Astha Chamma -Telugu Film Review
தெலுங்கு ரசிகர்கள் வித்யாசமானவர்கள், ஒரு பக்கம் பக்கா மசாலா படங்களும் ஓடும், இன்னொரு பக்கம் முழுக்க, முழுக்க காமெடி படங்களும், இன்னொரு பக்கம் சங்கராபரணம் போன்ற படங்களும் ஓடும். அவர்களின் ரசனை மிகப் பெரிய விஸ்தீரணம் கொண்டது. அஸ்தா சம்மா.. சமீபத்தில் சில மாதங்களுக்கு வெளியான சின்ன பட்ஜெட் படம். பட் பெரிய வசூல் பெற்ற படம். நம்ம சுப்ரமணியபுரம் சுவாதிதான் கதாநாயகி.. கதாநாயகர்கள் இருவரும் புதியவர்கள். லாவண்யா நடிகர் மகேஷ்பாபுவின் வெறிபிடித்த ரசிகை. மகேஷ்பாபுவுக்கு திருமணம் ஆனதிலிருந்து மிக பெரிய வருத்தத்தில் இருப்பவள். இதனால் அவளது அத்தை பார்க்கும் எந்த வரனையும் தட்டி கழித்து வருபவள். பக்கத்து வீட்டில் அவளுடய நண்பன் ஆனந்த் அவளை கன்வின்ஸ் செய்ய, ஒரு வழியாய் அட்லீஸ்ட் மகேஷ் என்கிற பேர் உள்ளவனாகவாது வேண்டும் என்று கேட்கிறாள். அவளூக்காக ஆனந்த் மகேஷ் என்கிற பெயரில் உள்ள இளைஞர்களை தேட ஒரு வழியாய் மகேஷ் என்கிற ஒருவனை கண்டுபிடித்து லாவண்யாவுக்கு அறிமுகபடுத்த, இருவருக்கும் காதல் பிறக்கிறது. ஆனால் மகேஷின் இயற்பெயரோ ராம்பாபு.. லங்காவரம் என்கிற கிராமத்தின் மிகப்பெரிய மரியாதை கொண்டவன். அது வேறு கதை. இந்த...