Posts

Showing posts with the label கேபிள் சங்க

ஷேர் ஆட்டோக்காரின் பரிதாபங்கள்.

எங்களுடய காமு.காபி படத்தின் வேலை காரணமாய் க்யூப் வரை போக வேண்டிய வேலை. மைலாப்பூருக்கு ஆஞ்சநேயர் கோயில் வழியாய் மைலாப்பூர் சபா தாண்டி இஸபெல்லா ஆஸ்பிட்டலுக்கு பக்கத்தில் அந்தப் பக்கம் போக ஒரு சந்து இருக்கும் அது வழியாய்த்தான் நான் எப்போதும் போவது வழக்கம். மெட்ரோ பணிகளின் காரணமாய் சென்னையில் பல ரோடுகள் ஒன்வே ஆகியிருப்பது உத்துப் பார்த்து ஓட்டினால் ஏதாவது குழியில் விழ வாய்ப்பிருக்கிறது என்பதால் தோராயமாய் பார்த்து ஓட்டியே பழக்கப்பட்டதில் ஒன்வே சைனை பார்க்காமல் நுழைந்து விட்டேன்.  குட்டியூண்டு டனலில் ஓவர்ப்ளோ போக நானொரு வண்டி மட்டுமே எதிர்பக்கம் போக, என் எதிர்பக்கம் ஏகப்பட்ட வண்டிகள். நட்ட நடுவில் மாட்டிக் கொண்டு விட்டேன். திரும்பப் போகவும் முடியாது. ஏனென்றால் கிடைக்கிற கேப்பில் எல்லாம் பைக்கும் சைக்கிளும் நுழைந்து அவர்கள் பாட்டுக்கு போய் கொண்டிருந்தார்கள். எதிரே வந்த ஆட்டோக்காரர் “சார் இது ஒன்வே சார்” என்றார். “ஆமாங்க .. சாரி பார்க்காம வந்திட்டேன் சாரி. ரிவர்ஸ் போக முடியலை. கார் பெருசு வேற” என்று சோகமாய் சொன்னேன். ஆட்டோக்காரர் என்பதால் என் வண்டிக்கும் ரோட்டுக்குமிடையே இருந்த ஒரு சிறு கே...

சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.

Image
இந்த பேரை நண்பர் குசும்பன் போய் சாப்பிட்டு எழுதிய போதுதான் தெரிந்தது. கடை ஆரம்பித்து ரெண்டாவது நாளில் எழுதியிருந்தார். வழக்கமாய் பாயா சாப்பிட வேண்டுமென்றால் ஒரிரு இடங்களில் இருக்கிறது. பெரும்பாலும் அது மலையாளிகளின் ஓட்டல்களாய் இருக்கும். சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என்று கிளம்பிப் போனோம். மெட்ராஸ் பாயா என்றதும் ஏதோ பெரிய கடை என்று எண்ணியது தவறு. அது மிகச் சிறிய பாஸ்ட் புட் அவுட்புட் போலத்தான் இருந்தது.  இட்லி, இடியாப்பம் காம்போக்கள் நிறைய இருந்தது. இடியாப்பம் பாயா ஆர்டர் செய்தோ. பாயா சூடாய் இருந்தது. வழக்கமான பாயாவின் டேஸ்டை விட கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது. காரம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நன்கு வெந்த கால்களின் மஜ்ஜையோடு பெயரைக் காப்பாற்றும் விதமாகவே இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று குறித்துக் கொண்டேன். அடுத்ததாய் மட்டன் சுக்கா, இட்லி. மட்டன் சுக்கா பீஸ்கள் நன்கு வெந்து அட்டகாசமாய் இருந்தது. கூடவே கொஞ்சம் மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் ஊற்றி சாப்பிட்டு விட்டு வந்தோம். மீன் குழம்பு டிவைன். சிக்கன் குழம்பில் சின்ன கருத்தை சொல்லிவிட்டு வந்தோம்.  நான் வழக்கம...

