Thottal Thodarum

Jul 12, 2013

Lootera

 
காதல் என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம். அந்த அனுபவத்தை ஆராயக்கூடாது அனுபவிக்கணும் என்பது என் திடமான எண்ணம். ஆனால் காதல் கொடுக்கும் கிளர்ச்சியும், சோகமும், சந்தோஷமும் நிச்சயம் காதலை உணர்ந்த எல்லோருக்குமே பொதுவானது என்பதை மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதைதான் இந்த லூட்டேரா. 


சோனாக்‌ஷி ஜமீந்தாரின் மகள். அழகி. நில உச்சவரம்பு சட்டம் அமலாக்கத்தினால் ஜமீன் தாரின் அதிகாரங்களும், நிலங்களும், வெள்ளையர்கள் கொடுத்தையெல்லாம் அரசு எடுத்துக் கொள்ள ஆர்டர் வர, தன் நிலத்தில் பழம்பெரும் பொக்கிஷம் ஒன்று இருப்பதை புரிந்து கொண்ட ஜமீந்தார் தொல்பொருள் ஆராய்ச்சியாளனாய் வரும் ரன்வீரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். சோனாக்‌ஷியை பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்ள, அவரும் இவர் மேல் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் கொள்கிறார். அந்த காதல் அவர்களுக்குள் நெருக்கமான உறவாக மாறிய அடுத்த நாளில் ஒர் அதிர்ச்சி காத்திருக்கிறது சோனாக்‌ஷிக்கும் அவரது அப்பாவுக்கும். அது என்ன? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.
படத்தின் மிகப் பெரிய பலம் மேக்கிங். பதட்டப்படாமல் மெல்ல நம்மை கதையுனுள் நுழைக்கும் வித்தை. சோனாக்‌ஷியின் மேல் காதல் கொள்ள வைக்கும் வித்தை. அவள் சிரித்தாள் நாமும் சிரிக்கிறோம், அவள் அழுதாள் அழுகிறோம். அவளுக்கு வீசிங் வந்தால் நமக்கு பதட்டமாகிறது. இப்படி அவளை நாம் காதலிக்க ஆரம்பிக்க எல்லா பிரயத்தனங்களும் மேக்கிங்கில் கொண்டுவந்துவிட்டபடியால் அவளின் வலியையும் நம்மால் உணர முடிகிறது. காதலன் ஏமாற்றிவிட்டான் என்பதை தன்னை அவனிடம் இழந்த அடுத்த நாள் உணரும் போது அவளுக்குள் இருக்கும் வலியை படம் பார்க்கும் நமக்கு இந்த ஸ்லோ பேஸ்டு மேக்கிங்கினால்தான் கொடுக்க முடியும். அதிலும் ஆற்றங்கரையில் சோனாக்‌ஷியும் ரன்வீரும் பேசிக் கொள்ளும் காட்சி கவிதை.  அவள் கண்களில் தெரியும் காதலைப் பாருங்கள் வாவ்.. ரன்வீரின் நிராகரிப்பினால் அவளுக்கு கிடைக்கும் வலியை அவர் வெளிப்படுத்திய விதம் க்ளாஸ். சோனாக்‌ஷியை படம் முடிந்து வெளியே வந்தாலும் நம்மால் மறக்க  முடியாது.

ஆனால் அதே இம்பாக்ட் ரன்வீரிடம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்றே சொல்ல வேண்டும். ரன்வீர் அவளை ஏமாற்ற வரவில்லை நிஜமாகவே காதல் கொண்டவன் எனும் போது அந்தக் காட்சிகளில் அவனது உணர்வுகளை அருமையாய் வெளிப்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் கொண்டு வரவில்லை என்பது மைனஸ்.

