Posts

Showing posts with the label 24 சலனங்களின் எண். விமர்சனங்கள்

24 சலனங்களின் எண். விமர்சனம் #4

Image
p t ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவல் நாவலாக மட்டுமல்லாமல் புதிதாக சினிமா எடுக்க வருபவர்களுக்கு சினிமா உலகில் உள்ள அரசியலையும் மனிதர்களின் நுணுக்கமான ஈகோவை புரிந்துகொண்டு வெற்றிகரமாக காய் நகர்த்த உதவும் ஒரு சிறந்த புத்தகமாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.தலைவர் கேபிள் சங்கர் அவர்கள் வலைப்பூவுலகின் சுஜாதா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அவரது தனித்துவபாணி எழுத்தின் மூலம். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவரின் கொத்துபரோட்டாவை சுவைத்த திருப்தி. ஒரு சினிமா இயக்குனரின் சினிமா பற்றிய நாவலில் சினிமாத்தனம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கட்டுரைத்தொனி தென்பட்டாலும் மிக சுவாரஸ்யமான நடையால் மீண்டும் கதைக்குள் இழுத்து விடுகிறார். கதை நகர நகர அதற்குப் பின்புலமான உண்மைச் சம்பவங்கள் இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. வெப் சீரிஸ் என்ற ஒரு வஸ்து அறிமுகமாவதற்கு முன்பே அதற்கான கண்டண்டாக பிரபல வார இதழ்களில் வெளியாகும் தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் கேபிள் சங்கர் வலைப்பதிவில் வந்து பாதியில் நின்ற 'நான் ஷர்மி வைர...

24 சலனங்களின் எண் - விமர்சனம் 3

Image
 

24 சலனங்களின் எண். விமர்சனம் -2

Image
  விமர்சனம் #2 வணக்கம், சலணங்களின் எண் 24 , ஒரு சினிமா தொழிலின் பின்பக்கம் இப்படியா , காமிரா மேன் , அசோசியேட் டைரக்டர், கோ டைரக்டர், மாஸ்டர், ஹீரோ , ஹீரோயின், அல்லக்கைகள், தயாரிப்பாளர் இவர்களின் ஒருங்கிணைப்பு எந்தளவிற்கு ஒரு படத்தை உயிரோட்டத்துடன் வைக்கும் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை ,தயாரிப்பாளரின் சபலம் ஒரு பெண்ணை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை எழுத்தில் காட்சியாக்கி விட்டீர்கள், முதல் பட தயாரிப்பாளர் மணி ,நட்பினால் வரும் கேடு (அவரை கொலை செய்யாமலிருந்திருக்கலாம்) அதன்பின் அந்த குடும்ப உறுப்பினர்கள் அவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகளை எழுத்தாளுமையில் பார்த்தேன் . ஒரு சுய தொழில் புரிபவனாக சொல்கிறேன் , ஒரு சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளுடன் , ஆரம்பம் முதல் , டிஜிட்டல் மார்கெட்டிங் , ரைட்ஸ் &ரிலீஸ் வரை விளக்கமாக வரைந்த ஒர் ஓவியம் , டீடெய்ல்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் . வாழ்த்துக்கள். நன்றி. ஹீரோ ,நித்யா , காதல் , டைரக்டர் மன உளைச்சல்...... இன்னும் நிறைய எழுதலாம் இவ்விடம் போதாது நன்றி Venkatesan Narayanaswamy 24 சலனங்களின் எண் நாவல் கிண்டில் வர...

24 சலனங்களின் எண். விமர்சனம் -1

Image
நல்ல வாசிப்பாளரிடமிருந்து பாராட்டு. அதுவும் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு. கொஞ்சம் வெட்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. நன்றி Pachaiyappan Ge வணக்கம்.சார்..நான் பச்சையப்பன். தி.மலை.உங்கள் நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.கரைந்த நிழல்கள், கனவுத்தொழிற்சாலைக்குப் பிறகு திரையுலகைப் பற்றியதான நல்ல நாவல்.சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தை வழங்கிற்று.வாழ்த்துகள்.. இரண்டு மட்டுமல்ல..முகநூலில் பாலகுமாரனின் கல்லூரிப்பூக்கள் நாவலையும் இணைத்தே குறிப்பிட்டுள்ளேன்..திரையுலகின் உள்ளிருந்து எழும் உண்மையான குரல்..வெறும் நாவல் அல்ல..பலரின் வாழ்வு என்பதை எளிதில் வாசகன் உணர்ந்து விடுவான்..ஒரே குறை..ஆட்டிட்யூட்..போன்ற வார்த்தைகள் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகனுக்கு பிரதியை அந்நியப்படுத்திவிடும்..நன்றி நிச்சயம் தங்கள் படைப்பு தகுதியானதே..ஒரு வாசகனாக என் கணிப்பு பொய்ப்பதில்லை.இலக்கிய உலகில் நல்லதொரு அங்கீகாரமாக விருதைப்பெறும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.சுஜாதாவின் படைப்புகளுக்குரிய readability,அ.மித்ரனின் எளிம,பாலாவின் உணர்வுபூர்வமான கதை அனைத்தையும் உங்கள் நாவல் கொண்டுள்ளது.வெல்டன் சார். Nandri Pachaiyappan G...