Thottal Thodarum

Dec 26, 2006

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

'கேபிள் சங்கரின்'சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...? பக்கங்கள்

Dec 4, 2006

அம்மன் கண் திறந்த கதை...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்
சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்... அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ...?

Nov 24, 2006

டாஸ்மாக் சட்டங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்:
ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)
www.shortfilmindia.com
www.classiindia.com

Nov 20, 2006

தயாநிதிக்கு ஓரு நியாயம்... கலாநிதிக்கு ஓரு நியாயமா?

தயாநிதிக்கு ஓரு நியாயம் , கலாநிதிக்கு ஓரு நியாயமா?போர்ப்ஸ் இதழ் நடத்திய.. இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களீன் பட்டியலில். நமது சன் டிவியின் தலைவர் டாப் 20வது இடத்தில் இருக்கிறார். ஹெ.சி.எல். சிவ்நாடார்.. 14வது இடத்தில் இருக்கிறார். ஓரு வகையில் கலாநிதிமாறனின் தனித்திறமையினாலும், அவரது தீவிர உழைப்பாலும் தான் இந்த அளவிற்கு அவர் முன்னேறியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அதிலும் அவரது சன் குழுமம் பங்கு மார்க்கெட்டில் நுழைந்தது முதல் ச்ன் தொலைக்காட்சி குழுமத்தின் 90 சதவிகித பங்கை வைத்திருக்கும் அவரின் சொத்தின் மதிப்பு எறியது ஓன்று ஆச்சர்யமில்லை.. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால்..எல்லா தமிழ் பத்திரிக்கைகளூம் உயர்திரு. தயாநிதிமாற்ன் இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மத்திய அமைச்சர்களில் இரண்டாவது இடத்தை பிடித்ததை ஹெட்லைனில் அறிவித்தவர்கள்.. ஏன் கலாநிதிமாறனின் இந்த சாதனையை மறைபதேன்..? இரண்டு பேர் செய்ததும் சாதனைதான் அதிலென்ன தயாநிதிக்கு ஓர் நியாயம்? கலாநிதிக்கு ஓரு நியாயம்>>>
கேபிள் சங்கர்..
www.shortfilmindia.com
www.classiindia.com

Nov 19, 2006

சுரண்டல்.. பார்ட்.. 5 அநேகமாய் முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..5

ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.. அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து " ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள்..நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. " என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, அவள் ... சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.. என்றாள்
நான்" சற்றே வெகுளீயாய்.. பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா? என்றேன்.. அவள் சற்று தயங்கி.. சார் நீங்க திரும்பவும் உங்க பிராஞ்சுக்கு போய் அங்க கட்டிட்ட்டு, கால் சென்டர்ல போன் பண்ணி சொல்லிட்டீங்கன்னா .. போதும், உங்களுடய NOC நோ.. அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வந்துடும் என்றவுடன் எனக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை.. சற்றே கடுப்புடன் மேடம் அவங்க தான் இங்கே அனுப்பிச்சாங்க... அதற்கு அவள் சற்றும் அசராமல்.. அது சரிதான் சார்.. இங்க் அமொண்ட் மற்றும் தான் சொல்வோம்.. அதுக்குத்தான் இங்க அனுப்சாங்க.. ஓண்ணும் ப்ராப்ளம் இலல.. நீங்க உடனடியா கட்டிட்டா இன்னையோட முடிஞ்சிடும்.. அதுவும் இரண்டு மணிக்குள்ளே.. இல்லேன்னா நாளைக்கு கட்டினீங்கன்னா.. இண்ட்ரஸ்ட் எக்ஸ்ட்ரா ஆகும் என்றவுடன் நாளூக்கு ஏறும் வட்டியை நிணைத்து.. அவளீடம் மறுதலிக்காமல் உடனடியாய் திரும்பவும் தி.நகர் வந்து, பேங்க் முடிய் ஓர் பத்து நிமிஷம் இருக்கும் முன் வந்து பணத்தை கட்டி, அங்கிருக்கும் அதிகாரியிடம், சொல்லி, கால்சென்டரிலி ல் சொல்லி விட்டு.. ஓரு வழியாய் நிம்மதி பெருமூச்சு விட்டே.ன்.. அப்பாடி ஓரு கடனை அடைத்தாகி விட்டது.. நான் மீண்டும் அந்த அதிகாரியிடம் வந்து.. " சார் .. சரியா ஓரு பத்து நாளில் பேப்பர் வந்திருமில்ல.. என்றேன்.. அதற்கு அவர்.. சார் பத்து நாளெல்லாம் ஓரு பேச்சுக்குத்தான்.. மேக்ஸிமம் ஓரு வாரத்துல வந்திடும்.. உங்களூக்கு இந்த லோன் சாங்ஷன் ஆன ஸ்பீட வச்சே உங்களூக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.. என்று பெருமையாய் சொல்ல, நானும் .மனதினுள் சும்மா சொல்லக்கூடாது.. ஓரு வாரத்தில சும்மா கில்லி மாதிரியில்ல சொளயா கொடுத்தானுங்க.. என்று நினைத்துக்கொண்டு. கிளம்பினேன்/.


