Posts

Showing posts with the label தமிழ் சினிமா

பைரஸியும் சினிமாவும் -1

பைரஸியும் சினிமாவும். நியாயமாய் சினிமாவும் பைரஸியும் என்று தான் ஆர்மபித்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டபஸாய் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருப்பது பைரஸி என்பதால் அது முதல் நிலையில் செல்ல வேண்டிய கட்டாயம். சென்ற வாரம் என்னுடய புதிய திரைப்படமான “6 அத்யாயம்” திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தேறியது.  இது ஒரு அந்தாலஜி திரைப்படம். ஆறு கதைகள், ஆறு இயக்குனர்கள், ஒரே ஜெனர். முக்கியமாய் உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் அனைத்து கதை க்ளைமேக்ஸ்களும் கடைசி அரை மணி நேரத்தில் காண்பிக்கப்படும் படம். இப்படியான சிறப்புகள் கொண்ட சுயாதீன திரைப்பட விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியவர்கள் அனைவரும் பேசிய முக்கிய விஷயம் நாம் ஐந்து வாரமாய் பேசிய ஓ.டி.டி டிஜிட்டல் ப்ளாட்பார்ம் பற்றியும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றியும்.பைரஸி பற்றியும் தான். சினிமா டிஜிட்டலாய் மாற ஆரம்பித்ததிலிருந்த காலத்திலிருந்தே பைரஸி ஆரம்பித்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஊர் ...

சினிமா வியாபாரம் - பாகம் 1 - தமிழ் சினிமா 100 கோடி வசூல் செய்யுமா?

Image

Kuttram 23 - Silent Review

Image

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-3

அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான்.  இதென்ன கலாட்டா? படத்தைத்தான் பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறதே? என்று கேட்பீர்களானால் நீங்கள் அப்பாவி. இம்மாதிரியான சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஏதோ இந்நிறுவனங்கள் வெளியிட்டால் மட்டுமே தங்கள் படத்திற்கு மதிப்பு என்று நினைத்துக் கொண்டு, பத்து பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் தங்கள் படத்தின் எல்லா உரிமைகளையும், அவர்கள் மூலமாய் வியாபாரம் செய்ய எழுதிக் கொடுத்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள். படத்தை தங்கள் வசம் வாங்கி வைத்துக் கொண்ட நிறுவனம் அதற்கு பிறகு காய் நகர்த்த ஆரம்பிக்கும். முதலில் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு போகும் என்பதற்காக அவர்களுடன் இணைப்பில் இருக்கும் சாட்டிலைட் சேனல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும். பேச்சு வார்த்தைகளுக்கு பின் ஒர் ரேட் பிக்ஸ் ஆகும் வரை இதோ அதோ நல்ல டேட் பார்த்து ரிலீஸ்  பண்ணனும், பெரிசா விளம்பரம் பண்ணாத்தான் ஒர்கவுட் ஆகும் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். 

கேம்பஸ் செலக்‌ஷன்

யாராவது ஏதாவது ஒரு புது முயற்சி செய்யலாம் என்று அடியெடுத்து வைக்கும் போது “இதெல்லாம் விளங்காது. ஆகுற வேலைய பாரு” என்று ஆரம்பித்து அத்தொழிலில் உயர்வான இடத்தில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு “அவரே செய்யலை நீ செய்திருவியா?” என்று கேட்டு நம் ஆர்வத்தை முளையிலேயே கிள்ளிவிடுவார்கள். அப்படியான ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ரொம்பவே அதிகம். எது சொன்னாலும் கமல் பண்ணலை, ரஜினி பண்ணலை, ஏவிஎம் பண்ணலை நீங்க பண்ணிருவீங்களோ? என்று கேட்பவர்கள் இருக்குமிடத்தில் அதுவும், வெற்றி மட்டுமே மதிப்பீடாக இருக்கும் துறையில் ஏதாவது சாதிக்க முயன்றாலும் அதற்கான கிண்டல்களும் கேலிகளும் நிறையவே வரத்தான் வரும். 

தமிழ் சினிமா ரிப்போர்ட் -2012

தமிழ் சினிமா இந்த வருடம் கொஞ்சம் ஆச்சர்யகரமான வருடமாகவே அமைந்துவிட்டது. ஏனென்றால் நிச்சயம் பெரிய வசூல் வரும் என்று நம்பி எடுத்த பெரிய நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்விக் கொள்ள, கதையும், அதை சொன்ன விதமும் பிடித்துப் போனதால் சிறு முதலீட்டு படங்கள் ஹிட்டாக, மேலும் பல புதிய, சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் உருவாக்கிய வருடமிது. அது மட்டுமில்லாமல் சிறிய படங்களை வாங்க ஆளில்லை என்ற நிலை மாறி நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு புதிய விநியோகஸ்தர்கள் வேறு உருவாகியிருப்பது ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்லும் பாதையை காட்டியிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயமே. சுமார் 168க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது இந்த வருடம். சென்ற வருடத்தை விட இது அதிகம்.

