align="justify">சென்ற மாதம் போல இந்த மாதம் 21 படங்கள் வெளியாகவில்லை. சென்ற மாதம் வெளியான 21ல் மலை, மலை படம் பல செண்டர்களில் நான்கு வாரத்தை தாண்டியது பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும், அவர்கள் முதலீடு போட்ட பணம் வரவில்லை என்றாலும் நாலு வாரம் தாண்டியதே ஒரு சாதனைதான். பதிவுலகம் முழுவதும் விமர்சனகளால் படத்தின் வசூல் பாதிக்க படுவதாய் சொல்கிறார்க்ள். விமர்சனம் செய்ய கூடாது என்றும் பதிவெழுதி பரபரப்பாய் இருக்கிறார்கள், உங்கள் எல்லாருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விமர்சனஙக்ளால் படம் ஓடுவதில்லை. ஓடுகிற படத்துக்கு விமர்சனம் ஒரு ப்ளஸ் பாயிண்ட் அவ்வளவுதான். நாமெல்லாம் நல்லாருக்கு சொன்னாலும், சொல்லாட்டாலும் ஓடுற படம் ஓடத்தான் செய்யும்.
பல புதுமுகங்கள், ஒரு சில பழைய முகங்கள் ந்டித்திருந்த படம். தமிழ் திரையுலகமே கண்டிராத க்ளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தார்கள். தியேட்டரில் மொத்தம் 15 பேரோடு பார்த்தேன். படத்தில் நல்ல விஷயம் கேமராமேன் ரமேஷ்.ஜியும், சிற்பியின் இசையும்தான். புது கதாநாயகன், நாயகி இருவரும் புதுமுகம் என்று தெரியாத வகையில் நடித்திருந்தார்கள். படத்தை பார்த்துவிட்டு பதிவர்கள் விமர்சனம் எழுதவில்லை. நிறைய பேர் சொல்கிறார் போல ஏதோ பதிவர்கள் விமர்சனம் எழுதுவதால் தான் படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்றதால் இந்த படத்துக்கு எழுதவில்லை. படம் ஓடவில்லை அதற்கு பதிவர்கள் காரணமில்லை.
நான் பார்க்கவில்லை. ஆனால் போட்ட காசு பழுதில்லை என்று சொல்கிறார்கள். ஒரு வாரம் ஓடினாலும் ஒவ்வொரு செண்டரிலும் நல்ல மகசூல் என்கிறார்கள். மீண்டும் சாப்ட் போர்ன் வ்கை படஙக்ள் ஓட ஆரம்பிப்பது நல்லதுகில்லை என்றே தோன்றுகிறது. இதற்கும் உ.தவை தவிர யாரும் விமர்சனம் எழுதவில்லை. படத்தின் வெற்றிக்கு முழு காரணம் அவர் தான்.
3. ஈசா
இந்த படமும் சென்னையில் மூணு வாரம் தாண்டியிருக்கிறது. சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் வருமானம் ஏதுமிருப்பதாய் தெரியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் விக்னேஷ்.
4. அழகர் மலை
இதுவும் சென்னையில் மூன்று வாரங்களை கடந்திருக்கிறது. சேவிங் கிரேஸாக வடிவேலுவும் கை விரித்து விட்டதால். வசூல் இல்லை என்று சொல்லபடுகிறது.
5. வண்ணத்து பூச்சி
இந்த படத்தை பற்றி சொல்ல ஏதுமில்லை.z
6. ஓரே மனசு
டிட்டோ
7. நேற்று போல் இன்று இல்லை
இதற்கு அவர்களே நல்ல படம் கண்டிப்பா பாருங்கன்னு விளம்பரத்தில் சொல்லியிருந்தார்கள். நிறைய க்ராபிக்ஸ், மற்றும் மாயாஜால காட்சிகள் உள்ள படம் போலிருக்கிறது. வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
8 பொக்கிஷம்
மிகவும் எதிர்பார்க்கபட்டு தோல்வியான படம். சுமார் 7 கோடி செலவில் தயாரான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தாததால், தோல்வி படமானது. இதற்கு நான் விமர்சன கடிதம் சேரனுக்கு எழுதியிருந்தேன். ஒருவேளை அதனால் ஓடலையோ..?