நானும் இதோ வரும், அதோ வருமென,, தீபாவளி, பண்டிகை யெல்லாம் தாண்டியும் வராது போக,, பெஸ்டிவல்ல ஏதாவது லேட் ஆயிடுக்க்ம்ன்னு நினைச்சுக்கிட்டு கிட்டத்தட்ட மறந்தேபோனேன். தீடீர்னு ஓரு நாள் ஞாபகம் வந்து தேதிய பார்த்த போது, ஓரு மாசம் ஆயிட்டுதுன்னு தெரிஞ்சுது,, சரின்னுட்டு.. கால்செண்டர்ல போன் பண்ணீ கேட்டா.... அவன் சொன்ன பதில் எனக்கு தூக்கி வாரி போட்டது.. அவன் சொல்றான்.சார்.. உங்க அக்கவுண்ட இன்னமும் ஆக்டிவாத்தான் இருக்குன்னான். அது எப்படி அதான் நான் முழு பணத்தையும் கட்டியாச்சே.. எப்படின்னு கேட்டா அவன் சார் அதை பத்ட்தி நீங்க நெல்சன் மாணிகம் ரோடுக்கு போய் தான் கேட்கணும்,சொன்னதும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம.. யோசிகிட்டு இருந்தப்போ.. அவன் இதை ஓரு கம்ப்ளைண்டா எடுத்திக்கறாதா சொன்னான். சரின்னு சொல்லி நம்பர் வாங்கிட்டு எனக்கு அடுத்த ரெண்டு நாள் சூட்டிங் இருந்ததால.. போகமுடியல.. அப்போ ஓரு போன் வந்திச்சு.. அது அந்த பேங்கிலேர்ந்து தான். சார் ஓரு சின்ன மிஸ்டேக் நடந்திருச்சு.. என்ன/ அதுதொண்ணுமில்ல.. அங்க் உங்களுக்கு க்ளோசிங் கொடுக்கிறப்போ க்ளோசிங் சார்ஜ் சேக்காம கொடுத்திட்டாங்க.. அதுனால நாங்க க்ளோஸ் பண்ணல.. ன்னு சொன்னது, தான் மிச்சம் எனக்க்கு கோபம் தலைக்கேறி நீங்க நினைச்சு நினைச்சு அந்த பணம் இந்த பணம்னு சொல்வீங்க.. பணம் இருக்கிற்வன்னா ஓகே.. இல்லாதவன் என்ன பண்ணுவான்.. என்று கேட்டதும், அதில்லாம் சரிதான் சார் அதான் சாரி சொல்றேமில்ல அதுக்கு மேல என்ன செய்ய முடியும்.. என்றான். நான் அப்படின்னா.. நானும் சாரி கேட்டிக்குறேன். என்னால பணம் கட்ட முடியாதுன்னு சொன்னது.. அவன் அங்க் கோபத்துல சார்.. அதெப்படிசார் நீங்க சொல்ல முடியும்.. நீங்க கடட வேண்டிய பணத்த த்தானே கேட்கிறோம்..நீங்க கட்ட்லன்னா உங்களூக்குதான் வட்டி போடுவோம்ன்னு சொன்னதும். எனக்கு இன்னம் கோபம் தலைக்கேறி.. மிஸ்டர்... நான் பணம் கட்டமாட்டேன்.. நான் இப்பவே கன்சூமர் கோர்டுக்கு போறேன்னு சொன்னதும். சார்.. தப்பு என்னவோ எங்களுதுதான்... அதுக்கென்ன பண்றது ஏதோ.. நடந்தது நடந்து போச்சு பணத்தை கட்டிட்டு கையோட வாங்கிட்டு போயிடுங்க.. என்றான்.. எனக்கு இவன் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவிலை..யாரோ ஓருவர் செய்த தவறுக்கு சம்பந்தமேயில்லாத ஓரு வர் எதற்காக நஷ்டப்ப்டவேண்டும்.. இதை ஏற்ககூடாதென்று. முடிவெடுத்து மேற்கூறிய கருத்தை கூற. போனில் பேசிய நபர்.. மனசாட்சி உள்ளவர் போலும்.. சற்றே யோசித்து... சரி சார்.. என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.. என்றார்.. நீங்க சொன்ன மாதிரி.. நான் கட்ட வேண்டிய பணம்தான்.. ஆனா அதை கட்ட வந்த அன்னைக்கு நீங்க சரியான அமொள்ண்ட சொல்லியிருந்தீங்கன்னா நான் கட்டிட்டு போயிருப்பேன்.. சரி.. தவறு நடக்கறது சகஜம்தான்.. அதை கண்டுபிடிச்சு ஓரு இரண்டொருநாள்ல சொல்லியிருந்தீங்கன்னா.. பரவாயில்லை.. நானா ஓரு மாசம் வெயிட் பண்ணி, கம்பிளைண்ட் பண்ணி அதுக்கப்புறம் நீங்க.. சொன்னதுனால, நான் முழு பணத்தையும் கட்ட மாட்டேன். ஓரு ஆயீரம் ரூபாய் குறைச்சுத்தான் கட்டு வேண். என்றேன்.. அதெப்படி சார்.. அந்த பணத்த அந்த டேபிள் இன்சார்ஜிடம் தான் பிடிப்பாங்க.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. பேங்கோ., அல்லது அந்த நபரோ இதுக்கான நஷ்டத்த ஏத்துகிட்டுத்தான் ஆகணும்.. என்ர்றேன் பிடிவாதமாய்... சொல்லி போனை வைத்தேன்.

