
டிவிடியை சும்மா போட்டு பிரிண்ட் செக் செய்வோம் என்று போட்ட அடுத்த செகண்ட் என்னையும் அறியாமல் படத்துக்குள் இழுத்து சென்றது. District9.
1982 சவுத் ஆப்பிரிககவில் ஜோகன்ஸ்பெர்கில் ஒரு விண்கலம் வந்து நிற்கிறது.. அதனுள் தலைவனில்லாத, ஆயிரக்கணக்கான, ஏலியன்கள் உடல்நலமில்லாமலும், சத்தில்லமலும் மயங்கி போய் இருக்க, அவர்களை விண்கலத்திலிருந்து கீழிறக்கி, District 9 என்கிற ஒரு அகதிகள் முகாமை ஏற்படுத்துகிறது அரசு. சில ஆயிரங்களில் வந்த ஏலியன்கள் இப்போது பல்கி, பெருகி, 1.5 மில்லியனாக வளர்ந்து ஒரு ஏலியன் ஸ்லம்மாகவே இருக்கிறது
MNU என்கிற மல்டி நேஷனல் யுனைட்டெட் என்கிற தனியா ராணுவ நிறுவனம்தான் இவர்களை கட்டுபடுத்துகிறது. ஒரு கட்டத்தில் இவர்களையெல்லாம் டிஸ்ட்ரிக்ட் 9லிருந்து புதிதாய் ஊருக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள டிஸ்ட்ரிக்ட் 10க்கு மாற்ற முடிவு செய்கிறது நிறுவனம்.. அதற்காக அவர்களுக்கு எவிக்ஷன் நோட்டீஸ் கொடுக்க போகும் ஒரு அதிகாரியாய் பொறுப்பேற்கிறார். விக்கூஸ்..
அங்கு ஒவ்வொருவருக்காக எவிக்ஷன் நோட்டீஸ் கொடுக்கப் போகும் போது பல ஏலியன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில் கிரிஸ்டோப்ர் என்று அழைக்கப்படும் ஒரு ஏலியன், இந்த பூமியிலிருந்து தன் தாய் கப்பலை இயக்க பல லிட்டர் விஷய்ங்களீலிருந்து ,சொட்டு சொட்டாய் இருபது வருடங்கள் போராடி தயார் செய்திருந்த விமான எரிபொருளை, விக்கூஸ் கைபற்றுகிறார். அதை ஒரு முறை திறந்து பார்க்கும் போது, அந்த திரவம் அவரின் முகத்தில் பட்டு, அவர் நோய் வாய் படுகிறார். அவரின் உடலில் உள்ள டி.என்.ஏவும், அந்த் திரவமும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவரும் ஒரு ஏலியனாய் மாறுகிறார்.
முதல் அவரது கை மட்டும் ஏலியன் போல் உருமாற.. அவரை வைத்து அவரது நிறுவனமே டெஸ்ட் செய்ய ஆரம்பிக்க, அங்கிருந்து தப்பி ஓடி வேறு வழியில்லாமல், டிஸ்ட்ரிக்ட்9ல் ஒளிந்து கொள்கிறார். அப்போது அவருக்கும், கிரிஸ்டோபர் என்று அழைக்கப்படும் ஏலியனுக்கும் நட்பு ஏற்பட்டு, அவரின் மாற்றத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் அதற்கு அந்த திரவம் தேவை என்று கூற, அவரும் ஏலியனும் சேர்ந்து தன் அலுவலகத்திலிருந்து அந்த திரவத்தை கடத்தி வந்து தாய் களத்துடன் இணைக்கும் சிறுகலத்தை கிளப்ப, அந்த கலத்தை ராணுவம் சுட்டு வீழ்த்த, தாய் விண்கலத்திலிருந்து விழுந்த ரோபாட்டும் உயிர்பெற அதனுள் அமர்ந்து ஹீரோவும், ஏலியனும் போராட, கீழே விழுந்த சிறு கலத்தை கிரிஸ்டோபரின் பையன் சின்ன ஏலியன் இயக்கி கிளப்ப, நிசசயமாய் மூன்று வருடஙக்ளுக்குள் தான் திரும்பி வ்ந்து அவனை முழு மனிதனாக்குவேன் என்று சத்தியம் செய்து விட்டு செல்கிறது.
