Thottal Thodarum

Sep 10, 2009

இசையெனும் “ராஜ” வெள்ளம் –4

இளையராஜா – மணிரத்னம்
Illaiyaraj

தளபதி

கமல், ராஜா, மணிக்கு எப்படி ஒரு நாயகனோ, அது போல ரஜினி, ராஜா, மணிக்கு இந்த படம. படம் முழுவதும் மணியும், ராஜாவும் ஒரு சாம்ராஜயத்தையே விரவியிருப்பார்கள்.


படத்தின் முதல் காட்சியிலேயே ராஜா வேலையை ஆரம்பித்திருப்பார். சில்ஹவுட்டிலிருந்து வெளியே வரும் ரயிலின் சத்தத்துடன், கூடவே அதற்கீடான புல்லாங்குழல் இசையை ரயில் கூவல் போல, ஆரம்பித்து ஒரு அழுத்தமான ஆரம்பத்தை, ஆரம்பித்து வைப்பார். சின்ன தாய் இவள் பாட்டு மூலமாய்,


அதே போல் ரஜினியின் அறிமுக காட்சியான சண்டை காட்சி, அந்த காட்சியில் ரஜினி போடும் சண்டையின் உக்கிரத்தைவிட, ராஜாவின் ஆக்ரோஷமான பிண்ணனி இசை ரஜினியின் கேரக்டரை உச்சத்துக்கு கொண்டு போய் விடும். ஆங்கில படத்துக்கு ஈடான இசை இந்த காட்சியில் இருக்கும்.இன்னொரு காட்சி மம்மூட்டியும், ரஜினியும் ஒரு பாலத்தில் நேருக்கு நேர் பார்த்து கொள்வார்கள்,  அப்போது சண்டைக் காட்சியில் பயன்படுத்திய அதே பிண்ணனி இசையை பயன்படுத்தியிருப்பார். ரஜினியின் வீர்யத்தை காட்ட எப்படி சண்டைகாட்சியில் அந்த இசை பயன்பட்டதோ, மம்முட்டி ஒரு அமைதியான, ஆனால் ஆழுத்தமான ஆள், என்பதை அவர் வரும்போதும், பார்க்கும்போதும் வரும் பிண்ணனி இசை, அவர் பேசும்போது அமைதியாகிவிடும். அந்த அமைதியே அவரின் கேரக்டருக்கும் மேலும் ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.ஸ்ரீவித்யாவும், ரஜினியும் சந்திக்கும், காட்சி இன்னொரு மறக்க முடியாத நெகிழவைக்கும் பிண்ணனி இசையாகும். அந்த காட்சி உங்கள் கண்களில் நீரை வரவழைத்தது என்றால் அதற்கு ராஜாவை தவிர வேறு யாரும் காரணமில்லை.


பிண்ண்னி இசை பற்றிய கட்டுரை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை, ராக்கம்மா கைய தட்டு, பாடலுக்கு  அவர் செய்த கம்போஸிங், ஆர்கெஸ்ட்ரேஷன் இன்னும் வரும் காலங்களில்  வருகிற இசையமைப்பாளர்களுக்கு ஒரு பாடம்.  சுந்தரி கண்ணால் ஒரு சேதியில், வரும் சமுராய் போர் வீரர்களின் போர் காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பிண்ணனி இசை அம்மம்மா.. அதை எப்படி வார்தைகளால் வர்ணிப்பது..

காதல் காட்சிகளுக்கு சுந்தரி பாட்டையும், புத்தம் புது பூ பூத்ததோ, பாடலையும் பல சமயஙக்ளில் வேறு வேறு உணர்வுகளை வெளிபடுத்த பயன்படுத்தியிருப்பார்.

 


தளபதி படத்துக்கான ‘தளபதி” என்கிற ஒரு பாட்டு படம் முழுவதும் வரும். எனக்கு தெரிந்து முதல் முதலில் தீம் மீயூசிக் கான்செப்டை இந்த படத்தில் ராஜாதான் அறிமுகபடுத்தினார் என்று நினைக்கிறேன்.உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

35 comments:

வழிப்போக்கன் said...

nice

Indian Share Market said...

cable anna its nice

நாஞ்சில் நாதம் said...

Nice

Ashok D said...

தலைவரே அநியாயத்துக்கு cutshort பண்றீங்க...

