Posts

Showing posts with the label ladam

லாடம் - திரை விமர்சனம்

Image
கொக்கிக்கு பிறகு கொஞ்சம் வித்யாசமான மேக்கிங் உள்ள படங்களையே அளித்து வந்த பிரபு சாலமனின் அடுத்த படம். சென்ற படஙக்ளை போலவே வித்யாசமான ஒரு கதை களத்தை எடுத்து கொண்டிருக்கிறார். ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணீயத்த்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு போக, பாவாடை சாமியின் எதிரியான வேம்புலி பாவாடையின் மகனை போட்டு தள்ளிவிட, வேம்புலியை அழிக்க பாவாடையால் அனுப்பப்படும் ஆட்கள் எல்லாம் இறந்து போய் போட்டோவாக வர, தன் ஓட்டை வாயால் ஐடியா கொடுக்கிறேன் பேர்விழி என்று நம்ம குஞ்சிதபாதம் மூளையை யூஸ் பண்ணனும் என்று எதையோ சொல்ல, 16 நாளுக்குள் தன் எதிரி வேம்புலியை அவன் தான் கொல்ல வேண்டும், அப்படி கொல்லாவிட்டால் 17 அவனுக்கு பால் என்கிறான். அடுத்த நிமிஷமே எதிர் வீட்டு வேம்புலியிடமும் மாட்டி விடுகிறான். வேம்புலி அவனை உயிரோடு புதைக்க, அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் வேம்புலியின் மகனை கொன்றானா..? இடையில் அவனுக்கு சார்மிக்கு ஏற்படும் காதல் என்னவாயிற்று என்பதை போன்ற பல கேள்விகளுக்கு, பல சமயம...