Thottal Thodarum

Sep 20, 2009

கண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.கண்ணுக்குள்ளே திரைப்படத்தின் இயக்குனர் திரு. லேனா மூவேந்தருடன் ஒரு பேட்டி..

உங்க படத்தை பற்றி சொல்லுங்க?
ஒரு நல்ல படத்தை, வித்யாசமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை, மனதை வருடும் காட்சிகளோடு, எல்லாத்துக்கும் மேல ராஜா சாரோட இசையோடு கொடுத்திருக்கிறேன்ற, சந்தோஷத்தில இருக்கேன்.. வர்ற 25ஆம் தேதி ரிலீஸ்..

உங்க கதாநாயகனை பற்றி..?
கதாநாயகனா கும்மாளம் படத்தில் நடிச்ச மிதுன் நடிச்சிருக்கார். இவரு கிட்ட முதல்ல கதை சொல்லப் போகும் போது, நான் சொன்ன முத விஷயம்.. “சார்.. படத்துல பஞ்ச் டையலாக் கிடையாது, பில்டப் கிடையாது.. ஃபைட் கிடையாது.. ஏன்.. படத்தோட ஆரம்பத்துல முத 20 நிமிஷம் உங்களுக்கு டயலாக்கே கிடையாது.” இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா. ஏற்கனவே ஒரு ஹீரோ கிட்ட நான் கதை சொன்ன போது இதெல்லாம் இல்லைன்னு சொன்னாரு.. அதனால் தான் முதல்லேயே உங்க கிட்ட சொல்றேன். என்றவுடன்.. பரவாயில்லை சொல்ல்லுங்கனு சொன்னாரு. கதை கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்து ஒப்பு கொண்டார். இந்த படம் மூலம் மிதுன் நிச்சயமாய் தமிழ் சினிமாவில் பேசப்படக்கூடிய நடிகராய் இருப்பார்.

உங்க கதாநாயகிகள்..?
அனு என்கிற கேரள வரவு. மிகவும் குடும்ப பாங்கான, பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கேரக்டர்.. நன்றாக நடித்திருக்கிறார்.

இன்னொரு ஹிரோயின் அபர்ணா.. இதுவரை நீங்க யாரும் பாக்காத ஒரு கோணத்தில அவஙக் கலக்கியிருக்காங்க.. அவ்வ்ளவு பாந்தமான நடிப்பை கொடுத்திருக்காங்க.. இந்த படத்தின் மூலமா அவங்க நடிப்பு பேசப்படும் என்று உறுதியாயிருக்கிறேன்.

ராஜா சாருடன் ..?
இந்த கதை ரெடி பண்ணிய உடனேயே.. இசை சம்மந்தப்பட்ட படம்,வேற இதுக்கு ராஜா சார்தான் தவிர வேற யாரு மனசுல வருவார் சொல்லுங்க.. முதல்ல அவர்கிட்ட அட்வான்ஸ் கொடுக்க போன போது வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. முதல்ல கதை சொல்லுங்க, அப்புறம் எல்லாம்னு சொன்னவுடனே.. கதைய கேட்டாரு.. கேட்டவுடனே.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. “நீங்க சொன்ன மாதிரியே படம் பண்ணிடுங்க்.. நான் தான் மியூசிக்” என்றதும்.. என்க்கு ரொம்ப சந்தோஷமாயிருச்சு.. படத்தோட வெற்றிக்கு ராஜா சாரோட பாடல்களும் பிண்ணனி இசையும் மிகப் பெரிய காரணமா இருக்கும்.

எனக்கு தெரிந்து கோடம்பாக்கத்துல இருக்கிற உதவி இயக்குனர்கள் அத்துனை பேரின் மனசிலும் ஒரு படமாவது அவரோட ஒர்க் பண்ண்னும்ங்கிற ஆசை நிச்சயமா இருக்கும்.

படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்து உங்களுக்கு வந்த பீட்பேக்?
சென்சார்ல படம் பார்த்துட்டு அவங்க சொன்னது.. ரொமப் நாள் ஆச்சு இந்தமாதிரி ஒரு நீட் அண்ட் க்ளீன் ப்டம் பாத்துன்னு சொன்னாங்க.. குடும்பத்தோட பார்க்ககூடிய ஒரு படமா வந்திருக்குனு சொன்னாங்க.. க்ளைமாக்ஸ் மனசை உருக்கிருச்சினு கண்கலங்கி பாராட்டினாங்க.... அதுதான் என்னோட லட்சியமும், கூட,, ஒரு வன்முறையில்லாத, மசாலாத்தனம் இல்லாத, இயல்பான ஒரு கதையை அதோட ஓட்டத்தோட தரணுங்கிறதுதான் என்னோட ஆசை.. அதே போல தமிழக மக்கள் நல்ல படங்களை வரவேற்க என்னைக்குமே தயங்க மாட்டாங்க.. அநத நம்பிக்கையில் மக்களின் கண்களின் வழியா மனசுக்கு போக முயற்சி செஞ்சிருக்கேன்.. என் கண்ணுக்குள்ளே படம் மூலமா.. நன்றி..