படத்தின் மிகப் பெரிய பலம் நடிகர்களைத் தாண்டி, லொக்கேஷன்கள். ஆர்ட் டைரக்‌ஷன் என்று டெக்னிக்கலாய் லிஸ்ட போய் கொண்டேயிருக்க,, அதில் இரண்டு பேர் டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒளிப்பதிவாளர் மகேந்திர ஷெட்டியும், இசையமைப்பாளர் அமித் திரிவேதியும்தான். சோனாக்‌ஷிக்கு வீசிங் ப்ராப்ளம் வந்த காட்சியில் அவளை நாடகம் நடக்குமிடத்திலிருந்து அவளின் அப்பா கூட்டி வரும் காட்சியில் ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் ஸ்கோர் செய்ய ஆரம்பித்ததிலிருந்து, இடைவேளைக்கு முன் ரன்வீர் புராதான சிலையை திருடிக் கொண்டு போய்விட்டதை உணர்ந்து சோனாக்‌ஷியின் அப்பா அலையும் காட்சியில் வரும் பின்னணியிசை வாவ்.. க்ளாஸ்.. படம் பார்த்துவிட்டு வெளியே வந்து ரெண்டு நாளாகியும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எங்கே தேவையோ அங்கே சரியாய் பின்னணியிசையை கொடுத்திருக்கிறார்.
இது காதல் கதை. இந்தக் கதையை மெல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் டெம்போ ஏற்ற வேண்டுமென்ற முடிவோடு காட்சிகளை அமைத்திருப்பதும். மிக நுணுக்கமான காட்சிகள். உணர்வின் வெளிப்பாடு. முக்கியமாய் சோனாக்‌ஷியின் தனிமை. அவள் மனதில் இருக்கும் இருள் எல்லாவற்றையும் காட்சிகளாய் சிறப்பாக வெளிப்படுத்திய திரைக்கதைக்கு ஒரு சபாஷ். இரவில் கார் பஞ்சராகிவிட, காரில் சோனாக்‌ஷிக்கு மீண்டும் வீசிங் வந்துவிட, அவளுக்கு இன் ஜெக்‌ஷன் போட்டுவிட்டு, ஆசுவாசப்படுத்தி காரைக் கிளப்பும் காட்சியில் சோனாக்‌ஷி ரன்வீரின் மேல் சாய்ந்து கொள்ள, அந்த சாய்வை ரன்வீர் நெருக்கமாய் உணரும் காட்சி. என குட்டிக்குட்டியாய், கவிதையாய் நிறைய காட்சிகள். ஆனால் இவ்வளவு மெனக்கெட்டது எல்லாம் இரண்டாம் பாதியில் அப்பாவை இழந்து, காதலனால் ஏமாற்றப்பட்டு, தனிமையில் வாடும் சோனாக்‌ஷியைத் தேடி ரன்வீர் திரும்பி வந்தது வேண்டுமானால் சுவாரஸ்யமாய் இருக்கலாம். அதற்காக அமைத்த திரைக்கதை ஒட்டவேயில்லை. அற்புதமான முதல் பாதிக்காக என் சொத்தில் பாதியை கொடுக்கத் தயார்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

maithriim said...

just now was talking to my son about the same movie and he was also telling how rare such good movies come now a days. Good review. I should see the movie.

amas32

குரங்குபெடல் said...


அற்புதமான முதல் பாதிக்காக என் சொத்தில் பாதியை கொடுக்கத் தயார்.கீழ் கண்ட முகவரிக்கு . .

ஒரிஜினல் சொத்து டாகுமேண்டுகளை

அனுப்பி வைக்கவும்

Krishna Bungalow, Plot 26, Jvpd Scheme, Gulmohar Cross Road 5, Juhu, Mumbai - 400049

arul said...

Ji,

Please see my new short film and comment.

Tharkolai padai (Suicide Bomber)

https://www.youtube.com/watch?v=VXwno1fK-70

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...
இதுக்காக சொத்தில் பாதி கொடுக்க வேண்டாம்...

Unknown said...

Atputhamana vimarsanm.ungal vimarsanema padathai parkka thundugirathu....