Posts

Showing posts with the label johny gaddar.. review

Happy Days

Image
ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.. படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம். தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா.. ...

எ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)

Image
ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவல்களை படித்திருக்கிறீர்களா? ஹிட்காக் படங்களை பார்த்து பேயறைந்தார் போல் இருந்திருக்கிறீர்களா? விரல் நகங்களை கடித்தபடியே ஓரு முழு படத்தையும் டென்ஷனுடன் பார்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் இதோ இங்கே ஓரு “ஜானி கத்தார்” கத்தார் என்றால் “துரோகி” என்று அர்த்தம் என நினக்கிறேன்..( எதோ எனக்கு தெரிந்த இந்தியில்) ரொம்ப சிம்பிளான கதை.. கதையின் நாயகன் விக்ரம். அவனுக்கு வெகு விரைவில் பணக்காரனாவதற்கு ஆசை. அவனுக்கு காதலி வேறு இருக்கிறாள். அவள் வேறு யாருமில்லை விக்ரமுடய பார்ட்னர் ஷர்துலின் மனைவி தான். ஷர்துல் ஓரு டிஸ்கோ பார் நடத்தி வருபவன். இவர்களின் இன்னொரு பார்ட்னர் ப்ரகாஷ் சூதாட்ட கிளப் வைத்து நடத்துபவன்.அவன் ம்னைவி ஓரு பூயூட்டி பார்லர் வைத்து நடத்துகிறாள். இன்னொரு பார்ட்னர் ஷிவா.. இளைஞன், பலசாலி, பாடிபில்டர். இவர்களுக்கெல்லாம் தலைவன் சேஷாத்திரி. வயதானவர், இறந்து போன மனைவியின் குரலை தினம் தினம், டேப் ரிக்காடரில் போட்டு கேட்டபடி இருப்பவர்.. புத்திசாலி.. இம்மாதிரியான கெட்ட காரியங்களில் அனுபவசாலி.. மற்றவர்கள் இவரை பார்த்தால் மரியாதையும், ப்யமும் உண்டு. ஷேசாத்திரியின் நண்பன் ப...