விக்ரமனின் - நினைத்தது யாரோ
பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார். மற்றும் கார்த்திக் யோகி, அஸார், அஷ்வத், ரித்விகா, சுபிக்ஷா, அதுல்யா, சாய் பிரசாத், கிரி, லியோ, பினிஷ், ஷ்யாம் சுந்தர், ஸ்வேதா குப்தா, ஷாமிலி, சமீரா, ஷபானா, பிரதீப், எல்விஎல் , மணிபாரதி, விஷ்ணு, ரஞ்சித், பானு, பாலசுந்தரி, இந்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – R.K. பிரதாப், இசை – X. பால்ராஜ், எடிட்டிங் – S. ரிச்சர்ட் , கலை – ஜனா, பாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி, நடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர் ஸ்டன்ட் – தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம், தயாரிப்பு – P. ரமேஷ், இமானுவேல், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – விக்ரமன் “முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து இளைய தலைமுறை ரசிகர்களை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்....