Posts

Showing posts with the label இந்தியா

பச்சை வயல் கனவு

Image
தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும், விலைவாசி கண்ட மேனிக்கு ஏறிக் கொண்டேயிருக்கிறது. பணவீககமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை பற்றி கேட்டீர்களானால் அதற்கு சரியான பதிலை மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இல்லை. பெட்ரோல் விலையுர்வை ரிலையன்ஸ் போன்ற கார்பரேட்டுகளின் ப்ரஷருக்கு தலைவணங்கி விட்டு, மாநில அரசுகள் வரிகளை குறைத்து மக்களுக்கு விலையை குறைக்கலாமே என்கிறது.  ஏன் அதையே மந்திய அரசு செய்யலாமே?. ஆனால் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காரணம் சொல்கிறார்களே தவிர பிரச்சனைக்கான சொல்யூஷனை யாரும் தருவதாய் இல்லை. ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தினால் ஏறிய விலைவாசி மீண்டும் அது ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் குறைந்தால் குறைய வேண்டுமல்லவா.. ஆனால் குறைவதேயில்லை. அதனை மக்களும் கேட்பதில்லை. அரசும் கேட்பதில்லை. எதிர்கட்சி எழவும் எப்படியாவது மத்திய அரசு கட்சியின் பார்வையை தங்கள் பக்கம் திருப்புவதற்காக மெளனியாகவே இருந்து உறுத்தாமல் போராட்டம் நடத்துகிறேன் பேர்விழி என்று “போர்” ஆட்டம் ஆடுகிறது. தமிழ் நாட்டில் விளைகின்ற காய்கறிகள் எல்லாம் இப்போத...