் மல்ட்டிப்ளெக்ஸில் ஓடிக் கொண்டிருந்தது. தெலுங்கில் அந்தா பெரிய ஹிட் இந்தா பெரிய ஹிட் என இங்கே பல பேர் கூவிக் கொண்டிருக்க அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை என்றே சொன்னார்கள். ஐமேக்சில் பெஸிபிக் ரிம் பார்த்தோம். 250 ரூபாய் டிக்கெட். முக்கால் வாசி தியேட்டர் நிறைந்திருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு ஐமேக்ஸில் படம் பார்பதால் ஆர்வமாய் இருந்தது. அந்த ஆர்வத்தை படம் மொக்கையாக்கிவிட்டது. இங்கே பெரிதாய் செல்ப் எடுக்காத கோபி சந்தின் சாகசம் பரவாலேது என்று சொல்கிறார்கள். நம்மூரைப் போலவே சின்ன பட்ஜெட் படங்களுக்கு மல்ட்டிப்ளெக்ஸில் ஷோ கிடைக்க மாட்டேனென்கிறது என்றார் என் நண்பர். வீட்டுக்கு வீடு வாசப்படி
       @@@@@@@@@@@@@@@@@@@@@@
       ரோடு சைட் கடைகளில் டீ ஆறு ரூபாய் தான். பத்து ரூபாய்க்கு மூன்று பூரி. இட்லி பொடி, மற்றும் சாம்பார் சட்னியோடு நாலு இட்லி பத்து ரூபாய். பாரடைஸ் சர்கிளிலிருக்கும் பாரடைஸில் எப்போது கும்பலாகவே இருக்கிறது. வெஜிட்டேரியன் கடைகளில் சல்லீசான விலையில் நல்ல குவாலிட்டி உணவுகள் கிடைக்கிறது. ரம்சான் மாதமாகையால் எங்கு பார்த்தாலும் ஹலீம் போர்ட் காணக் கிடைத்தாலும் கூட்டம் என்னவோ பாரடைஸில் தான் இருக்கிறது. நூறு ரூபாய்க்கு மட்டன், சிக்கன் ஹலீம் கொடுக்கிறார்கள். பாரடைஸில் எங்கு போனாலும் மெட்டல் டிடைக்டர் செக் இல்லாமல் அனுப்புவதில்லை. புதிதாய் போன நமக்கு எரிச்சலாய் இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு பழகிப் போனதாய்த்தான் தெரிகிறது. ஓரளவுக்கு பெரிய கடை என்றால் செக்கிங் இல்லாமல் உள்ளே அனுப்புவதேயில்லை. செக்யூரிட்டி.  அதே போல ஏசி போட்ட பான் கடைகளை இங்கே காண முடிகிறது. ஸ்வீட் பீடாவில் பத்து வெரைட்டி வைத்திருக்கிறார்கள். ஜில்லென ட்ரை ப்ரூட், சாக்லெட், குல்கந்த், வழக்கமான மிக்ஸ்களோடு, என வெள்ளி ஜரிகை போட்டு அதன் மேல் ஒரு செர்ரி வைத்து அதன் மேல் ஒர் குச்சியை குத்தி கீழே தங்க சரிகை பேப்பரிலோ, ட்ஷ்யூ பேப்பரிலோ தருகிறார்கள். ஜில்லென்ற அந்த பானை வாய் முழுக்க அடக்கி ஆளும் நிமிடங்கள் வாவ்.. டிவைன்
       @@@@@@@@@@@@@@@@@@@@@@@
       இரண்டு மூன்று முறை ஹைதை சென்றும் சார்மினார் பார்காமல் வந்துவிட்டோமே என்ற ஆதங்கமிருந்தது. சென்று விட்டு வந்தபின் ஏண்டா போனோம்? என்றாகிவிட்டது. இந்தியாவில் ஒரு முக்கியமான சுற்றுலா ஸ்தலம். ஆனால் அது மிக மோசமாக மெயிண்டெயின் செய்யப்படுகிற இடமாய் இருக்கிறது. சார்மினார் இருக்கும் மெயின் ரோட்டை காரிலோ, அல்லது அரசு பஸ்களிலோ, ஆட்டோவிலோ கடக்க குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். மீறி இறங்கி நடந்தால் ரங்கநாதன் தெருவைப் போல நான்கு மடங்கு மக்களின் நடுவே ஊர்ந்து ஆக வேண்டிய கட்டாயம். ஓல்ட் சிட்டி என்பதால் மிகுந்த தொன்மை வாய்ந்த கட்டிடங்கள். இடுக்குகளில் ரெண்டு மாடி உயர கட்டிடங்கள். அநியாய கூட்டம். போலீஸை சுத்தமாய் மதிக்காத ரோட் சென்ஸ் உள்ள பயணிகள் பாதசாரிகள். எப்படியும் நாற்பது அடி ரோடு உள்ள சார்மினார் செல்லும் வழியை வெறு இருபது அடி ரோடாய் மாற்றியமைத்த பெருமை இருபுறமும் ப்ளாட்பாரக் கடை போட்டவர்களையே சாரும்.  இரவில் பார்ப்பதற்கு அழகாய் இருக்குமென்று சொன்னார்கள். என்னைப் போன்ற கூட்ட அலர்ஜியுள்ள ஆட்களுக்கு இது எரிச்சலூட்டும் இடம். இல்லை புடவை வாங்குகிறேன். வளையல் வாங்குகிறேன் என ஷாப்பிங் ஐடியா உள்ளவர்களுக்கு இது சுவாரஸ்யமான இடம். 

