Posts

Showing posts with the label பிட்

”பிட்” உலகம்

Image
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் “பிட்” படங்கள் என்று அழைக்கப்படும் “சாப்ட் ஃபோர்ன்” வகையறா படங்களுக்கு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ, இருக்கத்தான் செய்கிறது. என்பதுகளில் தான் இம்மாதிரியான படங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது. அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான சப்ளையர்களாக இருந்த்து. “அவளோட ராவுகள்” படம் என்னவோ நல்ல படம் தான் ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால், சென்னையின் முக்கிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று நினைக்கிறேன். அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம், என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த திரை உலகை காப்பாற்றி கொண்டிருந்தது இம்மாதிரியான படங்கள் தான். பல தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள் தான. சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே  அடிப்படையாய் கொண்டு தயாரிக்கப்படும் இம்மாத...