Posts

Showing posts with the label ஸ்வீட்ஸ்

சாப்பாட்டுக்கடை - ஞானமதுரா ஸ்வீட்ஸ் & ஹோம்லி மீல்ஸ்

Image
சில வருடங்களுக்கு முன் வளசரவாக்கத்தில் 6 அத்யாயம் அலுவலகம் ஆரம்பித்த நேரத்தில், பெரும்பாலும் வாயில் வைக்க வழங்காத டீயைத்தவிர வேறேதும் கிடைக்காது. அப்போதுதான் இவர்களது கடையை பார்த்தேன். மாலை நேரங்களில் சூடான பில்டர் காபி, வடை, பஜ்ஜி, போண்டா, மிளகாய் பஜ்ஜி, ஜவ்வரசி வடை, வாழைப்பூ வடை, கத்திரிக்கா, உருளை பஜ்ஜி, கேரட் அல்வா, காசி அல்வா, மிளகாய் பொடியில் பிரட்டி ஊறிய இட்லி, சாம்பார் சாதம், தளதள வத்தக்குழம்பு சாதம், ரசம் சாதம், சமயங்களில் நல்ல கெட்டி தயிர் ஊற்றிய புளிக்காத தயிர்சாதம் என  நாக்கில் எச்சிலூற வைக்கும் அயிட்டங்களை வரிசைப்படுத்தி டிஸ்ப்ளே செய்திருந்தார்கள். அந்தந்த பண்டிகை சீசன்களில் அந்ததந்த பலகாரங்கள் இவர்களுடய ஸ்பெஷாலிட்டி காரடையான் நோன்பின் போது, வெல்லம், உப்பு குழக்கட்டைகள், தினசரி பருப்பு, தேங்காய் போளி, பிள்ளையார் சதுர்த்தி வெல்லக் குழக்கட்டை தினசரி கிடைக்கும். கொஞ்சமே கொஞ்சம் மாவு திக்காய் இருந்தாலும் உள்ளே பூரணம் அட்டகாசமாய் இருப்பதினால் நோ ரெக்ரெட்ஸ். சமயங்களில் நன்றாக தயிரில் மட்டுமே ஊறவைக்கப்பட்ட தயிர் வடை. அதன் மேல் லேசாய் தூவின காராபூந்தியோடு வைத்திருப்ப...