Posts

Showing posts with the label film

வில்லு - திரைவிமர்சனம்

Image
பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.. போக்கிரி காம்பினேஷன்.. அதனால் எதிர்பார்ப்பும் அதிகம். வழக்கமான பார்முலா பழிவாங்கல் கதை. பில்லா போல ஸ்டைலாய் படமெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஆனால் பாவம் அவுட்புட்தான் சரியில்லை. தேசதுரோகியின் மனைவி என்று நெற்றியில் பச்சை குத்தப்பட்ட தன் தாயின் பழியையும், தன் தந்தையை கொன்ற பழியையும், பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை. முதல் பாதியில் எதோ ஜேம்ஸ்பாண்ட் பட கணக்காய் பயங்கராமாய் பில்டப் செய்திருக்கிறார்கள். வடிவேலு, விஜய், நயந்தாரா.. கல்யாண வீடு காம்பினேஷன் சூப்பர். அருமையாக க்ரியோகிராப் செய்யப்பட்ட காட்சிகள். அனால் தனியே வடிவேலு செல்ப் எடுக்கவில்லை. அதிலும் மாடுடன் சண்டையிடும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பதிலாய்.. கடுப்பையே ஏற்றுகிறது. நயந்தாரா.. அழகாய் இருக்கிறார். கவர்ச்சியாய் இருக்கிறார். ரொம்பவும் ஒடிசலாகாமல் இப்போது கொஞ்சம் பூசினார் போல் இருக்கிறார். ம்ஹூம் நமக்கில்லை. அவருக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார். விஜய்.. சில காட்சிகளில் அழகாய் இருக்கிறார், சண்டை போடுகிறார்....

எ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)

Image
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களை படித்திருக்கிறீர்களா? ஹிட்காக் படங்களை பார்த்து பேயறைந்தார் போல் இருந்திருக்கிறீர்களா? விரல் நகங்களை கடித்தபடியே ஓரு முழு படத்தையும் டென்ஷனுடன் பார்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் இதோ இங்கே ஓரு “ஜானி கத்தார்” கத்தார் என்றால் “துரோகி” என்று அர்த்தம் என நினக்கிறேன்..( எதோ எனக்கு தெரிந்த இந்தியில்) ரொம்ப சிம்பிளான கதை.. கதையின் நாயகன் விக்ரம். அவனுக்கு வெகு விரைவில் பணக்காரனாவதற்கு ஆசை. அவனுக்கு காதலி வேறு இருக்கிறாள். அவள் வேறு யாருமில்லை விக்ரமுடய பார்ட்னர் ஷர்துலின் மனைவி தான். ஷர்துல் ஓரு டிஸ்கோ பார் நடத்தி வருபவன். இவர்களின் இன்னொரு பார்ட்னர் ப்ரகாஷ் சூதாட்ட கிளப் வைத்து நடத்துபவன்.அவன் ம்னைவி ஓரு பூயூட்டி பார்லர் வைத்து நடத்துகிறாள். இன்னொரு பார்ட்னர் ஷிவா.. இளைஞன், பலசாலி, பாடிபில்டர். இவர்களுக்கெல்லாம் தலைவன் சேஷாத்திரி. வயதானவர், இறந்து போன மனைவியின் குரலை தினம் தினம், டேப் ரிக்காடரில் போட்டு கேட்டபடி இருப்பவர்.. புத்திசாலி.. இம்மாதிரியான கெட்ட காரியங்களில் அனுபவசாலி.. மற்றவர்கள் இவரை பார்த்தால் மரியாதையும், ப்யமும் உண்டு. ஷேசாத்திரியின் நண்பன் ப...

காதலில் விழுந்தேன் - விமர்சனம்

Image
காதலில் விழுந்தேன் என்கிற படத்தின் தலைப்பை பார்த்த்துவிட்டு ஓரு அழகிய காதல் கதையை எதிர்பார்த்தீர்களானால...உங்களுக்கு ஏமாற்றமே. குணா, 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன், ஒண்டரி(தெலுங்கு) போன்ற பல படங்களின் பட்டறையே காதலில் விழுந்தேன். சபாபதி வீல்சேரில் மீராவை வைத்துக் இருளில் தள்ளிக் கொண்டு தப்பி ஓடி ஊட்டிக்கு போகும் ரயிலில் வித்அவுட்டில் அந்த வீல் சேருடன் காதலியை தூக்கிக் கொண்டு ஏறும்போதே அட என்று நாமும் ஏறுகிறோம். சபாபதி மீராவை டிரையினில் படுக்க வைத்துவிட்டு தன்னுடய காதல் கதையை டி.டி.ஆர். லிவிங்ஸ்டனிடம் சொல்ல ஆரம்பிக்கிறார். எவ்வளவு அமெச்சூர் தனமான காதல் காட்சிகள். நடிகர்கள் நடிக்க முடியாமல் இருக்கும் இடத்தில் எல்லாம் எடிட்டர் வி.டி.விஜயன் தன் திறமையை காட்டியிருக்கிறார். ப்ளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்து 6வது காட்சியில் காதல் வந்துவிடுகிறது. சரி அடுத்து என்ன என்ற கேள்வி எழும் முன்னே மீராவிடம், சபாபதி முத்தம் கேட்க, நீ புட்பால் மேட்ச் பைனல் விண் செய்தால் தருவேன் என்று சொல்லிவிட்டு பஸ் ஓடும் முன்பு ஓரு கிஸ் அடிக்கிறார். (அப்படி ஓண்றும் சொல்லிக்கொள்ளும்படியான கிஸ் இல்லை). புட்பால் மேட்ச் ஜெயித்...

