Thottal Thodarum

Sep 9, 2009

Maghadeera – Telugu Film Review

 magadheerareview1
ராம்சரண் தேஜா, ராஜமெள்லி, பிரம்மாண்டமான படம்  என்று எதிர்பார்பு அட்ரிலினை போல பம்ப் ஆகியிருக்க, சதிகாரர்கள், தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் நிறுத்திவிட்டார்கள். விடுவோமா நாங்க.
m3

ஹர்ஷா இளமை துள்ளும் இளைஞன், பைக் ரேஸர், ஒரு சந்தர்பத்தில்  இந்துவின் கையை அவன் தொட்டு போகும் நேரத்தில்  தீப்போல பல விஷயங்கள் அவனுக்குள் தோன்ற, இன்ஸ்டெண்டாய் அவள் மேல் ஹர்ஷாவுக்கு காதல் வர,  காதல் கைகூடி வரும் நேரத்தில் அவளின் மாமா இடையில் வர, இந்துவின் அப்பாவை கொலை செய்த பழி ஹர்ஷாவின் மேல் விழ, இந்துவை ஹர்ஷாவிடமிருந்து பிரித்து கொண்டு ஹெலிகாப்டரில் கிளம்ப, துரத்தி தொங்கும், ஹர்ஷாவை, மேலேயிருந்து தள்ளி விடுகிறார்கள்.  இங்கிருந்து ஆரம்பிக்கிறது 400 வருட முன் ஜென்ம,  பொறி பறக்கும், செகண்ட் ஃஆப். சும்மா அதிரி போயிந்தி என்றால் அது எல்லாம் சும்மா.

m7

தளபதி காலபைரவனுக்கும், இளவரசி மித்ரவிந்தாவுக்கும்,  வெளியே வெளிப்படாத காதல் இருக்க, அவனது முறை மாமன் அவளை அடைய துடிக்க,  அதற்காக சூழ்ச்சி செய்து ஒரு போட்டியை வைக்க, அதில் சூழ்ச்சிகளை வென்று கால பைரவன் வெற்றி பெற்று அவளை மணக்க இருக்கும் வேளையில், காலபைரவனின் குடும்பத்தில் இதுவரை 30 வயதுக்கு மேல் யாரும் உயிரோடு இருந்ததில்லை என்கிற காரணத்தால் அவன் காதலை அரசர் மறைக்க சொல்ல, மன்னரின் ஆணைக்குட்பட்டு, காதலை துரக்க நினைக்க, தன் காதலை வெளிபடுத்த நேரம் பார்த்து இருக்கும் இளவரசி மலைஉச்சியில் நடக்கும் பூஜையின் போது சொல்ல,

போட்டியில் தோற்றுப்போன மாமன் நாட்டின் மீது படையெடுக்க காத்திருக்கும், ஷெர்கானுடன் சேர்ந்து கொண்டு, ஆட்சியை கைபற்றி, மன்னரையும் கொன்று, இளவரசியை அடைய, ஷெர்கானின் படையுடன் வர, அவனையும்,  ஷெர்கானின் 100 வீரர்களை துவம்சம் செய்து, வெற்றி பெரும், காலபைரவன், கண் முன்னாலேயே மாம்ன் எரிந்த கத்தியால் உயிர் விடும் நேரத்திலாவது தன் காதலை சொல்லச் சொல்லி,  மலையிலிருந்து விழுந்து சரிய, காதலியுடன் மேலிருந்து குதித்து உயிர்விடுகிறான் காலபைரவன்.
m1

400வருடங்களுக்கு பின்னால் இளவரசி இந்துவாகவும், காலபைரவன் ஹர்ஷாவாகவும், வில்லன் அதே போல தாய்மாமனாகவும் இருக்க, பூர்வ ஜென்மத்தில் க்ளைமாக்ஸ் நடண்டஹ் அதே இடத்தில் நிகழ்கால க்ளைமாக்ஸ்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கால பைரவனாகவே வாழ்ந்திருக்கிறார். ஷெர்கானிடம் பேசும் காட்சிகளில் பழைய சிரஞ்சீவியை பார்ப்பது போலிருக்கிறது. அவருக்கு இந்த படம் ஒரு மைல்கல்.
m