Post a Comment

21 comments:

எவனோ ஒருவன் said...

அவர் சொன்னதெல்லாம் ஓக்கே... நீங்க படம் பாத்துட்டு சொல்லுங்க.

கலையரசன் said...

பட்டாபட்டி டவுசரு போட்டவருதான் ஹீரோவா?

அவருக்கு பஞ்ச் டயலாக் வச்சா நல்லாயிருக்கும்!!

யாத்ரீகன் said...

>>வித்யாசமான கதையம்சம் <<<

:-)) adangavey maatangala yaarum :-)

மங்களூர் சிவா said...

மேல இருக்கற மூனு கமெண்ட்டுக்கும் ரிப்பீட்டு!

D.R.Ashok said...

உள்ளேன் ஐயா..

வெண்ணிற இரவுகள்....! said...

அன்புள்ள சங்கர் தாங்கள் நிறைய புது படங்களை அறிமுகம் செய்கின்றிர்கள் ......வாழ்த்துக்கள்.

க.பாலாஜி said...

inthe padathinai patriya ungalin vimarsanathai ethirparkiren.

butterfly Surya said...

வாழ்த்துகள்.

தல.. இயக்குநர் உங்க நண்பரா..??

தியாவின் பேனா said...

சங்கர் உங்களுக்கு நன்றி
புதுப் படங்கள் பற்றி
முதலில் சொல்வது நீங்கள் தான்

சங்கரராம் said...

இதுக்கு முன்னாடி எத்தனை பேரை பார்த்திருக்கிறோம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பார்த்திருவோம் தம்பீ..!

செந்தில் நாதன் said...

>>வித்யாசமான கதையம்சம் <<<

இப்படிதான் எல்லாரும் சொல்றாங்க!! பார்போம்!!

உங்க விமர்சனத்துக்கு அப்பறம் தான் படம் பார்க்கலாமா வேண்டாம்னு முடிவு பண்ணனும்!! விமர்சனம் biased-a இருக்காதே?

பிரசன்னா said...

சங்கர் அண்ணா, இப்போ தான் கவனிச்சேன்.. விளம்பர பலகைகளின் விலை 100, 250, 300-னு ஏறிகிட்டே போகுது.. :-)

pappu said...

ஏங்க இந்த வேலை எல்லாம்? நீங்க உங்க பேட்டிய போடுங்க! இந்த மாதிரி வித்தியாசமான படம் குடுக்குறவங்க பேட்டி படிச்சு ஓஞ்சாச்சு!

இராகவன் நைஜிரியா said...

ஆண்டவன் அருளால் படம் வெற்றி பெறும்.

எவனோ ஒருவன் said...

//நீங்க உங்க பேட்டிய போடுங்க!//

கேபிள் அண்ணே, நா வேனா உங்களப் பேட்டி எடுக்கவா?

பிரபு . எம் said...

பாஸ்... கண்டிப்பா இந்த ஹாட்ஸ்பாட் பகுதி உங்க வலைப்பூவில் இருக்கணுமா?

Cable Sankar said...

@எவனோ ஒருவன்

நிச்சய்மாய்

@கலையரசன்
அவரு இல்லீங்க ஹீரோ.. :)

@யாத்ரீகன்

ஹா.ஹா..

@மங்களூர் சிவா

நன்றிங்க உங்க ரிப்பீட்டுக்கு

Cable Sankar said...

@அசோக்
நன்றி

@வெண்ணிர இரவுகள்
ஏதோ என்னாலான ஒரு உதவி

@பாலாஜி
நிச்சயமாய் பாலாஜி

@பட்டர்ப்ளை சூர்யா
ஆமாம்

@திவ்யாவின் பேனா
ந்னறி

@சங்கரராம்
அதானே.. :)
@உண்மைதமிழன்
உதயம் தியேட்டர்ல பாருங்க அண்ணே

Cable Sankar said...

@செந்தில்நாதன்
நிச்சயமாய் பயாஸ்ட்டாக இருக்காது

@ப்ரசன்னா
பின்ன எப்படி நாஙக் பொழைக்க்றது:(

@பப்பு
சும்மானாச்சும் தான். இந்தமாதிரியான சின்ன படத்தை அறிமுகப்படுத்தலாமேன்னுதான்.. பாருங்க.. நிறைய பேருக்கு வர்ற சின்ன படங்கள் தெரியறது இல்ல

Cable Sankar said...

@இராகவன் நைஜீரியா
நன்றி

@எவனோ ஒருவன்
போடுங்களேன்

@பிரபு. எம்

ஏன் ஏதாவது ப்ரச்சனையா..?