Posts

Showing posts with the label சைதை

சாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந்தி பவன்.

என்னடா இது கடைக்கு பேரே இதுதானா? என்று யோசிக்கிறீர்களா? என்ன செய்வது கடைக்காரர் இன்னும் பெயர் வைக்கவேயில்லை என்கிறார். கடந்த சில வருடங்களாய் எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் ஒரு ப்ளாட்டின் மதில் சுவரை ஒட்டி சின்ன டிபன் கடை முளைத்தது. ஆரம்பத்தில் வியாபாரம் கொஞ்சம் சுணக்கமாகவே நடந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் சுறுசுறுப்பானது.  நானும் ஒரு நாள் அங்கே சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பேன் ஏனோ அது நடக்காமலேயே இருந்தது. அதற்கு முதல் காரணம் அவர்கள் காலை டிபன் மட்டுமே அங்கே செய்கிறார்கள். காலை சிற்றுண்டி எனக்கு எப்போதுமே என் வீட்டில் தான். எனவே தான் அவர் கடையில் சாப்பிட வாய்க்காமல் இருந்தது.  

சாப்பாட்டுக்கடை - மகாலட்சுமி மெஸ்

Image
நானும் கே.ஆர்.பியும் ஒரு வாரம் முன்பு சைதை ஜோன்ஸ்ரோடு வழியாய் சப்வேயில் இறங்காமல் இடது பக்கம் ஒரு சின்ன ரோட்டின் வழியே போனால் அரங்கநாதன் சப்வேவுக்கு போகலாம் என்ற அந்த சூடியம்மன் பேட்டைக்கு போகும் சிறு ரோட்டில் நுழைதோம். இரவு நேரம் வேறு சாப்பிட வேண்டும் என்று நினைத்தபடி வண்டியை விட, நல்ல வாசம் ஒன்று வந்தது. குருமா வாசனை. வண்டி தானாகவே ஆப் ஆகிவிட, திரும்பிப் பார்த்தேன் மகாலட்சுமி மெஸ் என்று போர்டு இருந்தது.