இளவரசியாகவும், சரி, இந்துவாகவும் காஜல் அகர்வால், அகர்வால் கடை காஜுஅல்வா போல் இனிக்கிறார். அவ்வளவ் க்யூட்.  இளவரசியாக வரும் போது அவரது காஸ்டூயூம்களும், கண்களாலேயே தன் காதலை சொல்ல முயற்சிக்கும் காட்சியும், சூப்பர். மனதை கொள்ளை கொள்கிறார். காஜல். இவரது அழகும், நடிப்பும்,  ப்டத்தின் காதல் காட்சிகளுக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்
mahadeera

படத்தின் மிகப்  பெரிய பலம் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். அருந்ததிக்கு பிறகு, மனுஷனுக்கு முற்பிறவி கதையாக  மாட்டுகிறது. சும்மா பின்னி எடுத்து விட்டார். எது சிஜி, எது நிஜம் என்று தெரியாத வண்ணம் அற்புதமான் ஒளிப்பதிவு.

கீரவாணியின் இசையில் தீரா, திரா பாடல் அருமை, மற்ற பாடலகள் பெரிதாய் இல்லையென்றாலும் மோசமில்லை. ஆனால் பிண்ணனி இசையில் தன் முழு ஆளுமையை காட்டியிருக்கிறார்.

இந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கண் முன்னே 400 வருஷ வாழ்க்கையை விரித்திருக்கிறார்கள். ராஜ்காட் காட்சியாகட்டும், புதைமணல் சேசிங், அந்த மலை உச்சி, அதலபாதாள பிண்ணனி, என்று மிரட்டி எடுத்திருக்கிறார்கள். இந்த எபிஸோடுகள் எல்லாம் உலகதரத்துக்கு ஒரு சவால்.
m8

மலை உச்சி சண்டைகாட்சியும், அதை படமாக்கியிருக்கும் விதமும் சூப்பர்ப்.. படத்தில் உள்ள அத்துனை நடிகர்கள், டெக்னீஷியன்களின் உழைப்பு அதில் தெரிகிறது.

மீண்டும் ஒரு முறை  தான் ஒரு கமர்சிஷியல் கிங் என்பதை நிருபித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி.  முதல் பாதி முழுவதும் ஜாலியாய் போகும் கதை, இரண்டாவது பாதியில் 25 நிமிட பேண்டஸி கலந்த ஒரு மேட்டர், பழிவாங்கும் வெஜென்ஸ் க்ளமாக்ஸ் என்கிற வழக்கமான பார்முலாவில் இருந்தாலும்,  அழகான ஒரு காதல் கதையை,  அருமையான திரைக்கதையில் விறுவிறுப்பின் உச்சத்தை  தொட்டிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும்  இவரது உழைப்பு  தெரிகிறது  தொடர்ந்து 7 படங்கள் ஹிட் கொடுப்பது என்றால் சும்மாவா.  

இந்த படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கிறது, சொல்ல போனால் இவ்வளவு உழைத்துவிட்டு, சாதாரண் மசாலா க்ளைமாக்ஸ் கொஞ்சம் நெருடல் தான் என்றாலும் குறைகள் பெரிதாய் உறுத்தவில்லை. என்பதே உண்மை

மஹதீரா – வெற்றி வீரன்.Don't Miss



டிஸ்கி:

இந்த படத்துக்கு சுமார் 50 கோடிவரை செலவு செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் இதுவரை 100 கோடிக்கு மேல் நிஜமாகவே வசூல் ஆகியிருக்கிறதாம். 50 கோடி ரூபாய் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. இங்கே கந்தசாமிக்கு அதே செலவுதானாம்.

Technorati Tags: ,



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

Muthukumar said...

nanthan 1st...

Muthukumar said...

epdi thala...andhra poi patheengala? illa download ah??

தராசு said...

எப்படி அண்ணே, ஒரு மூணு மணி நேரத்துல இத்தன மேட்டர நோட் பண்றீங்க,

ஆமா, கந்த சாமி காரங்க மேல ஏன் இத்தனி காண்டு????

Senthilkumar said...

இந்த படம்தான் தல யோட 50 வது படமா?

நையாண்டி நைனா said...

இங்கே வந்திட்டு போய்விட்ட பிறகு விமர்சனம் போட்ட உங்களின் வேகத்தை பாராட்டுகிறேன்.