9. கந்தசாமி
படத்தை பற்றி எல்லோருக்கு தெரியும். மிகப் பெரிய ஓப்பனிங் கிடைத்த படம் சென்னையில் மட்டும் முதல் வாரம் 1.75 கோடி வசூல் செய்திருப்பதாய் சொல்கிறார்கள். இது வரை உலகம் முழுவதும் 35 கோடி வசூலாம் ஒரு வேளை தயாரிப்பாளர், வ்நியோகஸ்தர் எல்லாம் கந்தசாமி கோயிலில் லெட்டர் எழுதி வச்சிருப்பாஙக்ளோ… ஆனால் மிக அக்ரஸிவான மார்கெடிங் படத்துக்கு மிகப் பெரிய பலம் என்றே.. சொல்ல வேண்டும். இதற்கும் பதிவர்கள் எல்லோரும் எழுதினார்கள் பாருங்க.. சரி வசூலாம்..
மல்டி ப்ளக்ஸுகளில் நல்ல ஒப்பனிங்.. வீக் எண்டில் நன்றாக போனதாய் சொல்கிறார்கள். மாத கடைசியில் வந்ததால் அடுத்த மாதம் இந்த் படத்தின் ரிசல்ட்டை பார்ப்போம்.
சென்றமாதம் ரிலிஸான படங்களில் மலை,மலை, சென்னையில் மட்டும் இதுவரை 37 லட்சம் வசூல் செய்திருக்கிறது. மற்ற பி, சி, செண்டர்களில் இதை விட பெட்டராய் போவதாய் சொல்கிறார்கள். இன்னொரு அதிசய வெற்றி படம் வேலு பிரபாகரனின் “காதல் கதை” மிக குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சென்னையில் மட்டும் சுமார் 25 லட்சம் வசூல் செய்திருக்கிறதாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ராமி, சம்பத, துப்பாக்கி - சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
நல்ல படம்
ஆமாம்..நானும் கேள்விப்பட்டேன்...இந்த படம் 50 நாள் ஓடிவிட்டதாக...இப்படியும் ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்...
/“காதல் கதை” மிக குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சென்னையில் மட்டும் சுமார் 25 லட்சம் வசூல் செய்திருக்கிறதாம்//
நல்ல படம்\\
Repeattey...!
எப்ப ஸ்டில் போடறீங்க பாஸூ?
கண்டிப்பா அண்ணே, இப்போ இது போல்
நிறைய படங்கள் வருகிறது...... என்னை
போன்ற சிறுவர்களை இந்த படங்கள்
கெடுக்கிறது யூத் அண்ணே.....
//ஒவ்வொரு செண்டரிலும் நல்ல மகசூல் என்கிறார்கள். மீண்டும் சாப்ட் போர்ன் வ்கை படஙக்ள் ஓட ஆரம்பிப்பது நல்லதுகில்லை என்றே தோன்றுகிறது//
கண்டிப்பா அண்ணே, இப்போ இது போல்
நிறைய படங்கள் வருகிறது...... என்னை
போன்ற சிறுவர்களை இந்த படங்கள்
கெடுக்கிறது யூத் அண்ணே.....//
ஐயோ என்னால தாங்க முடியலலலலலலலலலலலலலலல
//ஒவ்வொரு செண்டரிலும் நல்ல மகசூல் என்கிறார்கள். மீண்டும் சாப்ட் போர்ன் வ்கை படஙக்ள் ஓட ஆரம்பிப்பது நல்லதுகில்லை என்றே தோன்றுகிறது//
கண்டிப்பா அண்ணே, இப்போ இது போல்
நிறைய படங்கள் வருகிறது...... என்னை
போன்ற சிறுவர்களை இந்த படங்கள்
கெடுக்கிறது யூத் அண்ணே.....//
ஐயோ என்னால தாங்க முடியலலலலலலலலலலலலலலல
//ஒவ்வொரு செண்டரிலும் நல்ல மகசூல் என்கிறார்கள். மீண்டும் சாப்ட் போர்ன் வ்கை படஙக்ள் ஓட ஆரம்பிப்பது நல்லதுகில்லை என்றே தோன்றுகிறது//
கண்டிப்பா அண்ணே, இப்போ இது போல்
நிறைய படங்கள் வருகிறது...... என்னை
போன்ற சிறுவர்களை இந்த படங்கள்
கெடுக்கிறது யூத் அண்ணே.....//
ஐயோ என்னால தாங்க முடியலலலலலலலலலலலலலலல
இதயெல்லாம் தூக்கு தூரப் போட்டுட்டு உங்க ட்ராக்ல போயிகிட்டே இருங்கண்ணே.
