Posts

Showing posts with the label எண்டர் கவிதைகள்

எண்டர் கவிதைகள் -30

கைதட்டியாகிவிட்டது விளக்கேற்றியாகிவிட்டது தினமொரு சமையல் என சமையல் குழுவில் போஸ்ட் போட்டாகிவிட்டது வெறி கொண்டு அனைத்து சீரீஸுகளையும் படங்களையும் பார்த்தாகிவிட்டது தினம் பேசும் நண்பர்களிடையே உங்க ஏரியாவுல கொரானா வந்தாச்சா? கையில பணமேயில்லை என்ன பண்ணுறது? போன்ற பேச்சுக்களைத் தவிர பேச ஏதுவுமில்லாமல் போய்விட்டது இன்னுமொரு பதினைந்து நாளே என நான்கு மாசங்களை ஓட்டியாகிவிட்டது பேசினால் மூச்சு முட்டி இறந்துவிடுமோ? என்கிற அச்சம் வீட்டினுள் நுழைந்து மாதங்களாகிவிட்டது. யாரிடமும் எதையும் பேச தோணவேயில்லை புதியாய் முளைத்திருக்கும் வங்கிக் அழைப்பாளர்களைத் தவிர, ஏனென்றால் அவர்கள் தான் என் பாதுகாப்பை முக்கியமாய் நினைக்கிறார்கள். அட்லீஸ்ட் வரும் அக்டோபர் மாதம் வரைக்குமாவது. அதன் பிறகு அவனும் பேசுவானா என்று தெரியவில்லை ஜெய் கொரோனா.

எண்டர் கவிதைகள் -28

உன்னைக் காண ஓர் நீண்ட பயணம் ஆயிரம் காரணங்கள் எனை வரவேற்க நீ இல்லாமல் போனதற்கு மீண்டுமொரு நீண்ட பயணம் உனைக் காண நீ இல்லாமலிருக்க ஆயிரம் காரணங்களிலிருக்குமென்று  எதிர்பார்த்தே பயணிக்கிறேன். அன்புதான் எத்தனை வலியை சுமக்க பழக்குகிறது.

எண்டர் கவிதைகள் -27

அன்பு எங்கேயும் போகவில்லை. உனக்கான பிரவாகமாய்  என்னுள்ளேயே இருக்கிறது அது உனக்கு தெரிந்தே இருந்தாலும்,  கிடைக்கபெறும் அன்பின் மிகையால்  என் அன்பை தவிர்க்கிறாய் தூக்கிப் போடுகிறாய். அது ஏன் என என்னால்  புரிந்து கொள்ள முடிவதற்கான காரணம் அன்பு. எப்போதும் உன்னை வெறுப்பதுமில்லை, என்றைக்கும் உன்னை நேசிப்பதை கைவிடுவதுமில்லை.

எண்டர் கவிதைகள் -27

கார் முழுவதும் பரவிக்கிடக்கிறது  உன் வாசனை நீ இல்லாவிட்டாலும் என் மூளையிலிருந்து பெருகும் காமம் போல உன் வாசனையும்

எண்டர் கவிதைகள் -27

Image
கிளர்ந்தெழுந்து அடங்கிவிட்ட காமம் கொடுக்கும் அவ்வளவுதானா? என்கிற உணர்வு ருசிக்குமிருக்கிறது.  கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா -16/11/15

Image
பேய் மழை பெய்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் நான் கே.கே.நகரிலிருந்து விருகம்பாக்கம் வரை மட்டுமே அதுவும் காரில் சென்று கொண்டிருக்கிறேன். அதுவும் ட்ராபிக் இல்லாத மதிய நேரமாய் பார்த்து. டி.நகர் பக்கமெல்லாம் போக வர தைரியமில்லை. பாதி நேரம் இருக்கும் சப்வேயெல்லாம் தண்ணீர் ரொம்பி நீச்சல் குளமாய் காட்சியளிக்கிறது. நடுவில் மழையில்லாத ஒரு நள்ளிரவில் என் தாய் மாமா அகால மரணமடைந்தார். மாஸிவ் அட்டாக். பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர் சப்வே எல்லாம் தண்ணீர் இல்லாமல் இருந்தது. அவர் செய்த புண்ணியம். மழைக்காலத்திற்காக எந்தவிதமான முன்னேற்பாடும் செய்யாத ஒர் அரசாங்கம். இருக்கும் வரை நமக்கென்ன என்று ப்ளாஸ்டிக் மற்றும் கழிவுகளால் சாக்கடைகளை அடைத்த பொது மக்கள் என மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நீ செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால் நான் ஒருத்தன் செய்து சரியாகிவிடுமா? சமூகம் மாறணும் என்கிறார்கள். நாம் சமூகத்தின் ஒர் அங்கம் என்பதை மறந்துவிட்டு. 

எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று  முடிவெடுத்திருந்தாலும் காத்திருத்தல் செய்யச் சொல்கிறது நாளையேனும் சீக்கிரம் வா கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் - 25

கை தொடும் தூரத்தில் நீ இருந்தாலும்  எனக்கு கொடுத்து வைத்தது என் கைதான். கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -22

Image
ம்.. என்றாய்  ம் என்றேன் ம் மிகவும் பிடிக்குமா?  ம்ம்ம்ம் என்றேன் ஏன்? உன் ஒவ்வொரு ம்க்கும்  ஒவ்வொரு அர்த்தமென்றேன் ம்ஹும்.. ம் என்றேன் கோபமாய், சிணுங்கலாய், செல்லமாய், சலிப்பாய் முத்தமிடும் போதும் இறுக்கமாய் அணைக்கும் போதும் அணைத்த பின் நடக்கும் கூடலின் போதும் கூடல் முடிந்து பேச்சாய் பதில் சொல்லும் போதும் உன் ஒவ்வொரு ‘ம்”மும் ஒவ்வொரு அர்த்தமென்றேன் “ம்... அப்படியா” என்றாய் இந்த ம் எதை ஆரம்பிக்கும் என்று  எனக்கு தெரியும் கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-24

Image
படகுப் பயணமாய் முன்பனிக் காற்றாய் ஏகாந்தத்திலும் உன்னுடனாய் முத்தத் தீற்றலில் தகிப்பவனாய் ஒவ்வொரு நொடியும் உன் மடியில் இருக்க மாட்டேனா என்று ஆசைப்பட்ட காதல் வாழ்க்கையை எங்கு போய் தேடுவேன்? நமக்குள் கல்யாணம் ஆகியிருக்க கூடாதோ? கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -23

Image
அடர் மழை மூடிய கார் கதவுகளுக்குள்  ஏஸியின் குளிர் நிர்வாணமாய் கால் அகட்டி தொங்கும் தந்தூரி சிக்கன் மழைக்கு ஒதுங்கிய  முழுக்க நனைந்த வெண்ணுடை  டைட் ஸ்லீவ் பெண் யார் கண்ணுக்கும்  தந்தூரி சிக்கன் தெரியவில்லை. கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -21

Image

எண்டர் கவிதைகள் -20

Image
பால்கனியின் ஜன்னலை பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன் எதிர்வீட்டு இளைஞனோடு  அவள் ஓடாதிருக்க பூட்டிற்கு வெளியே தெரு  விளக்கொன்று மினுக்கி  மினுக்கி எறிகின்றது இருட்டினிலிருந்து பார்த்தாலும் வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது அவளுக்கு அவன் சிகரெட் முனையும் அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும் உடைகளை களைந்து பூட்டி வைத்தேன் இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல மனமே பிரதானமென்று  பூட்டியும் பிரயோஜனமில்லை சங் கர் நாராயண் @கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-19

Image
திறந்து கிடந்த பாட்டில்கள் நசுங்கிப் போன சொம்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் எலும்புத்துண்டுகள் அரைநிலா எதிர்வீட்டு ட்யூப்லைட் நான்குஜோடிக் கால்கள் கலைந்து கிடக்கின்றன என் மனம் போல் சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-18

Image
இது வரை 

எண்டர் கவிதைகள்-17

Image
தொடர் ஹாரன் சத்தம் கேட்கும் டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம் புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது முட்டை தோசை குஷ்பூ இட்லி இட்லி போடும் குண்டு பெண் பேக்கிரி உனக்கு உங்கக்கா எனக்கு அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ? உள்ளே போனது நெப்போலியன் வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர் பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு வேறொருவனோடு ஓடிப் போன காதலி போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா? புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன் அடுத்த நாள் காலை தயாராய் இருந்தது சலவை செய்த முகமூடியோடு. கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-16

Image
  தூங்குமூஞ்சி மரங்கள் தூரத்தில் தெரியும் ட்யூப்லைட் எழுத்து தெரியாத சிவப்பு போர்டு எகிறிக் குதித்த காம்பவுண்டுகள் சிதறிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் க்ளாசுகள் உள்ளங்கால் முதல் உச்சி வரை ஏறும் முட்கள் ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள் சந்து அறைகளின் வழியே கசியும் குண்டு பல்பு வெளிச்சம் "டைமாச்சு சார் சீக்கிரம்"குரல்கள் காலி டேபிள்களில் ஆல்கஹால் வீச்சம் சிந்துகிறது மீதித் திரவம் கையறு நிலையில் நான்... கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-15

Image
நாளை என்பது எனக்கு அதள பாதாளமாய் தெரிந்தாலும் அட்லீஸ்ட்.. இன்று நீங்கள் நடக்கும் பாதையாவது முட்களில்லாமலும் குண்டு குழியில்லாமலும் நன்றாக இருக்கட்டும் கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-14

Image
சிவப்புவிளக்கு ஆஸ்பெஸ்டாஸ் மொட்டைமாடி  நடுவே தொங்கும் கொடிகள்  படபடக்கும் தாவணி  நிலவை மறைக்கும் மழைமேகம் ************ காய்ந்து கிடக்கும் மொட்டைமாடி  கலைந்திருக்கும் தாவணி  நிறைந்து வழிகிறது வாட்டர்டேங்க்  வீணாய்ப் போகிறது  சேருமிடம் தெரியாமல் கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-13

Image
  இன்றென்ன காட்சி என்ற புதுமுகத்திடம் ஹீரோ ரேப் என்றேன் அவள் தெலுங்கில் முகத்தில் மென் சோகத்துடன் சிரித்தபடி சொன்ன  வார்த்தைக்கு அர்த்தம் கேட்டேன் திரும்பவுமா? என்றத்தமாம். கேபிள் சங்கர்