Posts

Showing posts with the label மின்னம்பலம்

2018 – ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -4

கள்ளச்சிரிப்பு கார்த்திக் சுப்பாராஜ் தயாரிப்பில் ஜீ5 தயாரிப்பில் வெளியான தமிழ் வெப் சீரீஸ். ஒரு வருஷம் தான் என்கிற அக்ரிமெண்டோடு வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்யும் பெண். ஆக்ஸிடெண்டலாய் தன் கணவனை கொலை செய்து விடுகிறாள். அதன் பின்னால் நடக்கும் கதைதான் இந்த சீரீஸ். இப்படி நேரிடையாய் சொன்னால் பெரிய சுவாரஸ்யம் ஏதுமில்லை. எனவே அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவர்களிடையே திருமணத்திற்கு பிறகும் உறவு இருக்கிறது. அப்பாவும் மகளுக்கும் புரிந்துணர்வு கிடையாது. அம்மாவிடம் பெண் தேவையேயில்லாமல் மாஸ்ட்ருபேஷன் பற்றி சைகையோடு பேசுவாள். கொலை செய்து விட்டு, ரொம்பவே பழக்கமானவள் போல நடந்து கொள்வாள். அவ்வப்போது பொருந்தாத இடங்களில் ‘ஓத்த’ ஃபக்’ போன்ற வசை வார்த்தைகளை அப்பனிடமே சொல்வாள். போன்ற பற்பல சுவாரஸ்யங்கள் வைத்திருப்பதாய் நினைத்திருந்தாலும், நிஜத்தில் கள்ளக்காதலனாய் நடித்தவரின் நடிப்பும். நான் லீனியரில் சொல்லப்பட்ட திரைக்கதையைத் தவிர சொல்லிக் கொள்கிறார்ப் போல ஒன்றுமில்லை. அமெரிக்க மாப்பிள்ளை பெயரைப் பார்த்ததும் சபா டைப் நாடகத்தின் மறுவடிவமாக இருக்குமோ என்று யோசித்தபடிதான் பார்க்க ஆரம்பித்த...

உயிர் பெரும் பி & சி

உயிர் பெரும் பி & சி ஒரு வளர்ந்து வரும் நடிகன் ஸ்டார் ஆவது பி &சி எனும் ஏரியாக்களில் வெற்றிக் கொடி நாட்டும் போதுதான். அப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய்காந்த் என வரிசைக் கட்டி வென்றவர்கள். ஆனால் அவர்களுக்கான படங்கள் சமீபகாலமாய் வருவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் வந்தா மட்டும் ஓடிருதா? என்பார்கள். ஆனால் டிஜிட்டல் வருவதற்கு முன் பிலிம் காலங்களில் ஒரு படம் சிட்டிக்களில் ரிலீஸ் ஆகி, மெல்ல, அடுத்தடுத்த செண்டர்களுக்கு சென்று அங்கும் ஒரு பெரிய ரவுண்ட் ஓடி மூச்சு வாங்கி, பிரிண்ட் தேய்ந்து புது பிரிண்டுகள் போடப்பட்ட காலமெல்லாம் இருக்க, இன்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை செண்டர்களிலும் படங்களை திரையிட முடிகிறது. அதனால் பி & சி எனும் ஷிப்டிங் மார்கெட்டே இல்லாமல் போய் விட்ட நிலையில், ஒரே நேரத்தில் அத்துனை அரங்குகளிலும் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு கிடைக்கிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் எங்களது “6 அத்யாயம்” திரைப்படத்தை ஒர் பி செண்டர் ஏரியாவில் வெளியிட்டோம். திரையரங்கு உரிமையாளருக...

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள் சமீபத்தில் இயக்குனர் நண்பருக்கு போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்காக பாடல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருப்பதாய் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து ரெண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்க்காட்சியில்   ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாய் நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங் ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.   ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக் குறைவாய் இருந்தது. இயக்குனர் நண்பர்களை அழைத்து “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டு வந்திருக்கீங்க?’ என்றதுதான்   தாமதம். ஆளாளுக்கு ஓ வென அழாத குறைதான். ”சார்.. ஓரு பாட்டு நல்லா வரணும்னா.. சிட்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒரு நாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?’ “ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?” “நூறு படம் பட்ஜெட்டு...