சட்டம் ஒரு இருட்டறை

Image
முப்பது வருஷத்துக்கு முன்னாடி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய்காந்த் நடித்து வெளியான ஹிட் படம். விஜய்காந்துக்கு ஒரு மார்கெட்டை உருவாக்கிய படம்  இப்படி பல பெருமைகளை கொண்ட சட்டம் ஒரு இருட்டறை மீண்டும் அதே ஹிட்டை தந்திருக்கிறதா?

மதுபானக்கடையின் அவலங்கள்

Image
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சினிமாவை தயாரிக்கப் படும் பிரயத்தனங்களை விட அதை வெளிக் கொண்டு வருவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டும். அதுவும் மதுபானக்கடை போன்ற படங்கள் வெளிவர எல்லா குட்டிக்கரணங்களும் அடித்தே ஆக வேண்டும் எனும் போது ஏண்டா படம் தயாரித்தோம் என்று யோசிக்கத் தோன்றும்.

கர்ணன் சொல்லும் செய்தி

Image
என்ன கர்ணனின் செய்தியா? எந்த கர்ணன்? மகாபாரதக் கர்ணனா? இல்லை? ஒளிப்பதிவு மேதை கர்ணனா? அல்லது சமீபத்திய பரபரப்பான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பழைய கர்ணன் படத்ததைப் பற்றியா? என்று கேட்பீர்கள். இந்த செய்தியை சொல்வது சிவாஜிகணேசனின் கர்ணன் திரைப்படம் தான். ஆம் இது ஒரு முக்கிய செய்தி தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே மிக முக்கியமான செய்தியை சொல்லியிருக்கிறது இப்படம். வருகிற பதினாறாம் தேதி மீண்டும் கர்ணன் வெளியாகவிருக்கிறது

சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லையா?

கடந்த ரெண்டு நாட்களாய் இணையத்தில் தியேட்டர் கிடைக்காததால் சிறு படங்களை வெளியிட முடியவில்லை என்றும் , சமீபத்தில் வெளியான சிறு முதலீட்டு படம் ஒன்றை , பெரிய விநியோகஸ்தர்கள் , தியேட்டர்காரர்கள் திரையிட மறுப்பதாகவும் , சிலர் வேண்டுமென்றே தடையேற்படுத்த நினைப்பதாகவும் ஆளாளுக்கு படத்தைப் பற்றியோ , இந்த தொழிலைப் பற்றியோ தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்க , படத்தின் இயக்குனர் குழுவினர் , யூடூயூப் விடியோவில் அழுதெல்லாம் படத்திற்கு கும்பல்   சேர்க்க முயற்சித்தார்கள். பட் நோ யூஸ்.

தமிழ் சினிமா வாழ்கிறதா? - சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா உலகின் பெரிய குற்றச்சாட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிகளின் ஆக்கிரமிப்பினாலும், சன்னின் ஆதிக்கத்தினாலும் ஒடுங்கிவிட்ட்தாக புலம்பிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு காரணத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் தமிழ் சினிமா இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வாழ்கிறதா? என்ற கேள்வியை முன் வைத்தால் இன்றைய நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நிச்சயம் இது சார்புடய கருத்து என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் சொன்னது போல நிச்சயம் ஏதேனும் மாறுதல் வரும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்த்துப் போய்விடப் போகிறது என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களும் நிறைய இருக்கவேத்தான் இப்படிச் சொல்கிறேன்.

தமிழ் சினிமாவும் வரி விலக்கும்.

தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு சட்டம் நம் மாநிலத்தில் இருக்கிறது. இதை பற்றிய நிறைய ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது.  என்ன தான் தமிழ் சினிமாவை வாழவைப்பதற்காக தமிழக முதல்வர் அவர்கள் செய்த பெரும் உதவி என்று திரைத்துறையினர் பாராட்டினாலும். நிஜத்தில் வரி விலக்கு என்று வரும் போது யாருக்கு அனுகூலம் ஆகியிருக்க வேண்டும்?. வருடத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது இச்சட்டத்தின் மூலம். ஒரு காலத்தில் காந்தி, காமராஜ், மற்றும் தேசபக்தியை பறைசாற்றும் திரைப்படங்கள், நல்ல சமூதாய சீர்திருத்த கருத்துகள் சொல்லும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் வரிவிலக்கானது பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வரி என்றால் வரிவிலக்கு பெற்ற படத்தின் விலை ஒன்பது ரூபாய்க்கு மக்களுக்கு அளிக்கப்படும். அதாவது வரிவிலக்கின் முழு அனுகூலம் படம் பார்க்கும் பொது மக்களுக்கு அளிக்கப்படுவதால் மேலும் பலர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிறந்த கருத்துகளும் மக்களீடையே சென்று சேரும் என்றும் தான் வரி விலக்கு கொடுக...