இது நம்ம ஆளு said...

மஹதீரா – வெற்றி வீரன்.Don't Miss


டிஸ்கி:

இந்த படத்துக்கு சுமார் 50 கோடிவரை செலவு செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் இதுவரை 100 கோடிக்கு மேல் நிஜமாகவே வசூல் ஆகியிருக்கிறதாம். 50 கோடி ரூபாய் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. இங்கே கந்தசாமிக்கு அதே செலவுதானாம்.

அண்ணா நீங்க சொன்ன சரி தான்.
படம் பார்த்த திருப்தி.
:)

Sukumar said...

மகாதீரா ... தல பண்றாரா இல்லையா.....?
இந்த படம் பார்பதற்காக ஆந்திர பார்டர் வரை சென்று தாயகம் திரும்பிய கேபிள் அண்ணனை வடபழனி கிளை கேபிள் பேரவை சார்பாக வரவேற்கிறோம் ...!!

இது நம்ம ஆளு said...

இப்பவே படம் பார்க்கணும் போல இருக்கு.

கார்க்கிபவா said...

தல பண்ணல. படம் டப் ஆகிறது.. ஷேர்கான் காட்சிகள் மட்டும் அர்ஜுனை வைத்து படமாக்க போவதாக சொல்கிறார்கள்..

நான் எழுதிய பதிவும் இதுவும் 95% ஒத்து போதுங்க.. :)))

நித்யன் said...

கேபிளார் எங்கு சென்று படம் பார்க்கிறார்?

ஜெயா டிவியி்ல் சமீபத்தில் தங்களை பார்த்ததாக நண்பர் சொன்னார். நீங்கள் சொல்லவே இல்லயே... நல்லது நடக்கட்டும்.

சின்னத்திரை ஓகே. பெரிய திரை எப்போது?

பேரன்பு
நித்யன்

பிரசன்னா கண்ணன் said...

நம்ம ஊர் எம்.ஜி.ஆர், தெலுங்கு தேச என்.டி.ஆர் மாதிரி நம்ம சிரஞ்சீவி ஒரு கிராபிக்ஸ் ஆட்டம் போடறாரே.. அத சொல்ல மறந்துட்டீங்களே..
இன்னொரு விஷயம்.. சிரஞ்சீவிக்கு முகத்துல இருக்க அந்த தேஜஸ், ஈர்ப்பு அவர் பையன் கிட்ட இல்லையே..

பிரசன்னா கண்ணன் said...

மகதீரா பாத்த எபக்ட் தான் ஹாட் ஸ்பாட்-ல பிரதிபளிக்குது போல தெரியுதே :-)

க.பாலாசி said...

நல்ல ஆழ்ந்த விமர்சனம்...

நல்லாருக்கு தலைவா...இடையிடையே நீங்க போட்டிருக்கிற படங்களும் அதனூடே உங்க விமர்சனமும்...

butterfly Surya said...

போன வாரம் ராஜமுந்திரி போனது இதுக்கு தானா..??

அட என்னையும் கூப்பிட கூடாதா தல..

SurveySan said...

nice.

///இங்கே கந்தசாமிக்கு அதே செலவுதானாம்.
//

உ.குத்தா?

மஞ்சூர் ராசா said...

மொத்தத்தில் ஒரு சூப்பர் டூப்பர் மசலா படம் என தெரிகிறது.

Ashok D said...

தலைவரே.. விமர்சனம் அழகாயிருக்கு படத்தோட ஹீரோயின் மாதிரி :P

யோ வொய்ஸ் (யோகா) said...

தல நடிக்கிறாருன்னு கதை அடிப்பட்டிச்சி.. அப்படி நடிச்சா இது பப்படம் ஆகிடும்.

சூர்யா தான் இந்த மாதிரி படங்களுக்கு சரியான ஆள்..

ஷண்முகப்ரியன் said...

Super Review Shankar.

நாஞ்சில் நாதம் said...

தல இந்த படத்த ஆந்திரா போய் பாத்தீங்களா? :))

joe vimal said...

நாங்களும் பாதுடோம் ல நல்ல தான் இருக்கு காஜல் வாஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கிளைமாக்ஸ் தான் எனக்கு பிடிக்கவில்லை .தல நடித்தால் மாபெரும் பிளாப் தான் வேறு யாரவது நடியுங்கள் சாமி புண்ணியமா போகும் .