இரண்டு நாள் பொறுத்தேன்.. பிறகு அவன் நம்பரை காண்டேக்ட் செய்த போது சாரி சார் நான் கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்.சொல்லி அந்த மேடத்திக்கிட்ட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ஓண்ணும் சொல்ல மாட்டேங்கறாங்க.. எதுக்கும் நீங்க. நேரா வந்தா மேட்டர் முடிஞ்சுரும்னு நினைக்கிறேன்.. என்றது, கட்டூ.. நெல்சன் மாணிக்கம் ரோடு.. சில அரை மணிநேர காத்திருப்புக்குபின் அந்த குறிப்பிட்ட பெண்மணியை பார்க்க நெருக்கிய போது.. அவர் என்னை பார்த்து.. சாரி லஞ்ச் டைம் என்றார்.. நான் கோபத்தின் உச்சிக்கே சென்று. . ஆங்காரமாய்.. அந்த நடு ஹாலில் கத்த, அவர்.. சுற்றும் முற்றும் பார்த்து,, என்ன சார் இண்டீஸண்டா கத்திறீங்க.. சரி சரி உள்ள போய் உட்காருங்கன் சொன்னார்.. நானும் அவர் சொன்னதை கேட்டு உள்ளே போய் உட்கார்ந்தேன்.. அவர் மெல்ல வந்து என்னைபார்த்து.. இப்ப என்ன சார் வேணும்..சும்மா இதுக்கெல்லாம் ப்ரச்சன பண்றீங்க.. சாரி.. நான் பிரக்னெண்ட் லேடி கால்லலெலாஅம் விழமுடியாது.. சரியா.. இப்ப எப்ப பணத்தை கட்டுறீங்க.. என்றார்...என் கோபம் எரிமலையாய் உள்ளூக்குள் கனன்ற போதும்..மெதுவாக.. சாரி,, என்னால முழு பணதஹை கட்ட முடியாது... அப்ப என்னால ஓண்ணும் பண்ண முடியாதென்று.. அவர் நடக்க முற்ப்பட, நான் அவரிடம் மேடம்.. உங்க் ஹையர் ஆபீசரை பார்க்க வேண்டும், ஏன்.. என்றார்.. இல்ல நான் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கறத்துக்கு முன்னாடி அவரை பார்த்து பேசண்னும் என்றேன்.. அவர் சற்று பதட்டட்துடன். போலீசா... எதுக்கு சார்.. இதுக்கெல்லாம். நீங்க போலீஸ் கோர்ட்டுன்னு போனீங்கன்னா.. அவ்வளவு தான்..