தமிழ் சினிமாவின் தொடர் தோல்வி ஏன்?

Image
கடந்த ஐந்து மாதங்களில் வெளியான முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் தமிழ்படம், விண்ணைத்தாண்டி வருவாயா?, அங்காடித்தெரு, பையா, ஆகியவைதான் வெற்றிப் பெற்றிருக்கிறது. இதன் வெற்றி என்பது கூட அந்த படங்களுடய பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது வெற்றியின்  சதவிகிதம் மாறிவிடும். இந்த வருடத்தின் நிஜ சூப்பர் ஹிட் என்றால் அது தமிழ் படமாகத்தான் இருக்கும். ஏனென்றால் பெரிய நடிகர்கள் இல்லாமல் மிக சிறிய பட்ஜெட்டில் சுமார் நான்கு கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பதினான்கு கோடி வசூலித்திருக்கிறது.  அதே போலத்தான் அங்காடித்தெரு சுமார் ஐந்து கோடியில் தயாரிக்கப்பட்ட படம் வெகு நாட்கள் ஐங்கரனின் பைனான்ஸ் பிரச்சனையினால் ஒரு வருடத்துக்கு மேல் வெளியிடப்படாமல் இருந்த படம். இப்படம் பத்திரிக்கையாளர்களிடையே, விமர்சகர்களிடையேவும் பெரிய வரவேற்பை பெற்ற அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் லாபகரமான ஒரு வெற்றிப்படமே.. விண்ணைத்தாண்டி வருவாயா.. இவ்வருடத்தின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்.. சுமார் 30 கோடி வரை வசூல் செய்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்ம...

ஜக்குபாயும் திருட்டு விடியோவும்..

Image
ஜக்குபாய் திரைப்படம் இண்டெர்நெட்ல் வெளியாகிவிட்டது. ஊரெல்லாம் டிவிடியாய் ப்ரிண்ட் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும், வீடியோ பைரஸியை எதிர்த்து ஆளாளுக்கு மைக் போட்டு பிதற்றினதும், கண்ணீர் விட்டு அழுததும் நடந்தது. பைரஸி வீடியோ ஏதோ ஒரு ஸ்டியோவிலிருந்து அது எந்த ஸ்டூடியோவிலிருந்து என்று படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ஏனென்றால படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் செய்யும் இடத்தில் இருந்து தான் திருடப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாய் படத்தில் ஒடும் டைம் கோடை வைத்து பார்த்தால் தெரியும். ஆனால் படத்தை திருட்டு டிவிடி தயாரித்து விற்றதாக யாரோ ஒருவரை சென்னையில் இல்லாமல் வெளியூரிலிருந்து திருட்டு டிவிடி தயாரித்தார் என்று கைது செய்திருக்கிறார்கள். எய்தவனை விட்டு விட்டு அம்பை பிடித்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் நடத்திய மீட்டிங்கில் டிவிடியை எதிர்த்து நம் பெரும்புகழ் பெற்ற நடிகர்கள் பேசியது செம காமெடி. சேரன் ஒவ்வொரு ஊரிலும் தங்களுடய ரசிகர் படையை ஏற்படுத்தி அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் கொடுத்து பைரஸியை ஒழிப்போம். அதை மீறி விற்பவர்கள ஒடுக்...

தமிழ் சினிமா 2009

Image
வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம். ஜனவரி பொங்கலுக்கு ரீலீசான விஜய்யின் வில்லு, சன்பிக்சர்ஸின் படிக்காதவன், ராஜ்டிவியின் செமி டப் படமான காதல்னா சும்மா இல்லை, ஏவிஎம்மின் அ..ஆ..இ..ஈ.., அதே போல தமிழ் தெலுங்கு இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட என்னை தெரியுமா?, வெண்ணிலா கபடிக்குழு என்று படங்கள் ரிலீஸானதில் விஜயின் வில்லுவை பற்றி நானேதும் சொல்லத் தேவையில்லை.ஏவிஎம்மின் அ..ஆ.. இ… படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தும் பெரிய தோல்வியை அடைந்தது. ராஜ்டிவியின் காதல்னா சும்மா இல்லை படம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், படம் நந்தி விருது பெற்றது. தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த கேரக்டரில் ரவிகிருஷ்ணாவை போட்டு அவர் சம்மந்தபட்ட காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி, வடை போச்சே கதையாகிவிட்டது. தனுஷின் பொங்கல் ரிலீஸான படிக்காதவன் படத்தின் ரிப்போர்ட் படு கேவலமாய் இருந...