காமெடி டைம்

Image

எ.த.வ.கூ.படம் - TEETH (அந்த இடத்தில் பல்)

Image
வாலிப, வயோதிக அன்பர்களே...இந்த பதிவை படிக்க,நல்ல நகைச்சுவை உணர்வும்,சகிப்புதன்மையும் தேவை.. அதனால்..உங்களூக்கு 10 எண்ணுகிறேன்.. 1,2,3,4,5,6,7,8,9,10...அவ்வளவுதான் கவுண்ட்டவுன் க்ளோஸ்...சொல்லலன்னுசொல்ல கூடாது..(சுஜாதா) ஆம் நீங்கள் நினைக்கும் “அந்த” இடத்தில் தான் .. அந்த இடத்தில் பல் இருந்தால்.. ??? அப்படி ஓரு பெண்ணிற்கு இருக்க, அதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை. பிறந்ததிலிருந்தே அவளுக்கு அந்த பிரச்சனை இருக்கிறது. அவளது ஸ்டெப் பாதரின் மகனும், அவளும் சிறு குழந்தைகளாய் இருக்கும் போது பாத்டப்பில் குளிக்கையில் “நி உனதை..நான் எனதை’ விளையாட்டாய் காட்ட, அந்த இடத்தில் கைவைக்கும் பையன் விரல் கடிபடுகிறது. (கவலைபடாதீர்கள்.. எந்த விதமான செக்ஸூவல் காட்சியமைப்பும் இல்லாத ஓரு செக்ஸ், காமெடி,படம். வளர்ந்து பெரியவளாகும் அவளுக்கு ஓரு குழுவின் உந்துதலால் தன் கன்னிதன்மையை,ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் என்ற எணணத்தில் இருக்க, அங்கே.. பழகும் ஓரு பையனை பிடித்து போக..ஓரு சுபயோக சுபதினத்தில்... ஓரு அழகிய அருவின் மடியில் மிக ரொமாண்டிக்கான ஓரு இடத்தில் அற்புதமான லொகேஷன், அவர்கள் இருவரின் தவிப்பும், நடிப்பும் அருமை...

விபத்துகள் பலவிதம்

விபத்துககள் பலவிதம்- அதில் இதுவெல்லாம் ஓரு விதம்

பொய் சொல்ல போறோம் - விமர்சனம்

Image
இந்தியில் வந்து ஹிட்டான “கோஸ்லா கா கோஸ்லா” என்ற படத்தின் ரீமேக் தான் நம்ம பொய் சொல்ல போறோம். படத்தின் முதல் காட்சியிலேயே இது ஓரு காமெடி படம் என்பதை உறுதிபட கூறுகிறார்கள். அதனால் ஏன் எப்படி என்று லாஜிக் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் பிடிக்கும் ஹீரோ கார்திக் ஓரு சாப்ட்வேர் இன்சினியர். அவரது தந்தை நெடுமுடிவேணு ஓரு ரிடயர்ட் எ.ஜி.எஸ் ஆபிஸர்.(ஓரு சமயத்தில் தான் என்ன வேலை செய்தேன் என்பதை அவர் ஒரு ரவுடிக்கு விளக்க அவன் எல்லாம் புரிந்தது போல் தலையாட்டி பக்கத்து ரவுடியிடம் சீரியஸாக” வாத்தியாராம்” என்று சொல்வதை பார்த்துவிட்டு நெடுமுடி வேணுவின் ரியாக்‌ஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.) அவர் ஓரு நிலத்தை ஹனிபாவின் மூலம் தன் சேவிங்ஸ் அத்த்னையும் போட்டு வாங்குகிறார். அதில் தன் கனவு இல்லத்தை கட்ட நினைக்கிறார். ஆனால் வீட்டை கட்ட பூமிபூஜை போடப் போகும்போது அந்த இடத்தில் சுவர் ஏற்றி அந்த இடம் பேபி என்பவருக்கு சொந்தமானது என்று போர்டு மாட்டப்பட்டு இருக்க, அதுக்கு ஓரு சுனாமி ரவுடி காவலாய் இருக்கிறான். அந்த இடம் அவருக்கு மீண்டும் வேண்டுமானல் மேலும் பதினைந்து லட்சம் பணம் கேட...

எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்-?

Image
மும்பை மேரி ஜான். 11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்". இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ,பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார். அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பா...