எல்லாத்தை யும் பேசி தீத்துக்கலாம்.. என்றார்.. அப்ப சரி என்றேன்.. சார்... ஓரு மனிதாப மான் முறையில் எனக்காக பணத்தை கட்டக்கூடாதா.. ப்ரக்ணண்ட் லேடி கேக்கிறேன்... அவரை நிதானமாய் பார்த்து,, சரி மேடம்.. நான் பணம் கட்டறேன்.. ஆனா இன்னைக்கில்ல.. நாளைக்கு.. ஏன்னா.. நீங்க தான் மனிதாபமானத்தை பத்தி பேசினதாலே.. ஓரு ஹெல்ப் பண்ணுங்க.. ஓரு நாலாயிரம் இருந்த்தா.. எனக்காக,,, கட்டுங்க.. அதுக்க்கு உங்களூக்கு இப்பவே.. செக் தந்துடறேன்.. ஓரு நாள் தானே.. இது கூட உங்க தப்புனால தான் வந்திருச்சு.. அதனால ஓரு நாளுக்கு மட்டும் எனக்காக ஓரு நாலாயிரம் ரூபாய் கொடுங்களேன்..ன்னு சொன்னவுடன்.. அவர் என்னை பார்த்து.. என்ன விளையாடறீங்களா..என்றார்.. இல்ல மேடம் சீரியஸாத்தான் சொல்றேன்..நீங்க் போராடுறது பேங்குக்கான பண்த்துக்காக.. அதுவும் நீங்க பண்ணூன தப்புனால.. பேங்க்கு எனக்கு சார்ஜ் பண்ணுது. ஆனா கட்டப்போற பணம் என் பணம் நான் உழைத்து சம்பாதிச்ச பணம்.. இல்ல நான் ஓரு ரூபாய் குறைச்சு கட்டுணா.. உங்க் பேங்கோ.. அல்லது நீங்களோ .. விடுவீங்களா? உங்களுது மட்டும்தான் பணமா?
அதனால.. நான் ஓரு முடிவுக்கு வந்திட்டேன்.. நான் மூவாயிரம் தர்ரேன்.. மிச்சம் ஆயிரம் ரூபாய நீங்க கட்டுவீங்களோ.. பேங்க் ஏத்துக்கும்மோ எனக்கு தெரியாது.. ன்னு சொன்னது.. அந்த பெண் மணி அது வரை கோபத்தில் பேசினாலும் மரியாதையாய் பேசியவர்.. பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை ன்னு தெரிஞ்சதும்.. நீ,,,வா... போன்னு.. ஓருமையில் பேச நான் சற்றும். மரியாதை தவ்றாமல்.. மேடம். இது வரைக்கும் என் ப்ணததை கொடுப்பதற்க்காக.. நான் கோபமாய் பேசியபோதும், நான் கொஞ்சம்கூட மரியாடதை குறைவாக் பேசவில்லை.. ஆனால் உங்கள் பணம் போகப் போகிறதென்று தெரிந்தவுடன்.. நீங்கள் ஒருமையில் பேசுகிறீர்கள்.. பரவாயில்லை.. என்று.. கூறி.. அவர். என்னை அடுத்த நாள் வர வைத்து. அவர் ஆயிரம் ரூபாய் கட்ட,, நான் மூவாயிரம்.. கட்ட.. இதோ கடந்த நான்ன்கு நாட்களாய் இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று காத்திருக்கிறேன்.. அநேகமாய்.. திங்கட்கிழமை வந்திடும்னு சொன்னாங்க.. ஏன்னா.. இது பாம்பே ஆபீஸிருந்து வரணூமாம்.. வரலேன்னா... பாம்பேக்கு படையெடுக்கணுமா...':???????

