Thottal Thodarum

Dec 22, 2014

கொத்து பரோட்டா - 22/12/14

நடு நிசிக்கதைகள்
சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய்விட்டு அசோக்நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு செக் போஸ்டை உருவாக்கியிருந்தார்கள். வழக்கமாய் உதயத்திற்கு முன் தான் நிற்பார்கள் இப்போது திடீரென இடத்தை மாற்றி, நின்றிருக்க, எனக்கு அப்போதுதான் திடீரென ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்ற நியாபகம் வர, எஸ்பிஐ ஏடி எம் ஒன்றிருக்க வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். பின்னாடியே போலீஸ் கான்ஸ்டபிள் மூச்சிரைக்க ஓடிவந்தார். “அலோ.. எங்க போறீங்க? வாங்க இங்க.. தண்ணியடிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ” இல்லை” என்றதும் அவர் முகம் வாடி வதங்கி விட,  ” நான் ஏடிஎம்முக்கு போறதுக்காக,  வண்டிய இங்க நிறுத்தினேன்.  ஸ்பாட்டுல நின்னு வண்டியை பிடிக்கிறத பாருங்க. அத்தோட தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னுதான் ரூல்ஸ்.. நான் வண்டிய நிறுத்திட்டு நிக்கிறேன். என்ன?.’ என்றதும் அவர் முகம் போன போக்க பார்க்கணுமே.. ஆயிரம் கண் வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@



 சினிமா பற்றிய நிகழ்ச்சியில் பெரும்பாலும், படங்களின் வசூல் பற்றி தப்பும் தவறுமாய் தகவல் கொடுக்கிறார்கள். பல முறை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகும் போது, அடுத்த முறையாவது கொஞ்சம் சரியான நபர்களிடம் தகவல் கேட்டுப் பெறுங்கள் என்பேன். இவர்கள் மட்டுமில்லாது பெரும்பாலும் பல சேனல்கல் தகவல்களுக்காக பெரிதும் மெனக்கெடுவது இல்லை. இண்டர்நெட்டிலிருந்து அங்கே போட்டிருப்பதுதான் நிஜமென செய்தியாக்கி விடுகிறார்கள். சமீபத்தில் ஒரு ரேடியோவில் மாலை நேரத்து ட்ராபிக் ஜாம் விஷயங்களை எப்படியும் இந்த இடங்களில் எல்லாம் சாயங்காலத்தில் ட்ராபிக்காக இருக்குமென தெரிந்து, பொத்தாம் பொதுவாய் மதியம் மூன்று மணிக்கே ரிக்கார்ட் செய்துவிட்டு போவது போல, டெம்ப்ளேட் விஷயங்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. மெனக்கெடாமல் ஜெயிக்க முடியாது . அதிலும் முக்கியமா செய்தி சேனல்களுக்கு இன்பர்மேஷன் எக்ஸ்க்ளூசிவாகவும், உண்மையாகவும் இருப்பது கட்டாயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தங்கிலீஷில் டைப்புகிறவர்களை பார்த்தால் கடுப்பாய் இருக்கிறது.

பேஏஏஏராசையே துன்பத்திற்கு காரணம்.

வன்மத்தோடு எதிர்க்க நினைக்கிறவன் பெரிதாய் சாதிப்பதில்லை‪#‎பாயிண்டாப்‬ வியூ 
மிஸ்ஸிங்

நட்பு கூட கோபத்தில் வன்மாகிறது ‪#‎அவதானிப்பூஊஊஊ‬

Hobbit Intresting..