"சிவகிரி" பத்தி ஏன் எதுவுமே சொல்லவில்லை?
சும்மா வாய்லயே முழம் போட்டுக்கிட்டிருந்தா போதுமா..?
அந்த மகசூல்ல கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றது..?!!!
அட சொம்மாருங்க.. இப்படிதிட்டினதுனால படம் ஓடலைன்னு சொல்ல போறாங்க..
நன்றி பாலாஜி
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
//
என்னை திட்டணும்னு எத்தினி நாலா பாத்திட்டிருக்கீங்க>
எப்ப ஸ்டில் போடறீங்க பாஸூ?
//
போட்டுறலாம் பரிசல்.. என்ன நானே இன்னும் பாத்து முடிக்கல.. ஆனா கட்டாயமா காதல் கதை பாருங்க.. நல்லாருக்கு.ஹி.ஹி.
இதை எதுக்கு மூணு வாட்டி சொல்லணும் ?
நிறைய படங்கள் வருகிறது...... என்னை
போன்ற சிறுவர்களை இந்த படங்கள்
கெடுக்கிறது யூத் அண்ணே.....
//
பாருங்க தயாரிப்பாளர்களே யூத்துங்கள்ளாம் கெட்டு போறாங்களாம்.
பிடிச்சிருந்தா சரி.. பாருஙக் மக்களே இந்த படத்தையும் விமர்சனம் பண்ணாங்க் நம்ம ப்ளாகர்ஸ்...
இதயெல்லாம் தூக்கு தூரப் போட்டுட்டு உங்க ட்ராக்ல போயிகிட்டே இருங்கண்ணே//
அண்ணே நான் எதுக்குண்ணே கவலை படப்போறேன். நம்ம வயித்து வலி நமக்கு..
நன்றி ராஜூ
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
பாருங்கய்யா.. இதை கூட உள்குத்துனு சொல்றாங்க.. :)
//
சாரி சாம்ராஜ்யப்ரியன்.. மறந்துட்டேன். அதுக்கும் ஆறாவது படத்துக்கு சொன்ன கருத்தையே போட்டுக்கங்க..
//
நன்றி இராகவன்.அண்ணே
அந்த மகசூல்ல கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றது..?!!!
//
அதைத்தான் மாதவிகிட்ட போய் கழிச்சிட்டீங்கன்னு சொல்றாஙக்..:)
/சும்மா வாய்லயே முழம் போட்டுக்கிட்டிருந்தா போதுமா..?
அந்த மகசூல்ல கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றது..?!!!//
அதைத்தான் மாதவிகிட்ட போய் கழிச்சிட்டீங்கன்னு சொல்றாஙக்..:)///
அடச்சீ.. அசிங்கமா பேசாத..
அந்தப் பொண்ணு கொஞ்ச நாள் ஜெயா டிவில காம்ப்பியரிங் செஞ்சிட்டிருந்ததாம்.. இப்பத்தான் சொல்றாங்க..!!!
கொத்து புரோட்டாவும், ஹாட் ஸ்பாடடும் வச்சு இருக்கிர நீங்களா இந்த அட்வைஸ்!!!!!!
//
என்ன ரைட்டு..?
கேபிள் சஙக்ர்
//
நாலு பேருக்கு அட்வைஸ் பன்ண்னுமின்னா எதுவுமே தப்பில்லை..:)
அந்தப் பொண்ணு கொஞ்ச நாள் ஜெயா டிவில காம்ப்பியரிங் செஞ்சிட்டிருந்ததாம்.. இப்பத்தான் சொல்றாங்க..!!!
//
அண்ணே இவ்வள்வு தெரிஞ்சவஙக்ளாச்சேன்னுதான் நான் வெள்ளெந்தியா சொன்னேன். நீங்க தப்பா நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்
கேபிள் சஙக்ர்