நடிகையர் திலகம் வெற்றியா?

நடிகையர் திலகம் வெற்றியா? நடிகை சாவித்திரியின் வாழ்கையை பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்ட போதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் காஸ்டிங் பற்றி தெரிய வர, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்து கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான காஸ்டிங் என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது அவரது வாழ்க்கை பயணத்தில் ஏறி இறங்கிய அத்துனை சம்பவங்களையும சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாய் நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும்? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது. ஏனென்றால் பயோ பிக் எனும் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கையாளும் லாவகம் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களை காட்டவே முடியாது. இந்திய அள...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது? 16

நான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப்   சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார். “நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க?. “ என்றேன் ஆவல் தாளாமல். “ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு.  ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.” அவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது. “ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது ...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -12

சினிமா அவ்வளவுதான் இனி அது மெல்லச் சாகும் என்று சொல்லும் போதெல்லாம் ஓர் புதிய டீம் வந்து எல்லாவற்றையும் தலைகீழாய் போட்டு புரட்டி புத்துயிர் கொடுத்துவிடும். ஒரு தலை ராகம், புது வசந்தம், சேது, காதல், பீட்சா, என பெரிய லிஸ்டே இருக்கிறது. அது போலத்தான் சினிமாவை நம்பி வரும் புதியவர்களும். புதியவர்கள் என்றவுடன் இளைஞர்கள் என்று தோன்றினால் அது தவறு. சினிமாவில் எந்த அளவிற்கு இளைஞர்கள் வருகிறார்களோ அதே அளவிற்கு 50ஐ கடந்தவர்களின் வரவும் அதிகம். அந்த காலத்துல எம்.ஜி.ஆரே 40க்கு மேலத்தான் வந்து ஜெயிச்சாரு. எனக்கு என்ன 45 ஆறது. அட்லீஸ்ட் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆயிட மாட்டேனா? என்ற நம்பிக்கையோடு தினம் ஒவ்வொரு ஆபீஸாய் ஏறி, தன் போட்டோவை கொடுத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டரை கைக்குள் போட்டுக் கொள்ள மாதத்தில் ஒருவர் என முறை வைத்து சரக்கடித்து, நட்பு கொண்டாடி, சரக்கின் நன்றிக்காக, அவர் கோ டைரக்டரிடம் அறிமுகப்படுத்திவிட, சிகப்பாய் இருந்தால்  கோயில், கல்யாணம், ஆபீசர், கொஞ்சம் வசனம் பேச வரும் என்றால் டாக்டர் போன்ற கேரக்டர்கள் கிடைக்கும். இப்படி பல லாபி செய்து கிடைக்கும் வாய்ப்பை டயலாக் ஒழுங்காய் ப...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -9

முதல் வாய்ப்பு… அதுவும் பெரிய நிறுவனம், நடிகர் என்று  ஆரம்பித்துவிட்டு அது தடைப்பட்டு நின்று போனால் அந்த இயக்குனரின் வாழ்க்கை மிகப் பெரிய் கேள்விக்குறியாகிவிடும். நண்பர் ஒருவரின் வாழ்க்கை அப்படி மாறிய கதை தான் இது. பிரபல இயக்குனரிடம் உதவியாளராய் நான்கைந்து வருடம் பயணம். எல்லாம் சிறப்பாய் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் அன்றைய சிறு பட்ஜெட் படங்களின் நட்சத்திர தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வர, பெரும் முயற்சி செய்து அவரின் சந்திப்புக்கு ஏற்பாடாகிறது. அந்த நாளுக்காக காத்திருந்தது வீண் போகவில்லை. நட்சத்திர தயாரிப்பாளருக்கு நண்பர் கதை சொன்னவிதம் மிகவும் பிடித்துவிட, “இந்தாபிடி” என்று ஒரு நல்ல தொகைக்கு அட்வான்ஸ் செக் வாங்கியாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. நண்பனின் முதல் பயணமே மாபெரும் வெற்றித் தயாரிப்பாளருடன் எனும் போது நண்பனின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை. நண்பன் கதையை இன்னும் மெருகேற்ற விழையளானான். அடுத்த கட்டமாய் தயாரிப்பாளர் அவனை அழைத்து ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். ‘இன்ப அதிர்ச்சி” தான் என்றாலும் அதை அவன் எதிர்ப்பாக்கவில்லை. இ...