இதுக்கு யாரும் போராட மாட்டாங்களே.. ‪#‎பெஷாவர்‬படுகொலைகள்

நிறைவாக இருப்பவர்களுக்கும், நிறைவேறாமல் இருக்கிறவர்களுக்கும் சனிப் பெயர்ச்சி என்பது சாதாரணமானதுதான். ‪#‎அவதானிப்பூஊஊஊஊ‬
@@@@@@@@@@@@@@@@@@@
பிசாசு
அருமையான லைன். வழக்கமாய் பேய்களை வைத்து மிரட்டிக் கொண்டிருந்தவர்கள் பின்னாளில் காமெடியாக்கியிருக்க, மிஷ்கின் தன் பங்கிற்கு காதலிக்க வைத்திருக்கிறார். அற்புதமான பின்னணியிசை. மிஷ்கினின் வழக்கமான கேமரா கோணங்கள். எல்லாவற்றையும் மீறி தன் பெண் பேயாய் இருப்பதை உணர்ந்து ராதாரவி தவழ்ந்து கொண்டே போகும் காட்சியில் நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனரும், நடிகரும். படம் நெடுக குறியீடுகளும், பார்வையாளனையே உட்புகுந்து பயணிக்க வைக்கிற லாவகம், அழகான திரைமொழி, எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறது.
@@@@@@@@@@@@@@@@@@
PK
ராஜ் குமார் ஹிரானி, அமீர்கான், விது விநோத் சோப்ரா காம்பினேஷன் என்றால் ஷுயூர் ஷாட் ஹிட் என்கிற ஒரு மனநிலையுடனேயே பெரும்பாலான ரசிகர்கள்  படம் பார்க்க செல்கிறார்கள். அவர்களும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை சரியான விகிதத்தில் அவர்களின் ஃபீல்குட் பார்முலாவில் கலந்தடித்து ஒரு பேக்கேஜாய் கொடுத்துவிடுவார்கள். இம்முறை பி.கே. விண்ணுலகிலிருந்து வரும் அமீரின் விண்கல கேட்ஜெட்டை ஒருவன் திருடிப் போய்விட, அதை கண்டுபிடிக்க கடவுளால் மட்டுமே முடியுமென்று நம்பி அலையும், அமீருக்கும், ஆன்மீக நம்பிக்கைகளால் மொழுகப்பட்டிருக்கும் காமன்மேன்களுக்குமிடையே ஆன கதைதான் பி.கே. படம் நெடுக எம்.ஆர்.ராதா தனமான இண்ட்ரஸ்டிங் கேள்விகளை அமீர் அடுக்கிக் கொண்டே போவது க்ளாஸ்.ஆனால் என்ன முழுக்க, முழுக்க, இந்துக் கடவுளை வழிபடுகிறவர்கள் மட்டுமே மூட நம்பிக்கையில் திளைத்து கொண்டிருப்பதாய் காட்டுவதை தவிர்த்திருக்கலாம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிறிஸ்துவ, மற்றும், இஸ்லாமிய நம்பிக்கையை பற்றி லேசு பாசாய் சொன்னதை தவிர, முழுக்க முழுக்க, இந்துக்களின் நம்பிக்கையை கிண்டலடிப்பதை தவிர்த்துவிட்டு பார்த்தால் அமீரின் நடிப்பு, அனுஷ்கா சர்மாவின் க்யூட்டான, பப்ளியான கண்கள் பளபளக்கும் பர்பாமென்ஸ்.  டிவி ஷோ க்ளைமேக்ஸ், ஃபீல் குட் மில்ஸ் அண்ட் பூன் காதல் என டெம்ப்ளேட் விஷயங்கள் எல்லாவற்றையும் மீறி அற்புதமான ரைட்டிங்கினால் பி.கே அட்டகாஷ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Hung Chow calls in to work and says, "Hey, boss I not come work today, I really sick. I got headache, stomach ache and my legs hurt. I not come work." The boss says, "You know Hung Chow, I really need you today. When I feel like this I go to my wife and tell her give me sex. Makes everything better and I can go to work. You try." Two hours later Hung Chow calls again: "Boss, I do what you say and I feel great. I be at work soon. You got nice house."
கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

Ponchandar said...

அடல்ட் கார்னர் அந்த காலத்துலேயே வைதேகி காத்திருந்தாள்-ல கவுண்ட மணி செந்தில் இதே ஜோக்குக்கு நடித்திருக்கிறார்கள் ! !

குரங்குபெடல் said...

"சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய்விட்டு "


அண்ணே . . . ரொம்ப வளர்ந்துட்டீங்க அண்ணே . . .

ரஜினிகாந்த்னு ஒருத்தர் நடிச்சி லிங்கான்னு . . . ஒரு படம் வந்திருக்காம் . . .

அதானே . . . அந்த ஏதோ ஒரு படம்

SAS said...

Cable Sir, any particular reason for not reviewing Linga? Expecting your review of Linga.

aravi said...

Same template incident. Thirundave matiya...boss

R. Jagannathan said...

Cable Sankar was busy and when he tried to see Linga, the film is taken out of the theatres! (sorry, some exaggeration here!) Any way, he may be scare to see the film in an empty theatre!

Desingh said...

அண்ணே உங்க உழைப்பில் வெளிவர இருக்கும் படத்திற்கு நானும் என் நண்பர்களும் காத்துகொண்டிருகிறார்கள்