கேபிள் சங்கர்.
www.shortfilmindia.com
www.classiindia.com

Nov 17, 2006

சரண்டல்... பார்ட்..4

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...4

ஆனா .. என்ன ஆனா... இந்த சர்வீஸெல்லாம் லோன் வாங்கிறவரைக்கும்தான், அதுக்கப்புறம், நடக்குறதே வேற...நான் என்னுடய காரின் அக்கவுண்டை க்ளோஸ் செய்யலாம்னு ஆரம்பிச்ச போதுதான் ப்ராப்ளமே.. முதல்ல, பேங்கோட கஸ்டமர் சர்வீஸ் நம்பரை காண்டாக்ட் செஞ்சதும், அது அந்த நம்பர்,,, இந்த நம்பர்ன்னு பல நம்பர்களை(அப்பப்பா... எவ்வளவு நம்பர்கள்) கேட்டு உள்ளிட்டு விட்டு நிஜக்குரலுக்காக காத்திருந்து, குரல் வந்து அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டு, என்னுடய அக்கவுண்டை முடிக்கணும்னா நான் எவ்வளவு கட்டணும்னு கேட்டதும், "சார்.. அது எங்களுக்கு தெரியாது... அதப்பத்தி நீங்க உங்க ப்ராஞ்ச காண்டாக்ட செய்யுங்கள்..உங்களுக்கு வேற ஏதாவது உதவி வேணுமாண்னு..:" கேள்வி வேற... நம்ம கேட்டத தவிர எல்லா உதவியும் செய்ய த்யாராயிருக்கிற கால் சென்டர்.

சரி வேற வழியில்லைன்னு நாமளே பேங்குக்கு போவோம்னு கிள்ம்பினேன்.. ஏன்னா, ஓவ்வொரு நாளுக்கும் வட்டியா நம்ம பணம்தானே போகுது.... மிக அமைதியாக இருந்த்து அந்த பேங்க்.. உள்ளே மக்கள் நிறைய பேர் இருந்தாலும் அங்கிருந்த அமைதி என்னை ஆச்சர்யபடுத்தியது. எங்கிருந்து வந்தது இந்த பண்பு... இதே மக்கள்தான் வெளியே வந்ததும், எரைசலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதோ.. அங்கே ஓருவர்... தன் மொபைலில் வெளியே கேட்காத்படி மிக மென்மையாக பேசிக்கொண்டிருந்தார்... அதிருக்கட்டும்.... என்று நான் அக்கவுண்ட் ஆபீஸரை பார்க்க போனேன். அவர் என்ன பார்த்து மென்மையாய் சிரித்து..." வாட் கேன் ஐ டூ பார் யூ?"
நான் வந்த விபரத்தை சொன்னேன். அதற்கு அவர் என்னிடம் அக்கவுண்ட் நம்பர் கேட்டு கம்ப்யூட்டரில் மேய்ந்து, ஓரு தொகையை சொன்னார். ஆனால் அது என்னுடய அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் நான் கேட்டது என் அக்கவுண்டை க்ளோஸ் செய்ய என்ன தொகை என்பது.. அதுபற்றி கேட்டால் " சாரி சார்..அதை நீங்கள் போன் பேங்கிங்கில் கேட்டுக்கங்க... " என்றவுடன் எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.. " சார் .. அவர்கள் தான் உங்களை நேரில் போய் பார்க்க சொன்னார்கள்?" என்றேன்.. அதற்கு அவர் சிறிதும் அசராமல் " அப்படியா? சொன்னாங்க? :" ஓகே .. அப்ப ஓண்ணு பண்ணுங்க.. நீங்க நேரே .. எங்களுடய ஜோனல் ஹெட் ஆபீஸ் நெல்சன் மாணிக்கம் ரோடுல இருக்கு அங்க போனீங்கன்னா.. எல்லா டீடெய்லயும் வாங்கிடலாம்.. ன்னார். நான் அப்ப நீங்க எதுக்கு இங்க பேங்கல இருக்கீங்கன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டு. ..வண்டிய கிளப்பி நேரே நெல்சன் மாணிக்கம் ரோடு.....