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Truth said...

நல்ல படம்னு நானும் கேள்விப் பட்டேன். கூடிய சீக்கிரம் பாக்கணும். பதிவு நல்லா இருக்குங்க கேபிள்.

kanagu said...

unagludaya padhivu ellam romba arumaya irukku na.. ungaloda field aana cinema va pathi pala thagavalgala koduthu irukeenga.. cinema enakkum pudicha field..

nethu ungaloda neraya pada vimarsanangal, padam epdi distribute panranga apram sethu padatha pathi neenga sonnatha ellam padichen.. nalla irundhudu.. athil irukkum kastamum purinjithu..

apram ilayarajavoda pinnani isai padhivugalum arumai.. naan avarin rasigan.... neengal sonathu pol avarudaya pinnani isai pala padangalukku uyir koduthu irukkindrathu... sameebathil endru parthal.. Ramana matrum Pithamagan padathirkku avalavu arumayaga isai amaithiruppar...

indha padathoda vimarsanamum super ah irundhudu... naan kadhaya maatum padikala... padam paakanum nu irukken :))

thodarandhu ezhuthavum anna... ungaludaya cinema muyarchikal vetri pera en vazhthukkal :))

ஜெட்லி... said...

ஆந்திரா பக்கம் எப்போ போனிங்க?
இல்ல டி.வி.டி யில் பார்த்திங்களா?

நம்ம தல நடிச்ச படம் எப்படி இருக்கும்?

கா.கி said...

நான் பார்க்க ஆவலா இருக்குற இன்னொரு தெலுங்கு படம். நீங்க எங்க பாத்தீங்க?? ஆன்லைனா???


அப்பறம், உங்க பார்வை, இங்க கொஞ்சம் தேவை --> http://creativetty.blogspot.com/2009/09/blog-post.html

Cable சங்கர் said...

@ முத்துகுமார்

ஆமாம் முத்துகுமார், பக்கத்தில் புத்தூர் போய் பார்த்தேன்.

Cable சங்கர் said...

/எப்படி அண்ணே, ஒரு மூணு மணி நேரத்துல இத்தன மேட்டர நோட் பண்றீங்க,

ஆமா, கந்த சாமி காரங்க மேல ஏன் இத்தனி காண்டு????
//

இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்குண்ணே..

காண்டு எல்லாம் இல்ல.. காசு வீணா போச்சேன்னு தான் வேற ஒண்ணுமில்ல..

Cable சங்கர் said...

/இங்கே வந்திட்டு போய்விட்ட பிறகு விமர்சனம் போட்ட உங்களின் வேகத்தை பாராட்டுகிறேன்//

வாங்க நைனா..ஆளையே காணம்?

நம்ம தமிழ்நாடு பூரா ரிலீஸ் கிடையாதுண்ணே.. அதான். பார்டர் போய் பாத்துட்டு வந்தேன்.

Cable சங்கர் said...

//மகாதீரா ... தல பண்றாரா இல்லையா.....?
இந்த படம் பார்பதற்காக ஆந்திர பார்டர் வரை சென்று தாயகம் திரும்பிய கேபிள் அண்ணனை வடபழனி கிளை கேபிள் பேரவை சார்பாக வரவேற்கிறோம் ...!!//

தலைமை கழகம் மகிழ்ந்து இந்த் பொன்னாடையை அணிவிக்கிறது.. சுகுமார்.

Cable சங்கர் said...

/தல பண்ணல. படம் டப் ஆகிறது.. ஷேர்கான் காட்சிகள் மட்டும் அர்ஜுனை வைத்து படமாக்க போவதாக சொல்கிறார்கள்..//

எனக்கென்னவோ.. தமிழில் பார்க்க பிடிக்காது..

//நான் எழுதிய பதிவும் இதுவும் 95% ஒத்து போதுங்க.. :)))
//

எப்படி இல்லாமபோகும் நாமெல்லாம் ஓரே குருப்பு இல்ல.. கார்கி

Cable சங்கர் said...

//கேபிளார் எங்கு சென்று படம் பார்க்கிறார்?

