அனைவரும் வருக.. அகநாழிகை புத்தக கடை
ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற வேண்டுமென்றால் அத்தொழிலின் மேல் அதீத ஈடுபாடும், காதலும் வேண்டும். அப்படித்தான் நான் சினிமா மீதான அதீத ஆர்வத்தில், காதலில் இருபது வருடங்களுக்கு முன் நான் ஆரம்பித்த தொழில் வீடியோ கேசட் பார்லர். இன்ஜினியரிங் படித்துவிட்டு பார்ட்டைமாக டோர் டெலிவரியில் வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விட ஆரம்பித்த தொழில் மெல்ல, வளர்ந்து பார்லாராய் மாறியது. மிக நன்றாக போய்க் கொண்டிருந்த காலத்தில் பார்ட்னர்களிடையே கொஞ்சம் பிரச்சனை வர, மீண்டும் அதே ஏரியாவில் வீடியோ கடையை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அண்ணாமலை ரஜினி கணக்காய் இதே ரோட்டில் கடை ஆரம்பித்து வென்று காட்டுவேன் என்ற சபதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட தொழில். வெறும் நம்பிக்கை மட்டும் என்ன இந்த சபத்தத்தை போட வைக்கவில்லை. அதற்கான அடிப்படை விஷயங்களிலிருந்து ரசனை வரை என்னை நான் வளர்த்துக் கொண்ட திமிர் என்றும் கூறலாம். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரு படத்தை எடுக்கும் முன் அதைப் பற்றி சின்னதான் ஒரு சில தகவல்கள், தொடர்ந்து அவர்கள் பார்க்கும் படங்கள் மூலமாய் அவர்களின் ரசனை அறிந்து நான் சிபாரிசு செய்யும் படங்கள். அ...