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -7

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -8 தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாவான வடபழனியில் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு டீக்கடை முக்கு உண்டு. பிரசாத ரெக்கார்டிங் முன்பு பார்த்தால் நிறைய உதவி இயக்குனர்கள், ஏன் ஒரு படம் செய்து அடுத்த படத்திற்காக காத்திருப்பவர்கள். முதல் பட தோல்விக்கான காரணங்களை நின்று அலசுகிறவர்கள் என பெரும்பாலும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே அதிக்கம் செலுத்துமிடம் காவேரி கார்னர். அடுத்து கொஞ்சம் தூரம் போனால் மரங்கள் அடர்ந்த பாரதியார் தெரு. நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்க்கிறவர்கள் என்றால் நீங்கள் பல படங்கள் பார்த்த,அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவில் பிரபலமான பல துணை நடிகர்களை அங்கே பார்க்கலாம். அந்த தெரு ஒரு நம்பிக்கை தெரு. அந்த தெருவிலிருந்துதான் சூரி, மூனீஷ்காந்த், என பல நடிகர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். அங்கே கூடும் ஒவ்வொருக்கும் எனர்ஜி கொடுக்ககூடிய ஒர் முக்கிய விஷயம் அவர்களின் வெற்றிதான். “தோ.. இங்கதான் நானும் சூரியும் தெனம் முனை கடையில டீ குடிச்சுட்டு, ஆபீஸ் ஆபீஸா ஏறிட்டு வருவோம்” எனும் நண்பரை நீங்கள் நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள். “என்ன...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6 சில வருடங்களுக்கு முன் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர். திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக் கொள்வார். ஒரு நாள் வழக்கம் போல அழைத்தார். படம் ஒண்ணு ஓகே ஆயிருக்கு. நம்ம காமெடிக்கதைதான். ப்ரொடியூசர் ஓகே சொல்லிட்டாரு. ஆபீஸ் பார்க்க சொல்லியிருக்காரு. என்றார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ”அப்ப நாம உடனே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு காமெடிய சேர்த்துருவோம்’ என்றேன். நண்பரும் உற்சாகமாக தலையாட்டினார். அங்கே இங்கே என அலைந்து ஒரு வழியாய் கோயம்பேடில் அலுவலகம் வாடகைக்கு பிடித்தாயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் அலுவலக பூஜை போடப்பட்டது. தயாரிப்பாளர் மட்டுமே வந்து கலந்து கொண்ட நிகழ்வு. உடன் யாரும் வரவில்லை. தயாரிப்பாளருக்கு 50 வயது இருக்கும். நல்ல ஸ்லிம்மாய், வயது தெரியாமல் இருந்தார். இருந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் எந்த அறையை அவருக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று கேட்டோம். இரண்டு அறைகளில் பால்கனி உ...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5 நண்பருக்காக படம் தயாரிக்க வந்து கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் இழந்து இன்னும் முடிக்காமல் இருக்கும் படத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தவரிடம் நான் சொன்ன பதில் யோசனை செய்ய வைத்தது. ” அப்ப படத்த அப்படியே விட்டுற சொல்றீங்க?” “நான் சாதகம் பாதகம் ரெண்டையும் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் “ என்றேன். நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டு, “நல்லதோ கெட்டதோ நான் ஒரு விஷயத்தை எடுத்தா முடிக்காம விட்டதில்லை. இனி யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. இன்னும் ஒரு ஐம்பதுலட்சம் தானே.. போகட்டும்” என்று சொல்லிவிட்டு, ஊருக்கு சென்றவர் தான். இது வரை பட ரிலீஸ் அன்றைக்கு கூட அவர் வரவில்லை. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு குழந்தையைப் போல யாருக்கும் தெரியாமல் அந்த படம் சென்னையில் மொக்கை தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்பட்டு ரெண்டொரு ஷோவில் தூக்கப்பட்டு முடிந்து போனது. கந்து வட்டிதான் சினிமாவை இயக்குகிறதா? என்று கேட்பீர்கள் என்றால் நிச்சயம் இல்லை இம்மாதிரியான தயாரிப்பாளர்களினால் தான் சினிமா இயங்குகிறது என்று சொல்வேன். இவராவது சினிமா எனும் மாயை தெரியாமல் நண்பருக்காக மா...

