கொத்து பரோட்டா 2.0-46
Fidaa ஃபிதா. பிரேமத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மலர் டீச்சர் சாய் பல்லவி தான் நாயகி. வழக்கம் போல ஸ்ட்ராங்கான ஹீரோயின் கேரக்டர். அன்பான அப்பா, குடும்பம், வேல்யூஸ், அன்பு பாசம், சின்னச் சின்ன நெகிழ்வுகள், கோபங்கள் என புதியதாய் ஏதுமில்லாத சேகர் கம்மூலாவின் களம் தான். பட்.. அதை மிக அழகாய் கட்டவிழ்த்த விதம், சாய் பல்லவியின் துள்ளலும், கொண்டாட்டமுமான நடிப்பு. வருண் தேஜ் எனும் அழகன். இயல்பான, ஆடம்பரமில்லாத ஆண்மை. அழகான விஷுவல்ஸ், ஸூத்திங் இசை என நம் மனதை ஃபிதா ஆக்கி விடுகிறது. மனைவியை இழந்த அண்ணன் மீண்டும் திருமணம் செய்ய எண்ணி, கிராமத்து பெண்ணை பார்க்க வருகிறான். பார்த்த மாத்திரத்தில் பெண்ணை பிடித்தாலும், தன் தம்பி வந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்ல, “அதென்ன தம்பி பார்த்து சொல்லுறது என்ற காண்டாகிறாள் தங்கையான சாய் பல்லவி. தம்பி வருண் தேஜை ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க ஆரம்பிக்குமிடத்திலிருந்து இருவருக்குமான லடாய், ஊடல், மெல்ல கல்யாணத்தின் போது ட்ரான்பர்மேஷனாகும் காதல். முக்கியமாய் கல்யாண வீட்டில் சாய்பல்லவி போடும் ஒரு க்யூட் ஆட்ட பாட்டில் இருவருக்குமான ரியாக்ஷன்க...