       @@@@@@@@@@@@@@@@@@@
       தொட்டால் தொடரும்படத்திற்காக ஒரு சாப்ட்வேர் கம்பெனி செட்டப் பத்து நாட்களுக்கு தேவை இருக்கிறது. இங்கேயிருக்கும் சாப்வேர் கம்பெனிகளின் வாடகையைக் கேட்டால் மல்டி க்ரோர் படம்தான் எடுக்க முடியும் போல. ஒவ்வொன்றுக்கும் வெளியே எடுத்தால் சில லட்சம். உள்ளே எடுத்தால் பல லட்சம் என்கிறார்கள். ராமோஜி பிலிம் சிட்டியில் ஒரு செட்டப் இருப்பதாய் சொன்னார்கள் அதை பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். 1800 ஏக்கருக்கு மேல் பரவியிருக்கிறது இந்த பிலிம் சிட்டி. அநேகமாய் ஆசியாவின் பெரிய பிலிம் ஸ்டூடியோ என்று நினைக்கிறேன். வித விதமான செட்டுகள் இருக்கிறது. எல்லாவற்றையும் நாம் பல படங்களில் பார்த்து சலித்த இடங்களாகவே இருக்கிறது. நாங்கள் போன ரெண்டு நாளும் ஒரே ஒரு ஷூட்டிங் தான் நடந்து கொண்டிருந்தது. அதுவும் அவர்களுடய ஈடிவி சேனலுக்கான ஷுட்டிங்.  அந்த செட்டுக்களை மீண்டும் உயிர்பிக்க நம் ஆர்ட் டைரக்டர்களின் கைங்கர்யங்கள் நிறைய தேவை படுமென தோன்றுகிறது. பார்ப்போம்.கப்பர்சிங் படத்தில் வரும் ஒரு கிராம செட் மொத்தமும் அங்கேயே போட்டிருந்தார்கள். நண்பர்களே உங்களுக்கு தெரிந்த சாப்ட்வேர் கம்பெனிகள் இருந்தால் கொஞ்சம் கேட்டுச் என் மெயிலுக்கு தெரிவியுங்கள்.
       @@@@@@@@@@@@@@@@@@@@@@@@
       ப்ளாஷ்பேக்

       @@@@@@@@@@@@@@@@@
       ஜாதகம் வைத்து ஜோடிப் பொருத்தம் பார்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது நம்ம ஜோடி நம்மளைத் தவிர வேற எவனோ(ளோ)டயாவது லிங்க் வச்சிக்குமாங்கிறதை வீட்டிலிருந்தபடியே செக் பண்ண ஒரு விஷயத்தை கண்டு பிடிச்சிருக்காங்களாம். பார்ட்னரோட முடியை எடுத்து யு.எஸ்.பி மாதிரியான ஒரு விஷயத்துல வச்சி லேப்டாப்போட கனெக்ட் பண்ணிட்டம்னா தெரிஞ்சுரும்னு  ஆஸ்திரேலியா யூனிவர்சிட்டியில பயாலஜிஸ்டா வேலை பாக்குற மைக்கேல் கில்லிங்குங்குறவரு சொல்லியிருக்காரு. டி.என்.ஏவிலிருக்கும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டரான ஆக்ஸிடோசின் தான் உறவுகளிடையே ஆன கமிட்மெண்டுக்கானதாம். சாதாரணமா சந்தேகப் பட்டாலே குடும்பத்துல கும்மாங்குத்தாயிரும். இதுல நிச்சயம் இவ(ன்) எதிர்காலத்துல பண்ணுவாங்கிற மாதிரி கிளப்பிவிட்டா என்னாவாகும்டா சாமி.
       @@@@@@@@@@@@@
       அடல்ட் கார்னர்
       Virginity is like a Balloon, one prick and it's gone for ever...!
       கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Cinema Virumbi said...

கேபிள் சார்,

அது 'Lakdi ka pul' , மரத்தாலான பாலம்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Prabhu said...

Thala...for the software company setup, what kind of area you are looking at square feet-wise?

SNR.தேவதாஸ் said...

படிப்பதற்கு சுவராசியமாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Jey said...

//எலலாம் காங்கிரஸ் ஆட்சி செய்த கோலம்//
adra adra adra..neenga mumbai pakkam elaam ponathe kidayaathu pola...'99-la irundhu anga congress aatchi thaan...innamum auto ange meter thaan

intha motta thalaikkum mulangaalukkum mudichu podratha vituttu jora pre production vela paarunga saar

buvan said...

இன்று ஒர் முக்காலடி கல்லின் மேல் ஒரு பக்க வீலை ஏற்றி ஆட்டோவை குடை சாய்க்க பார்த்தான். நல்லவேளை தூக்கிய பக்கம் ஜம்ப் செய்து பிழைத்தேன்
எறி இறங்கியதும் எதுவுமே நடக்காதது போல வண்டி ஒட்டிய ஆட்டோ ட்ரைவரின் நடிப்பு பிரமாதம்//

varum aana varaathu.....thambi neenga MGR madiri suma thaka thaka-nu minreenga......... MGR Madiri irukanu-nu sonane appave nan sudarichi iruka koodatha.....?

குரங்குபெடல் said...

Saidhai to ஹைதை . . .


Book Ready . . .


Heeee . . ..

A Simple Man said...

how abt vijay tv office serial set ?