ஒளியை காவு வாங்கப் போகும் ஒலி

  சினிமாவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும், பார்க்கும் இளைஞ/ஞிகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் டேஞ்சரான ஒரு ஜெனரேஷன் சினிமாவை அணுகிக் கொண்டிருக்கிறது. அது சினிமாவை கேட்கும் இளைஞ/ஞிகள் கூட்டம். அதிலும் குறிப்பாய் பெண்கள். இவர்கள் படமே பார்ப்பதில்லை. ஆனாலும் பல ஆங்கில/உலக படக்கதைகளைப் பற்றி அவர்களுடன் பேசினால் அய்ய அது போர். இது ஓகே என்று எல்லாம் விமர்சனங்கள் கிடைக்கும். எப்ப பார்த்தே என்று கேட்டால்? யாரு பார்த்தாங்க கேட்டேன் என்கிறார்கள். எங்கேனு கேட்டதற்கான பதில் யூடியூபில் எந்த படமாக இருந்தாலும் அதன் டிரைலரை வைத்தோ? அல்லது அந்த படத்தின் புட்டேஜை வைத்தோ லைன் பை லைன் கதை சொல்கிறார்கள். மேக்சிமம் அரை மணி நேரத்தில் கதை சொல்லி விடுகிறார்கள். விடாமல தொடர்ந்து மூச்சு விடாமல் சொல்கிறார்கள். இதை கேட்டா நீ விமர்சனம் பண்ணுறே? என்று கேட்டதற்கு இந்த படத்துக்கு எல்லாம் இதுவே போதும் என்கிற விமர்சனமும் கிடைத்தது. இவர்களுக்கு பல படங்களின் பெயர்கள் நியாபகத்தில் இல்லவே இல்லை. குறிப்பாய் வெளிநாட்டுப் படங்கள். கதை சொல்லிகளின் சேனல்கள் எனக்கு தெரிந்து இருபதாவது லீடிங்கில் இருக்கிறது. ச...

கறி தோசையும் நானும்

  கறி தோசையும் நானும் எனக்கு கறி தோசை என்றால் மிகவும் பிடிக்கும். முதன் முதலில் நான் கறி தோசை சாப்பிட்டது மதுரை கோனார் மெஸ்ஸில். அதுவும் பழைய கடையில். ஒரு பள்ளமான இடத்தில் நின்றபடி மாஸ்டர் தன் இடுப்பளவுக்கு மேலான தோசைக்கல்லில் தோசை மாவை தூக்கி வீசிய லாவகத்தில் வட்டவட்டமாய் ஊற்றும் ஸ்டைலாகட்டும், முட்டையை உடைத்து அப்படியே ஒவ்வொரு தோசையின் மேல் கரெக்டாய் விழுந்த லாவகத்தை வாய்பிளந்து பார்த்தபடி ரெண்டு கறி தோசை ஆர்டர் செய்தோம். என்னைப் பொறுத்தவரை கறி தோசை என்பது அவ்வளவாய் புளிக்காத தோசை மாவில் கெட்டியாகவும் இல்லாமல், தளதளவெனவும் இல்லாமல் ஒரு மாதிரி தளுக்கான பதத்தோடு, முட்டையை எடுத்து ஊற்றி, அதில் நன்கு வெந்த கறித்துண்டுகளை மாவு கீழ் பக்கம் வெந்து கொண்டிருக்கும் போதே மேலே மாசாலாவோடு வைத்து அழுத்தி, நன்றாக எண்ணெய் விட்டு, கீழ் பக்கம் கருகாத பதத்தில் எடுத்தி அப்படியே ஒரு திருப்பு திருப்பி, இன்னும் நன்றாக எண்ணெய் விட்டு, கறி, விறகு அடுப்பு என்றால் சிறப்பு. அன் ஈவனான வெப்பத்தில் திருப்பிப் போட்ட தோசையில் உள்ள கறி மெல்ல வேக ஆரம்பித்து கிரிஸ்பியாய் மாறும் போது எடுத்து ஒரு திருப்பி திருப்ப...

சாப்பாட்டுக்கடை - மாதம்பட்டி சமையல்

Image
விக்ரம் பட வெற்றி விழாவிலிருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரிடமும் ஏகோபித்த பாராட்டு பெற்ற விஷயம் ஒன்று எதுவென்றால் மாதம்பட்டி சமையல் தான். மெகந்தி சர்க்கஸ் படத்தின் நாயகன். தயாரிப்பாளர் தான் இந்த கேட்டரிங் கம்பெனியின் ஓனர். அதன் பிறகு திரைப்பட விழாக்களில் மாதம்பட்டியின் கேட்டரிங் வைப்பது நிகழ்ச்சிக்கு காம்பய்ரிங் வைப்பதைப் போல கட்டாயம் ஆகிவிட்டாலும் ஏனோ என்னால் இவர்களது உணவை ருசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று மாலை நண்பர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் சித்தார்த்தின் ‘the fall" வெப் சீரீஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அங்கே போனால் மாதம்பட்டியின் டின்னர். சரி நாம டின்னருக்கு வருவோம் ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். ப்ரெட் மால்பூவாவும், பரங்கி குல்கந்து அல்வாவும் வைத்திருந்தார்கள். பரங்கி குல்கந்து அல்வா சும்மா தளதளவென நெய்யோடு பார்பதற்கே கவர்சியாய் இருந்தது. அட்டகாசமான சுவை. சாப்பிட்டு முடிக்கும் போது அடி நாக்கில் தெரிந்த குல்கந்தின் வாசம் கலந்த சுவை செம்ம. ப்ரெட் மால்பூவா கொஞ்சம் ட்ரை ஆகிவிட்டதால் அதன் மெதுத்தன்மை இல்லாமல் போயிருந்தது. ஆனால் வித்யாசமான சுவை. ஸ்டார்ட்டஸாக ...