ஜெயா டிவியி்ல் சமீபத்தில் தங்களை பார்த்ததாக நண்பர் சொன்னார். நீங்கள் சொல்லவே இல்லயே... நல்லது நடக்கட்டும்.

சின்னத்திரை ஓகே. பெரிய திரை எப்போது?

பேரன்பு
நித்யன்
//

ஆமாம் நித்யன்.. புத்தூர் போய் வந்தேன். சின்னத்திரை மேட்டர் ஒண்னும் பெரிசில்லை ப்ளாக் ஆரம்பிப்பது எப்படின்னு லைவா சொல்லிட்டு வந்தேன் வருகைக்க் உ நன்றி

Cable சங்கர் said...

/மகதீரா பாத்த எபக்ட் தான் ஹாட் ஸ்பாட்-ல பிரதிபளிக்குது போல தெரியுதே :-)//

ஹி..ஹி.. சும்மா சொல்லப்படாது அதை நான் நேத்தே போட்டுட்டேன்.

Cable சங்கர் said...

@பாலாஜி
மிக்க நன்றி
@ செந்தில்குமார்
இல்ல படம் திரும்ப எடுத்தா ரொம்ப செலவாகும்னு தமிழ்ல டப் பண்ணுறாங்க

@ட்ரூத்
மிக்க நன்றி

Cable சங்கர் said...

@/போன வாரம் ராஜமுந்திரி போனது இதுக்கு தானா..??

அட என்னையும் கூப்பிட கூடாதா தல.//

அட அது எப்ப போனேன் . நேத்து புத்தூர் போனேன் தலைவரே..

Cable சங்கர் said...

@சர்வேசன்
உள்குத்தெல்லாம் இல்ல நல்ல வெளிகுத்துதான்.

@அசோக்
உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி..

@ஜெட்லி
டிவிடி இல்ல தியேட்டர்ல புத்தூர்..

தலைக்கெல்லாம் வேலைகாவாது..

Cable சங்கர் said...

@மஞ்சூர் ராஜா
மசாலாவாக இருந்தாலும் சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
@ஷண்முகப்பிரியன்
மிக்க நன்றி சார்

@நாஞ்சில் நாதம்
ஆமாம்.

@ஜோ
ஆமாம் ஜோ.

Cable சங்கர் said...

நன்றி யோவாஸ்
நன்றி இது நம்ம ஆளு..

Cable சங்கர் said...

உங்களது விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கனகு..

Cable சங்கர் said...

நன்றி ஹி..ஹி சும்மா ரவுண்டா இருக்கட்டுமேனுதான்.

அது சரி(18185106603874041862) said...

படம் விறுவிறுன்னு இருக்கான்னு தெரியலை...ஆனா, உங்க எழுத்து சும்மா செம ஸ்பீடு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கும் படம் ரொம்ப பிடிச்சிருந்தது. காஜல் அகர்வாலை முதல் முறையாக பஸ் ஸ்டாப்பில் ஆட்டோவில் போகும்போது ஹீரோ தொடுற சீனை (ஷூட்டிங்) நான் ஹைதராபாத்தில் பார்த்தேன்.

இந்த ஷூட்டிங் தான் நான் முதன் முதலாக பார்த்தது. அதற்காகவே படம் பார்த்தேன். படம் சூப்பர்.

பின்னோக்கி said...

ஏங்க, தெலுங்கு தெரியலைன்னாலும் படம் பார்த்தா புரியுமா ? அதைப் பற்றி ஒன்னும் சொல்லலை ?

பின்னோக்கி said...

ஒரு சின்ன சந்தேகம். காஜல் உங்க ஹாட் ஸ்பாட் படத்துக்கும், இந்த படத்து ஸ்டில்ல வேற மாதிரி இருக்காங்க. எதுங்க நிஜம் ?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ஒரு படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு இவ்வளவு விஷயங்கள் எழுத முடிகிறதென்றால் உங்கள் கவனிப்புத்திறன்...?!

கண்ணு போட்டுட்டேன் போங்க

Ashwini said...

nalla review.. padam enakku romba pudichithu

Sornakumar said...

Nice Review. When will be the DVD release for this movie.

மயில் றெக்க said...

இது ஜாக்கிசான் நடித்த மித் படம் மாதிரி தெரியுதே