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு தெரிந்து முதல் முதலில் தீம் மீயூசிக் கான்செப்டை இந்த படத்தில் ராஜாதான் அறிமுகபடுத்தினார் என்று நினைக்கிறேன்.

//

இல்லையண்ணா. அவர் அதை அறிமுகம் செய்தது ஒரு மொக்கைப் படத்தில். அது....மை டியர் மார்த்தாண்டன்.

Venkatesh Balasubramanian said...

I think Raja introduced the concept of theme music even before. I remeber in Mouna ragam during karthick episode, there use to be a wonderful piece in piano

வந்தியத்தேவன் said...

காட்சிகளைப் பார்த்து புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். இதுபோல் இனியொரு படம் ரஜனியால் நடிக்கமுடியாது. ராஜா ரஜனி மணி என்ற மும்மூர்த்திகள் கலக்கிய படம்.

நையாண்டி நைனா said...

nalla virunthu.

Ashoknraj said...

Ashoknraj said...

கலக்கிட்ங்க தல - நல்ல மெட்டர்

GHOST said...

எப்பவும் போல பதிவு நல்லா இருக்கு, பிரபலமான படங்கள் மட்டும் இல்லாம ராஜா பாடல்களுக்காக ஒடிய படங்களையும் எழுதுங்கள்

க.பாலாசி said...

//வெளியே வரும் ரயிலின் சத்தத்துடன், கூடவே அதற்கீடான புல்லாங்குழல் இசையை ரயில் கூவல் போல, ஆரம்பித்து ஒரு அழுத்தமான ஆரம்பத்தை, ஆரம்பித்து வைப்பார்.//

படம் பார்க்கும் போது இதை நானும் உணர்திருக்கிறேன்...ப்ச் சான்சே இல்லை..மிகவும் அருமையான காட்டி அது...

பாலா said...

ஷங்கர்,

இந்த பாப்அப் (?) ஆட், எல்லாம் கொஞ்சம் குறைங்க தல. உங்க பேஜுக்கு வந்தா.. ஆட்டோமேட்டிக்கா.. வேற ஆட் பேஜுக்கு போய்டுது.

Raman Kutty said...

ஒரு விஷயம்.. ராஜா, இசையமைச்சதுக்கப்புறமா.. மேலும் ஏதாவது சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று பாம்பே ரெக்கார்டிங் சென்டர்களில் கேட்டு இருக்கிறார்கள், அதற்கு அவர்கள் இதற்கு மேல் இதில் தொழில்நுட்ப ரீதியாக எதுவும் செய்வதிற்கில்லை என்று சொல்லி விட்டார்களாம், இது இதன் தயாரிப்பாளர், தூர்தர்ஷனில் சொன்னது. ஹும், அதுதான் இளையராஜா.இதுதான், மணியும் ராஜாவும் சேர்ந்து பணி செய்த கடைசிப்படம் என்பது இங்கு கவனிக்கப்படத் தக்கது..

manasu said...

ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா

மொட்டை மொட்டை மொட்டை மொட்டை

the great...........

வேறன்ன சொல்ல..................

சில்க் சதிஷ் said...

கேபிள் சங்கர் நீங்க என்னைக்குமே யூத்து

கோபிநாத் said...

தல

அருமை..அட்டகாசம் ;))

ஆனா இன்னும் எதிர்பார்த்தேன். வீடியோகளை போட்டு ஒன்னும் சொல்ல முடியமால் பண்ணிட்டிங்க.

நன்றி ;))

Cable சங்கர் said...

@வழிபோக்கன்
நன்றிஒ

@இந்தியன் ஷேர் மார்கெட்
மிக்க நன்றி

@நாஞ்சில் நாதம்
நன்றி

Cable சங்கர் said...

/தலைவரே அநியாயத்துக்கு cutshort பண்றீங்க...
//

என்ன இப்படி சொல்லிட்டிங்க அசோக்?

Cable சங்கர் said...

/இல்லையண்ணா. அவர் அதை அறிமுகம் செய்தது ஒரு மொக்கைப் படத்தில். அது....மை டியர் மார்த்தாண்டன்.
//

அட ஆமால்ல..

Cable சங்கர் said...