கிரிச்டொபர்.. தாய் கலத்துடன் இணைந்த சிறு கலம் கிளம்பி செல்ல, நாடே சந்தோசப்பட, டிஸ்ட்ரிக்ட் 9 அங்கிருந்து இடம் பெயர்ந்து டிஸ்ட்ரிக்ட் 10ல் இருக்க, இப்போது அங்கே 2.5மில்லியன் ஏலியன் வாழ்ந்து வருகிறதாய் டீவி செய்திகள் சொல்ல,
விக்கூஸ் இறந்து விட்டதாய் அவரின் மனைவியிடம் சொலல்ப்பட, ஆனாலும் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜாவை பார்த்து தன் கணவன் இன்னும் இறக்கவில்லை என்றாவது ஒருநாள் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையுடன் அவள் வாழ, இங்கெ டிஸ்ட்ரிக்ட்10ல் ஒரு ஏலியன் கீழே கிடக்கும் குப்பை சத்தையிலிருந்து ஒரு ரோஜாப்பூ போன்ற விஷயத்தை உருவாக்கி அதை பார்த்து கொண்டிருந்தது.. அது விக்கூஸ்..
வழக்கமாய் வரும் ஏலியன் படஙக்ள் போல் அல்லாமல், அவர்களுக்கு ஏதும் ஸ்பெஷல் சக்தி ஏதுமில்லாமல். வாழ்விழந்து அகதிகளாய் வாழும் மனிதர்களின் நிலை போன்ற ஒரு வாழ்க்கையை கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். அகதிகளின் முகாம், அங்கே அவர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள், மனித மாமிசம், மற்றும் ஏலியன் மாமிசம் சாப்பிடும் மனிதர்கள், அங்கே ஏலியன்களை உபயோகப்படுத்தும் கேங்க்ஸ்ட்ர்கள், மாபியா கும்பல்கள், ஏலியன்களை வைத்து டெஸ்ட் செய்யும் எம்.என்.யூ. என்று குட்டி, குட்டியாய் கதை சொல்கிறார்கள் டாக்குமெண்டரி பாணியில்.
ஏலியன்களின் உருவ அமைப்பு வேண்டுமானால் பயங்கரமாய் இருக்கலாம்.. ஆனால் சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் படத்தின் கேரக்டர்களாகவே மாறி விடுகிறது. ஒரே மாதிரியிருக்கும் ஏலியன்ங்களில் எது கிரிஸ்டோபர் எது வேறு ஏலியன் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு ஒன்றிவிடுகிறோம். அவ்வளவு தத்ரூபம்.
ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, மேக்கிங் என்று வழக்கமான விஷயஙக்ளிலிருந்து மாறுபட முயற்சி செய்திருக்கிறார்கள். ஏலியன்களின் பிரச்சனைகளூடே ஏலியனாய் மாறி கொண்டிருக்கும் மனிதனின் பிரச்சனையும், ஒரு சேர ஓட, உருக்கம்.
District -9 – Not To Miss..
டிஸ்கி
ஏலியனை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கும் நைஜீரியாவிலிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதாம். படத்தை எடுத்த சோனி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று.. ஏலியனை வைத்து எடுத்தாலும் பிரச்சனையா.. ?
சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு பதிவை படிக்க இங்கே அழுத்தவும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
aana innum Chennai ku theater la varave illa :((
august maasame paper la AD paathen..
eppa varuthu nu theriyuma na ungalukku??
இந்த weekend-ல கண்டிப்பா பாக்குறேன்..
அருமையான படம்...!! ரசிக்க மாட்டேங்கறாங்களே..! :( :(
அடிக்கடி ஹாலிவுட் பட விமர்சனம் போடுங்க பாஸ்... மொக்க டி.வி.டி வாங்குற செலவும் மிச்சம் ஆகும்....
( ஒ. போ. )
நைஜீரியா காரங்களுக்கு ஏன் காண்டு???
http://en.wikipedia.org/wiki/District_Six,_Cape_Town
Google "xenophobia" and read about "District 6" from link above, you might get the social message in the movie.
பாலா எழுதியிருந்தார்ல!
டிஸ்கி... ஹி ஹி ஹி.
பார்க்க வேண்டிய படம். நல்ல விமர்சனம் கேபிள்.
