கொத்து பரோட்டா 2.0-51
கொத்து பரோட்டா 2.0-51 Arjun Reddy ஆந்திராவை மட்டுமல்ல. தமிழ் நாடு, கர்நாடகா, வெளிநாடு என எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கும் படம். இப்படத்தோடு வெளியான விவேகத்தின் வசூலை விட, அதிக வசூலை வெளிநாடுகளில் ஏற்படுத்திய படம். சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் விவேகத்தின் ஆக்கிரமிப்பால் வெறும் நான்கு காட்சிகளுக்கு மட்டுமே அரங்குகள் கிடைத்திருக்க, திங்களிலிருந்து சுமார் 20பதுக்கும் மேற்பட்ட காட்சிகள் உயர்ந்த படம். இந்த அக்மார்க் தெலுங்கு படம்.. கதையென்று பார்த்தால் நம்ம பழைய தேவதாஸின் லேட்டஸ்ட் வர்ஷன் தான் ஆனால் அதை ப்ரெசெண்ட் பண்ணியிருக்க ரானெஸ் தான் படத்தை அப்படி கொண்டாட வைக்கிறது. மெடிக்கல் காலேஜில் எல்லாவற்றிலும் டாப்பர் ஹீரோ. ஆனால் ஆங்கர் மேனேஜ்மெண்ட்டில் ஜீரோ. ஒரு கோப தருணத்தில் காலேஜை விட்டு வெளியே போகிறேன் என்று முடிவெடுத்த போது, புதியவளான நாயகி ப்ரீதியை பார்க்கிறான். பார்த்த கணத்தில் அவள் மேல் காதல் கொள்கிறான். அவளின் மேல் அதீத காதல் கொள்கிறான். அவனின் காதலில் அவள் மூழ்கி திளைக்கிறாள். திக்கு முக்காடுகிறாள். காதலின் ஆக்கிரமிப்பை மூச்சு மு...