பைரஸியும் சினிமாவும் -1
பைரஸியும் சினிமாவும். நியாயமாய் சினிமாவும் பைரஸியும் என்று தான் ஆர்மபித்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் சினிமா என்றில்லாமல் எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் ஆக்டபஸாய் ஆக்கிரமித்து அழித்துக் கொண்டிருப்பது பைரஸி என்பதால் அது முதல் நிலையில் செல்ல வேண்டிய கட்டாயம். சென்ற வாரம் என்னுடய புதிய திரைப்படமான “6 அத்யாயம்” திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தேறியது. இது ஒரு அந்தாலஜி திரைப்படம். ஆறு கதைகள், ஆறு இயக்குனர்கள், ஒரே ஜெனர். முக்கியமாய் உலக திரைப்பட வரலாற்றில் முதல் முறையாய் அனைத்து கதை க்ளைமேக்ஸ்களும் கடைசி அரை மணி நேரத்தில் காண்பிக்கப்படும் படம். இப்படியான சிறப்புகள் கொண்ட சுயாதீன திரைப்பட விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியவர்கள் அனைவரும் பேசிய முக்கிய விஷயம் நாம் ஐந்து வாரமாய் பேசிய ஓ.டி.டி டிஜிட்டல் ப்ளாட்பார்ம் பற்றியும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றியும்.பைரஸி பற்றியும் தான். சினிமா டிஜிட்டலாய் மாற ஆரம்பித்ததிலிருந்த காலத்திலிருந்தே பைரஸி ஆரம்பித்துவிட்டது என்று சொல்ல வேண்டும். ஊர் ...