/ think Raja introduced the concept of theme music even before. I remeber in Mouna ragam during karthick episode, there use to be a wonderful piece in piano//

அது பிஜிஎம் வெங்கி.. தீம் மீயூசிக் என்பது வேறு..அப்படி பார்த்தால் ராஜாவின் படத்தில் எல்லாம் ஒரு பாட்டின் மீயூசிக்கை படம் பூராவும் உபயோகிப்பார்.

Cable சங்கர் said...

/காட்சிகளைப் பார்த்து புல்லரிக்க வைத்துவிட்டீர்கள். இதுபோல் இனியொரு படம் ரஜனியால் நடிக்கமுடியாது. ராஜா ரஜனி மணி என்ற மும்மூர்த்திகள் கலக்கிய படம்.
//

ஆமாம் வந்தியத்தேவன்

Cable சங்கர் said...

நன்றி நையாண்டி நைனா, அசோக் ராஜ் உஙக்ள் வருகைக்கும் ,கருத்துக்கும்

Cable சங்கர் said...

/எப்பவும் போல பதிவு நல்லா இருக்கு, பிரபலமான படங்கள் மட்டும் இல்லாம ராஜா பாடல்களுக்காக ஒடிய படங்களையும் எழுதுங்கள்
//

கண்டிப்பாய் எழுதலாம் கோஸ்ட் நன்றி

Azhagan said...

If my memory is right, Gangai Amaran scored music for "my dear Marthaandan"

Cable சங்கர் said...

@பாலாஜி

நன்றி பாலாஜி

@ராமன் பேஜஸ்
மேல் தகவலுக்கு மிக்க நன்றி ராமன்

Cable சங்கர் said...

/ஷங்கர்,

இந்த பாப்அப் (?) ஆட், எல்லாம் கொஞ்சம் குறைங்க தல. உங்க பேஜுக்கு வந்தா.. ஆட்டோமேட்டிக்கா.. வேற ஆட் பேஜுக்கு போய்டுது//

இதுக்கு முன்னாடி போட்டிருந்த ஒரு விட்ஜெட்னால் அது வந்திச்சு.. அதை கண்டுபிடிச்சு தூக்கிட்டேன். இப்ப என்கிட்ட வரல்.. உங்களுக்கு வருதா..? பாலா..

Cable சங்கர் said...

@மனசு

ஆமா.. மொட்டை.. மொட்டைதான்

@சதீஷ்குமார்
நீஙக் சொன்னா சரியாத்தான் இருக்கும் மிக்க நன்றி

Cable சங்கர் said...

/தல

அருமை..அட்டகாசம் ;))

ஆனா இன்னும் எதிர்பார்த்தேன். வீடியோகளை போட்டு ஒன்னும் சொல்ல முடியமால் பண்ணிட்டிங்க.

நன்றி ;))
//

சில ச்மயங்களில் சில விஷயஙக்ளை எழுதி சொல்வதை விட, விஷுவல் நிறைய சொல்லும் அதனால்தான் விஷுவலாய் கொடுத்துவிட்டேன். உங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி

Cable சங்கர் said...

/If my memory is right, Gangai Amaran scored music for "my dear Marthaandan"//

இல்லை அழகன் உங்கள் மெமரி ராங்.. மைடியர் மார்தாண்டனுக்கு இளையராஜா தான் இசை.. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

நெருப்புச் சக்கரம் said...

http://www.youtube.com/watch?v=ppNDnGyrw-0

listen this.....

நெருப்புச் சக்கரம் said...
This comment has been removed by the author.
நெருப்புச் சக்கரம் said...

And Raja introduced the theme song long before....even in Sigappu rojakkal....just hear the theme for Kamal from the starting......the theme tells the story....it changes as kamal changes his character because of sridevi....kamal manam menmayaagiratha theme moolamthaan solli iruppanga....great....

And even in jhonny....the theme is very good....(this theme was copied by his son in 7G theme...)

I can't remember some movies...but Raja started this theme music long before Mouna raagam....

நெருப்புச் சக்கரம் said...

I got it...For J.Mahendran movies...Mullum Malarum...and Uthiri Pookal....rendulayume kathayin nayaganukku oru theme pottu iruppar....i would say the best of two is Uthiri pookal....Theme for vijayan character....atha kettathume namakke oru maathiriya irukkum.....try thos also...

Jacks said...

A Good post. But you must have mentioed the temple sceen between Rajni & Sri Vidya with the train sound as a back ground. This is after Rajni would come to know that she is his mom.