கந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா? -3

சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ, ஏரியா வியாபாரங்கள் என எந்த விதமான வியாபாரத்துக்கு நிச்சயமில்லாத ஒர் சின்னப் பட தயாரிப்பாளர் எதை வைத்து கடன் வாங்க முடியும்?. ஆனால் இதெல்லாம் ஆகும் என்கிற நம்பிக்கையை ஏதோ ஒரு சின்னப்படம் கொடுத்த தைரியத்தில் தான் நம்ம படமும் அப்படி ஆகும் என்கிற நம்பிக்கையில் படமெடுக்க கிளம்புகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பைனான்ஸே கிடைக்காது என்கிற பட்சட்தில் எங்கிருந்து கந்து வட்டியெல்லாம். ஆனால் பெரும்பாலான சின்னப் பட தயாரிப்பாளர்கள் மாட்டிக் கொள்வது அனுபவமில்லாத இயக்குனர்கள், மற்றும் டெக்னீஷியன்களிடம் மாட்டி, ஒரு ஒன்னார்ரூவால படத்த முடிச்சிட்டா, பிஸினெஸ் பண்ணீரலாம் போன்ற அதீத பொய்களை எல்லாம் நம்பி அவருடய பெருங்கனவான திரைப்பட தயாரிப்பில் இறங்குவார். சொந்த பணத்தில். நண்பர் ஒருவர் சின்ன வயதில் இருந்து சினிமா ஆசை. வாழ்க்கை அவரை துரத்தியதில் ஆசையை விட சர்வைவல் தான் முக்கியம் என்று புரிந்து போராடி ஊர் மிராசுதார் லெவலுக்கு வளர்ந்து சில கோடிக்கு சொந்தக்காரர் ஆனாலும் விடாது கருப்பான சினிமா ஆசை விடவேயில்லை. என்னிடம் வந்தார். சார்.. உங்க படம் பார்த்தேன் எனக்கு ரொம்பவும் பிடி...

பைரஸியும் சினிமாவும் -2

பைரஸியும் சினிமாவும் -2 டிஜிட்டல் காலத்துக்கு முன் சினிமா இவ்வளவு  வெளிப்படையாய் இல்லை. எல்லாமே ரகசியமாய்  பாதுகாக்கப்பட்டு இருந்தது. படத்தின் கதையில் ஆரம்பித்து படம் வெளியாகும் வரை சம்பந்தப்பட்டவரைத் தவிர யாருமே அவ்வளவு சுலபமாய் அணுக முடியாது.  சில வருடங்களுக்கு முன் ஒரு ப்ரெஞ்ச் படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாய் பணி புரிந்தேன். அப்போது அங்கே ஷூட் செய்யப்படும் பிலிம் ரோலை ப்ராசஸ் செய்வதற்காக, தயாரிப்பாளர் அனுமதியுடன் பிரசாத் லேப்பு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, இதற்கு முன் தினம் ப்ராசஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட புட்டேஜை போட்டு பார்ப்பதற்காக எடுத்துப் போக வேண்டும். ஒவ்வொரு முறையும் லேப்பில் தயாரிப்பாளாரின் லெட்டர் பேடில் கடிதம் கொடுக்காமல் ஒரு இன்ச் கூட லேபிலிருந்து புட்டேஜ் வெளியே போக முடியாது. ஒரு ப்ரிவியூ ஷோ போட வேண்டுமானால் கூட லேபுக்கு லெட்டர் கொடுத்துத்தான் எடுத்துப் போக வேண்டும். எடுத்துப் போன பிரிண்ட் திரும்ப கொடுக்க வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளருடயது. எடிட் சூட், டப்பிங் தியேட்டர், சவுண்ட் லேபாரட்டரி என நாம் எடுத்த படத்தின் எந்த காப்பியையும் லேபின் அனுமதிய...