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09

Image
1. நினைத்தாலே இனிக்கும் வழக்கம போல் சன்பிக்ஸர்ஸின் அதிரடி மார்கெட்டிங்கில் கவனிக்கப்பட்ட படம். மிக சுமாரான ஓப்பனிங். படம்மும் பெரிதாய் ஏதும் அதிரடி செய்யவில்லைன் என்றாலும் சென்னை போனற தமிழகத்தின் முக்கிய நகரஙக்ளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூல் என்றே சொல்கிறார்கள். 2. மதுரை  சம்பவம் ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம். ராம.நாராயணன் வாங்கி வெளீயிட்டதால் கலைஞர் டிவியின் திரும்ப திரும்ப,  ட்ரைலர் காட்டப்பட்ட படம். மிக மிக சுமாரான ஓப்பனிங். ஹரிகுமாரின் நடிப்பை தவிர படம் மோசமில்லை என்றாலும் அவரே மைன்ஸ் ஆகிபோனதால் வசூல் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. 3. ஈரம் ரியாலிட்டி, லைவ் மேக்கிங் என்று தில்லாலங்கடி அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஹாரர்/ த்ரில்லர் வகையில் வந்து கலக்கி கொண்டிருக்கும் படம். 4. உன்னை போல் ஒருவன் இணையத்தில் அந்த இசம், இந்த இசம், இந்துத்துவா, அவா, இவா, என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தாலும், இந்த மாதத்திற்கான சூப்பர் ஹிட் என்றால் மிகையாகாது. மிக பெரிய வசூலை படம் எடுத்து கொண்டிருக்கிறது.  தமிழ் சினிமாவிற்கு தேவையான...

தமிழ் சினிமாவின் 30 நாட்கள் –Aug 09

Image
align="justify">சென்ற மாதம் போல இந்த மாதம் 21 படங்கள் வெளியாகவில்லை. சென்ற மாதம் வெளியான 21ல் மலை, மலை படம் பல செண்டர்களில் நான்கு வாரத்தை தாண்டியது பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும், அவர்கள் முதலீடு போட்ட பணம் வரவில்லை என்றாலும் நாலு வாரம் தாண்டியதே ஒரு சாதனைதான். பதிவுலகம் முழுவதும் விமர்சனகளால் படத்தின் வசூல் பாதிக்க படுவதாய் சொல்கிறார்க்ள்.  விமர்சனம் செய்ய கூடாது என்றும் பதிவெழுதி பரபரப்பாய் இருக்கிறார்கள், உங்கள் எல்லாருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விமர்சனஙக்ளால் படம் ஓடுவதில்லை. ஓடுகிற படத்துக்கு விமர்சனம் ஒரு ப்ளஸ் பாயிண்ட் அவ்வளவுதான். நாமெல்லாம் நல்லாருக்கு சொன்னாலும், சொல்லாட்டாலும் ஓடுற படம் ஓடத்தான் செய்யும். 1 நேசி பல புதுமுகங்கள், ஒரு சில பழைய முகங்கள் ந்டித்திருந்த படம். தமிழ் திரையுலகமே கண்டிராத க்ளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தார்கள். தியேட்டரில் மொத்தம் 15 பேரோடு பார்த்தேன். படத்தில் நல்ல விஷயம் கேமராமேன் ரமேஷ்.ஜியும், சிற்பியின் இசையும்தான்.  புது கதாநாயகன், நாயகி இருவரும் புதுமுகம் என்று தெரியாத வகையில் நடித்தி...

தமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09

கடந்த மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமும், மோசமான மாதமும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அதிகபட்சமான நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியான மாதம் என்றால் அது சென்ற ஜூலை மாதம் தான். இருபத்தியோரு தமிழ் படங்கள் வெளியாகியிருக்கிறது.  பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் நடித்த படங்களைவிட சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளிவந்ததுதான் அதிகம். 1  சிரித்தால் ரசிப்பேன் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஒரு முழு நீள நகைச்சுவை படம்.  குறைந்த அளவு பிரிண்டுகளே போடப்பட்டு, விளம்பரமும் இல்லாததால் ஒரு வாரத்தில் சுருண்டது. நல்ல காமெடி இருந்தது என்று பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். 2 ஞாபகங்கள் பாடலாசிரியர் பா.விஜய் எழுதி நடித்த திரைப்படம்,  ஹிந்தி ரெயின் கோட்டை திரும்ப தமிழில் தன் நண்பரின் கதை என்று உட்டாலக்கடி விட்டாலும், செல்ப் எடுக்காத படம். பாவம் பல படஙக்ளில் பாட்டெழுதி சம்பாதிச்ச காசு.. :( 3 உன்னை கண் தேடுதே .ஏ.எல். அழகப்பனின் மகன் உதயாவின் மறு அவதார முயற்சி..  ஒரு வாரம் கூட ஓடியதாய் தெரியவில்லை. 4 இந்திரவிழா நமிதாவை பெரித...

தமிழ் சினிமாவின் 30 நாட்கள் - ஜூன்09

Image
சென்ற மாத கடைசியில் வெளியான தோரணை யோட ரிசல்ட் ஒண்ணும் சொல்லிக்கும்படியா இல்லை. ஐ.பி.எல்., டி20 கப், எல்லாம் முடிஞ்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் திற்ந்திருச்சு. சரி இந்த மாச வந்த படஙக்ளை பத்தி பார்ப்போம் மாயாண்டி குடும்பத்தார். பத்து இயக்குனர்கள் படத்தில் நடித்தது படத்துக்கு ஒரு நல்ல பப்ளிசிட்டியை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். வெகு சுமாரான ஓப்பனிங்..  பல இடங்களில் டப்பு.. டுப்புன்னு விழுந்திருச்சு, தட்டு தடுமாறி எழுந்து நிக்க முயற்சி செய்யுது மாயாண்டி குடும்பம். கோவையில் மட்டுமே சுமார் 20 லட்சம் லாஸ் வரும்னு சொல்றாஙக். பாப்போம்   குளிர் 100 மாயாஜால் ஓனர் பொண்ணு அனிதா உதிப் இயக்கி வெளிவந்த படம். படத்தோட பாடல்கள் இளைஞர்களை உள்ளே இழுத்தது என்னவோ உண்மைதான். அதுவும் மல்ட்டி ப்ளக்கில் மட்டுமே கும்பல் இருந்தது. ஆனால் அந்த ஆடியன்ஸ் எதிர்பார்ப்பையும் திருப்ப்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். மாசிலாமணி வழக்கம் போல் சன் டிவியின் மூளை மழுக்கும் விளம்பரத்தினால் பெரிய ஓப்பனிங் இல்லையென்றாலும், திரும்ப, திரும்ப வரும் விளம்பரத்தினால் சொற்ப கூட்டம...

காதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது எப்படி..?

விகடனில் தங்கள் முத்திரையை பதித்திருக்கும் நண்பர் நர்சிம், ஆதிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள். சேது வந்து ஹிட்டான காலத்தில் பல உதவி இயக்குனர்கள் அதே போன்ற கதைகளை வைத்துக் கொண்டு, சேது மாதிரி ஒரு சப்ஜெக்ட் சார் என்று சொல்லி அலைவது ஒரு காலமாய் இருந்த்து. அதற்கு அப்புறம் காதல் வந்தது. அதற்கு அப்புறம் யாரை பார்த்தாலும் லைவாய் ஒரு ஸ்கிரிப்ட் காதல் மாதிரின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களை சொல்லி தப்பில்லை.. அதுக்கு அப்புறம் வந்த பருத்தி வீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிகுழு  போன்ற படஙகள் ஹிட் ஆக, தமிழ் சினிமாவே லைவ் கதைக்காகவே படைச்சா மாதிரி ஆயிருச்சு. இப்போதைய தமிழ் சினிமா உலகமே ஒண்ணு பெரிய ஆர்டிஸ்டுகளை வைத்து தெலுங்கு பட உலகமே மறந்து போன கதைகளை பண்ணிட்டுருக்க, இன்னொரு பக்கம் ஷூ ஸ்டிரிங் பட்ஜெட்லனு சொல்லி ஹவாய் செப்பல் பட்ஜெட்ல படம் பண்ணிரலாம்னு சுத்திட்டிருக்கு. அதனால லைவ் படம் பண்ணுவதற்கான வழிமுறைகளை பற்றி ஏதோ என்னாலான ஒரு யோசனை. கண்டிப்பா உங்க படத்தோட கதை மதுரை பக்கத்தில ஏதாச்சும் ஒரு கிராமத்துல நடக்கிறதா இருந்தாகணும். அடுத்து படத்து ஹீரோ கேரக்டர் பழைய வடிவேலு ரேஞ்...