Posts

Showing posts with the label தொட்டால் தொடரும்.

கொத்து பரோட்டா -19/01/15

Image
தொட்டால் தொடரும் ஜனவரி23 ஆம் தேதி முதல் தொட்டால் தொடரும் தமிழகம், கர்நாடகம், கேரளா, மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் வெளியாகிறது. யாருடா மச்சான்?” பாடல் எக்ஸ்க்ளூசிவாய் இசையருவில் தொடர்ந்து ஒளிபரப்பாகி படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேரன் மற்றும் திரையுலக நண்பர்களின் கருத்தோடு வெளியான வீடியோக்கள், சில சினிமா மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டு ரெண்டொரு நாட்களுக்கு பிறகு அவர்களின் எண்ணத்தில் என்ன உள்ளதோ அப்படியே அதை ஒரு செல்பி வீடியோவாக அனுப்பச் சொன்னேன். நல்ல வரவேற்பு அவர்களிடத்திருந்து. அதே வரவேற்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களாகிய உங்களிடமிருந்தும் வருமென்று நம்புகிறேன். கிட்டத்தட்ட கமல்ஹாசனின் வசனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். :) @@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 22/12/14

நடு நிசிக்கதைகள் செ ன்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய்விட்டு அசோக்நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு செக் போஸ்டை உருவாக்கியிருந்தார்கள். வழக்கமாய் உதயத்திற்கு முன் தான் நிற்பார்கள் இப்போது திடீரென இடத்தை மாற்றி, நின்றிருக்க, எனக்கு அப்போதுதான் திடீரென ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்ற நியாபகம் வர, எஸ்பிஐ ஏடி எம் ஒன்றிருக்க வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். பின்னாடியே போலீஸ் கான்ஸ்டபிள் மூச்சிரைக்க ஓடிவந்தார். “அலோ.. எங்க போறீங்க? வாங்க இங்க.. தண்ணியடிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ” இல்லை” என்றதும் அவர் முகம் வாடி வதங்கி விட,  ” நான் ஏடிஎம்முக்கு போறதுக்காக,  வண்டிய இங்க நிறுத்தினேன்.  ஸ்பாட்டுல நின்னு வண்டியை பிடிக்கிறத பாருங்க. அத்தோட தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னுதான் ரூல்ஸ்.. நான் வண்டிய நிறுத்திட்டு நிக்கிறேன். என்ன?.’ என்றதும் அவர் முகம் போன போக்க பார்க்கணுமே.. ஆயிரம் கண் வேண்டும்.  @@@@@@@@@@@@@@@@@