O.T.T. எனும் மாயவன் -5

O.T.T. எனும் மாயவன் -5 காட்டுப்பூக்களாய் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் பூக்க ஆரம்பித்திருக்க, அத்தனை பேருக்கும் மிக அத்யாவசிய தேவை கண்டெண்டுகள். அமேசான் போன்றோர், பர்ஹான் அக்தரின் எக்ஸல் எண்டர்டெயிண்டோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, பிரம்மாண்டமான வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களோடு அவர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை தயாரிக்க பணித்துவிட்டார்கள். எல்லாமே பெரிய பட்ஜெட். சமீபத்தில் எக்ஸெல் தயாரித்து அமேசானில் வெளியிட்ட “இன்சைட் எட்ஜ்” சீரீஸின் ஒரு எபிசோட் செலவு கிட்டத்தட்ட ஒரு கோடி என்கிறார்கள். இவர்களின் அடுத்த சீரீஸான மிர்சாப்பூரின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட அதே என்கிறார்கள். நெட்ப்ளிக்ஸும், ஷாருக்கான், அமீர்கானிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இல்லை அக்ரிமெண்ட் கையெழுத்தாகிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டேதானிருக்கிறது. இந்தி மொழி, உலகளாவிய மார்கெட் எல்லாம் சேர்ந்து பெரும் முதலைகள் இதில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கான லாபம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இத்தனை ரூபாய் எங்களுக்கான பட்ஜெட். அந்த பட்ஜெட்...

ஓ.டி.டி. எனும் மாயவன் -4

ஓ.டி.டி. எனும் மாயவன் -4 ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், யெப் டிவி, சன் நெக்ஸ்ட், ஆல்ட் பாலாஜி, வியூ, வூட், சோனிலிவ், ஜியோடிவி, ஏர்டெல்டிவி, என மீடியாக்காரர்களும் தொலை தொடர்பு நிறுவனத்தினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆளாளுக்கு  தனி ஆவர்தனம் வாசிக்க, சமீபத்தில் சாட்டிலைட் சேனல்களில் சி கிரேட் சேனல்கள் எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து ஒர் ஆப்பை நிறுவி, அவர்களுக்கு என்று ஒர் ஓ.டி.டி. ப்ளாட்பாரமை ஆரம்பித்திருக்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நான்கைந்து புதியவர்கள் இந்தியாவெங்கும் ஆரம்பித்திருக்க வாய்ப்பு அதிகம். இப்படி ஆரம்பிக்கப்படும் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் எப்படி சர்வைவ் ஆகப் போகிறது?. சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் சோனி, வூட் போன்றோர்கள் பெரும்பாலும் அவர்களது டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும், அதில் நடுவே தனியாய் மார்கெட் செய்யப்பட்ட விளம்பரங்களோடு சர்வைவ் ஆக, டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் ஒரிஜினல் கண்டெண்ட்டுகளை ஒளிபரப்ப ஆகும் செலவுகளை ப்ரீமியம் சர்வீஸ் என, மாத சந்தா வாங்கிக் கொண்டு காட்டுகிறார்கள். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் பீக்கில் இருந்த காலத்தில் ...