பேலியோ டயட்டிலிருக்கும் என் வாயையும், வயிற்றையும் கிண்ட வைக்கும் ஒர் போட்டோவை தோழி சோனியா ட்வீட்டரில் போட்டிருந்தார். அட ஒரு நாள் ஒரே ஒரு நாள் சீட் செய்தால் தவறில்லை என்று பேலியோ சித்தாந்தத்தில் சொல்லியிருப்பதால் விட்றா வண்டிய என்று நேற்றிரவு விட்டோம் ஆர்ம்ஸ் ரோடுக்கு.

காரச்சட்னியை விட, தேங்காய் சட்னி அபாரம். கெட்டிச் சட்டினியாய் இல்லாமல் முழுதாய் அரைக்கப்பட்ட தேங்காயாய் இல்லாமல் நெருடும், பதத்தில் அரைக்கப்பட்ட தேங்காயுடன், பச்சை மிளகாய் கொஞ்சம் தூக்கலாய் நீர்த்த நிலையில் தான் சட்னி இருந்தது. இட்லியுடன் அந்த தேங்காய் சட்னி காம்பினேஷன் வாவ்.. டிவைன்.
அடுத்து வந்த தோசைகளில் பன்னீர் தோசை கொஞ்சம் தித்தித்தது, காளான் தோசை நல்ல காரமாக இருந்தது. பேபி கார்ன் அதற்குரிய குணத்தோடு, இருக்க, தோசையிலும் பட்டரை போட்டு மொறு மொறுவென இல்லாமல் நல்ல பதத்தில் எடுக்கப்பட்ட தோசை. மசாலாவை நடுவில் வைத்து கொடுக்காமல் தோசை முழுவது ஸ்பெரெட் செய்யப்பட்டு, சுடச் சுட. கையேந்தி பவனாய் இருந்தாலும், அபார சுவை . டோண்ட் மிஸ். மூன்று பேருக்கு நான்கு தட்டு இட்லி, மூன்று தோசைகள் சேர்ந்து 320 தான் ஆனது. டிவைனுக்கெல்லாம் விலை கிடையாது. என்ஜாய்
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
ஒய் சங்கர் அண்ணா
உமக்கு வயிறா அல்லது வண்ணான் சாலா (மன்னிக்கவும் ஜாதியை குறிப்பிட வில்லை ) ராத்திரி 10 மணிக்கு இந்த தீனி தின்னால் உடம்பு என்னத்துக்கு ஆறது . எங்களை இப்படி டெம்ப்ட் பண்ணாதீங்கோ
சூப்பர் வர்ணனை
Post a Comment