ஒரு வேண்டுகோள்- குடைக்குள் மழை படத்தோட டி.வி.டி கிடைக்குமா? சில வருடங்களுக்கு முன்பு பார்த்து நான் பிரமித்துப் போன படம்.
விமர்சனம் நன்றாக இருந்தது,ஷங்கர்,வழக்கம் போலவே.
There is a competition running in my blog http://kaluguppaarvai.blogspot.com/ currently, please participate if you have time.
டிவிடி நல்ல பிரிண்ட் கிடைக்குது கனகு
@பிரசன்னா
அப்படின்னா உடனே பாருங்க.. ஆமா நீங்க எங்க இருக்கீங்க..?
@ஹாலிவுட் பாலா
சில படங்களை பத்தி ஏற்கனவே ஒரு மித் இருக்கும் மக்களுக்கு உள்ள வந்து பாத்தப்புறம் தான் தெரியும்.. அதுனால் கூட இருக்கலாம்
நிச்சயமா பாரு சுகுமார் நல்லாருக்கு
@சென்ஷி
ஆமாம் சென்ஷி
@ச்யோ
இல்லை தலைவரே.. நான் படங்கள் மட்டுமின்றி கதை, கட்டுரைகள், தமிழ், தெலுங்கு, இந்தி பட விமர்சனஙக்ள் என்று எழுதுவதால் நிறைய படஙக்ள் எழுத முடிவதில்லை
@தராசு
அண்ணே.. கற்பனையா ஜோஹன்ஸ் பர்க்கில் இருக்கிற ஆட்கள் மனிதகறி, ஏலியன் கறி சாப்பிட்றதா சொன்னதால..
@புலவன் புலிகேசி
அப்படியா. உங்கல் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி
@நோ
நானு பார்த்தேன்.. லிங்குக்கு நன்றி
@பப்பு
ஆமாம் பப்பு..பாலாவும் எழுதியிருந்தார்
நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்
@எவனோ ஒருவன்
நன்றி.. புரிஞ்சிருச்சா..ஓகே..ஒகே
2ட்ருத்
நன்றி.. குடைக்குள் மழை படத்தோட டிவிடி தேடி பார்க்கிறேன்
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
@சரவணகுமார்
நன்றி
@ஷண்முகப்பிரியன்
மிக்க நன்றி
@அக்னிபார்வை
பாத்துருங்க
ஒரு முறை ஆங்கிலத்தில் டிவிடியில் பாருங்கள் சப்டைட்டில் இருக்கும் எனக்கென்னவோ தமிழில் டப் செய்து பார்த்தால் பிடிக்காது.
@பப்பு
நுண்ணரசியல் இருக்கு
@சான்
மிக்க நன்றி சான்.. எனக்கு சாப்பிட தெரிந்த அளவுக்கு சமைகக் தெரியாது
@முருகானந்தம்
நன்றி.. நிச்சயமாய் கலந்து கொள்கிறேன்
@ஜெட்லி
பார்த்துடுங்க..
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?
நன்றி கேபிள். சில வருடங்களாக லண்டனில் இருக்கிறேன். கூடிய விரைவில் சென்னை வந்து விட வேண்டும். விட மாட்டேங்கிறாங்க. ஆனா வந்திருவேன்.
சைன்ஸ் பிக்ஷன் என்றாலே அறிமுகம்தான் மிக முக்கியம். அதுவும் இந்தப்படத்தில் கோழிக்கும் நட்டுவாக்காலிக்கும் ஓணானுக்கும் க்ராஸ் செய்தது போன்ற ஒரு உருவம் கொண்ட ஏலியனை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால் மிக அனாயசமாக மிக வேகமாக நகரும் முதல் 15 நிமிடப்படம் திரைக்கதை உத்தி அபாரம். ஆரம்பம் மட்டுமல்ல, படம் முழுக்கவே வேகம் வேகம் வேகம்!
டிஸ்ட்ரிக்ட் 6 என்று கூகுளில் தேடிப்பாருங்கள். இதை ஏன் சும்மா சைன்ஸ் பிக்ஷண் என்று மட்டும் சொல்லாமல் சோஷியல் பேரடி என்றும் சொல்கிறார்கள் என்பது தெரியவரும்.
அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்