சாப்பாட்டுக்கடை - சிம்ரன்ஸ் ஆப்பக்கடை
தமிழகத்தில் இட்லி, தோசைக்கு பிறகு பிரபலமான அயிட்டம் ஆப்பம். சூடான ஆப்பத்தின் மீது தேங்காய்பாலை விட்டு ஊற வைத்து சாப்பிட்டால் அற்புதமாய் இருக்கும். லீ மெரிடியனில் தேங்காய்ப்பால் கள்ளிப் பாலைப் போல திக்காய் இருக்கும். அதற்காகவே சில பல வருடங்களுக்கு சில நூறு ரூபாய்க்களை செலவு செய்து ஆப்பம் சாப்பிட்ட அனுபவங்கள் எல்லாம் உண்டு. ஆப்பத்துடன் தேங்காய்ப்பால், அல்லது வெஜ் குருமா, அல்லது கடலைக் கறி என்று பல காம்பினேஷன்களில் கிடைக்கிற இடங்களில் எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். ஆப்பம் என்பது நல்ல பொன் முறுவலோடு, அப்படியே கவிழ்த்துப் போட்ட சட்டி போல இருந்தால் தான் ஓரத்தில் இருக்கும் முறுகலை அப்படியேவும், மீதியை கிரேவியோடும், பாலோடும் சாப்பிட ஏதுவாக இருக்கும். இப்படி ஆப்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். சாதாரணமாய் ஆயாகடைகளில் மட்டுமே கிடைக்கப் பெற்ற அப்படியாப்பட்ட ஆப்பத்தை, இட்லிக்கடை என்று சொல்லி முருகன் இட்லிக்கடை பெயர் பெற்றதை போல நளாஸ் ஆப்பக்கடை என்று வைத்து பிரபலமானதும் வடபழனியில் சிம்ரன்ஸ் ஆப்பக்கடை உதயமானது. ஏற்கனவே துபாயில் எல்லாம் இருக்கிறது என்றாலும் தமிழ்நாட்டில் ஆப்பத...