சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம். என்கிற தாரக மந்திரத்தை சொல்லி மீண்டும் ஓட்டு கேட்கிறது திமுக. இவர்கள் என்னத்தை சொன்னார்கள், என்னத்தை செய்தார்கள் என்று கேட்பவர்கள் நிறைய பேர். சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, இலவச டிவி, கேஸ்ஸ்டவ், இலவச மனை, என்று ஆரம்பம் எல்லாமே நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாவிதமான விநியோகங்களிலும் குளறுபடி, இந்த கலர் டிவி விஷயத்துல பல பிரச்சனை வந்து கடைசியா ரேஷன் கார்டு வச்சிருக்கிற எல்லாருக்கும் டிவினு சொல்லியிருக்காங்க.. ஆனா எத்தனை பேருக்கு இது வரைக்கும் கொடுத்திருக்காங்கன்னு சரியா சொல்ல முடியல.. ஏன்னா எனக்கு தெரிந்து பல பேருக்கு கலர்டிவி கொடுக்கவேயில்லை ரேஷன் கார்டு இருந்தும். கேட்டா அதுக்கு சரியான பதிலில்லை. அடுத்து கேஸ் ஸ்டவ் பல பேருக்கு கொடுக்கபடவேயில்லை. சரி இதெல்லாம் நம்ம சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள். இவர்களுடய ஆட்சி இன்னும் சில ஆண்டுகாலம் இருப்பதால் அதற்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்று நம்புவோமாக. ஆனால் கலைஞர் அரசு தனது சுயநலத்துக்காக போடப்பட்ட சட்டங்கள் எத்தனை.. அவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் அதாவது தனி தியேட்டர்களில் அதிகபட்ச...