சாப்பாட்டுக்கடை - பிகானீர்வாலா

Image
 சென்ற வாரம் நுங்கம்பாக்கம் பக்கம் போன போது  பிகானீர்வாலா கடையின் வாசலில் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் காத்திருந்தது. கார்கள் அணிவரிசை கட்டியிருந்தார்கள். வெஜிட்டேரியன் உணவகங்களில் வட இந்தியர்கள் க்யூ கட்டி நிற்கிறார்கள் என்றால் நிச்சயம் தரமானதான் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. சாதாரணமாய் க்யு கட்ட மாட்டார்கள். அடுத்த ஒரு வார நாளில் சென்று பார்த்த போது அட்டகாசமான க்ரவுண்ட் ப்ளோர் டிஸ்ப்ளேவே கண்ணைக் கட்டியது. அத்தனை விதமான ஸ்வீட், கார வகைகள். கிலோ கணக்கில் ஏகப்பட்ட ஆபர்களோடு. ஒரு ப்ளோர் முழுக்க இந்த அயிட்டங்களுக்கு என்று ஒதுக்கியிருக்க, மாடியில் விஸ்தாரமான உணவகம். ரொம்பவும் விஸ்தாரமான மெனு இல்லை என்றாலும் இருக்கும் மெனுவில் சோளாபூரியை ஆர்டர் செய்தேன். அட்டகாசமான ரெண்டு பூரிக்களோடு சென்னா, பன்னீர் மற்றும் உருளைப் போட்டு கொடுத்தார்கள். அட்டகாசமான சுவை. கூடவே தொட்டுக் கொள்ள பிகானீர் ஊறுகாய்.  ப்ளேட்டர் மீல்ஸ் தருகிறார்கள். அதில் ஒரு ஸ்வீட், ஒரு ரைஸ், மூன்று சப்ஜிக்கள், ஒரு ரைத்தா, ஒரு அப்பளம், மூன்று ரொட்டிக்கள், எல்லாம் சேர்த்து 370 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான். பாவ்...

Asst புராணம் -2

  அஸிஸ்டெண்ட் புராணம் -2 ”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது.  படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான். “என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?” “ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க.  ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இ...

Asst புராணம்.-1

அஸிஸ்டெண்ட் புராணம் -1 ஒரு இயக்குனருக்கு உதவியாளர்கள் அமைவது என்பது வரம். பல சமயம் நாம் அவருக்கு உதவியா இருக்கிறோமா? இல்லை அவர் நமக்கா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உதவியாளர்கள் அமைவது உண்டு. ஒவ்வொரு உதவியாளரும் ஒவ்வொரு யுனிக் கேரக்டர்கள். அவர்களின் ஆட்டிட்டியூட், சினிமா, அது பற்றிய புரிதல் என எல்லாமே தனித்துவமாய்த்தான் இருக்கும். பெண்களை புரிந்து கொள்வதில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் இவர்களுக்கும் உண்டு. முதல் படத்திற்கு நான்காவது படத்திற்கிடையே இவர்களது தனித்துவமான விஷயங்கள் எல்லாம் உதிர்ந்து போய், வெறும் கூடாய் நிற்பவர்கள் அதிகம்.  சரி விஷயத்துக்கு வருவோம். வாரத்துக்கு நான்கு பேராவது “ சார் .. உங்க கிட்ட வேலை செய்யணும் . வாய்பிருந்தா சொல்லுங்க ” என்று இன்பாக்ஸிலோ , மெசேஜிலோ கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள் . ஒரு கதையையோ, திரைக்கதையையோ, எழுதி முடிக்கும் வரை எனக்கு எப்போதும் உதவியாளர்கள் தேவையில்லை . முன்கள வேலை ஆரம்பிக்கும் போதுதான் உதவியாளர்களை அமைத்துக் கொள்வேன் . தினம் , டீ வாங்கி வருவதற்கோ , அல்லது வண்டியோட்டுவதற்கோ உதவியாளர்களை வைத்துக் கொள்வதில் ...