தொரும்...
கேபிள் சங்கர்
போரடிச்சா சொல்லிடுங்க..
www.shortfilmindia.com
www.classiindia.com

Nov 16, 2006

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்..3

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்...3

சுரண்டல்......3

அந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று கண்கள் சிவந்து போய் உடலெல்லாம் சூடாகி,, ஏன் ?" காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்.." என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் " சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்.." எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி " சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. " சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்.." என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பேப்பரில் இருந்த தகவலையெல்லாம் சரி பார்த்து, போனபின்... வீடு, ஆபிஸ் போன் வெரிபிகேஷன்.. எல்லாம் முடிந்து, இரண்டொரு நாளில்..நம்மிடமிருந்து செக் வாங்கி கொண்டு போன ஓரிரு நாளில் கொரியரில் செக் வரும் போது.. அட என்ன சர்வீஸ்.. என்ன சர்வீஸ்.. வீட்டிலிருந்தபடியே எவ்வளவு சுலபமாக முடிஞ்சிருச்சு இதுவே நேஷ்னலைசுடு பேங்காயிருந்தா.. லோன்னுன்னு கேட்டாலே ஆயிரம் கேள்விகள்...இப்படி சந்தோஷப்பட்ட நாளெல்லாம் இருந்த்துச்சு.. ஆனா...

தொடரும்...
கேபிள் சங்கர்
www.shortfilmindia.com
www.classiindia.com

Nov 12, 2006

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்
மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்

1முதல் சுரண்டல்

லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க.

2 சுரண்டல் இரண்டு

இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ ... 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு? நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனாறு...இ தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..

அடுத்த சுரண்டல் /////விரைவில்

Nov 8, 2006

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்





'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

குறும்படங்களை பற்றி உங்கள் கருத்து...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்«
குறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து
வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா? கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்
நன்றி
சங்கர் நாராயண
www.shortfilmindia.com
www.classiindia.com
www.cablesankar.blogspot.com
www.cablesanker.wordpress.com

மனிதனாய் இரு மதிக்கப்படுவாய் சுந்தரவடிவேலரே...

சுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம்? உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார்? அரசாங்கம் நிர்ணயித்த விலையையா? அவர் பெற்றார்? ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா? சவரம் செய்தார்.? அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது? ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்?று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி

Nov 7, 2006

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

சுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம்? உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார்? அரசாங்கம் நிர்ணயித்த விலையையா? அவர் பெற்றார்? ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா? சவரம் செய்தார்.? அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது? ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்?று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி .. இது சுந்தரவ்டிவேல் என்கிற அன்பரின் பதிவுக்கு என் பதிலாக எழுதியது. சங்கர் நாராயண்- கேபிள் சங்கரின்' பக்கங்கள்

Nov 6, 2006

இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..


இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..

என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா? ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்...தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. "இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்." என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்...கடவுளே.. என்ன கூத்துடாது... இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது...அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்...இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப....

சங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)

Oct 13, 2006

www.shortfilmindia.comமிலிருந்து கேபிள் சங்கர்

அன்புள்ள மீரான் அவர்களே.. வணக்கம், என் பெயர் சங்கர் நாராயண் நான் ஓரு நடிகன், எழுத்தாளன் ஓரு குறும்பட இயக்குனர். நான் இந்த பிளாகின் மூலம் அறிவிக்கிறது என்னன்னா.. www.shortfilmindia.com நடத்துற குறும்பட, ஆவணப்பட விழாவிற்க்கு குறும்பட, ஆவணப்பட இயக்குனர்கள் எல்லாரையும் வரவேற்கிறது. படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி வருகிற நவம்பர் 30ஆம் தேதி.2006. மேலும் இதுபற்றி தகவலறிய இணையதளத்துக்கு வாங்க.. அல்லது எனது இ-மெயிலில் தொடர்பு கொள்ளவவும் sankara4@shortfilmindia.com, sankara4@yahoo.com
அன்பு மீரான் அவர்களே .. நான் உங்க பிளாக் மூலமா விளம்பரம் செய்யறேன்னு நினைகாதீங்க.... இந்த தளத்தின் மூலமா நான் நிறைய குறும்பட இயக்குனர்களுக்கு செய்யணும்னு நினைச்சிருக்கேன். நன்றி

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்

காந்தியம் ஓத்துவருமா?

ஹ்லோ... வணக்கம், என் பக்கங்களுக்கு வந்து போனதுக்கு நன்றி. யாராவது "லகே ர்கோ முன்னாபாய்' இந்தி படத்த பார்த்தீங்களா?.. காந்தியின் கொள்கைகளை பின்பற்றும் ஓரு தாதாவின் கதை. ஹிந்தியில் தாதாக்கள் செய்யும் அட்டகாசங்களை 'தாதாகிரி' என்பர். அந்த தாதா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அதற்க்கு 'காந்திகிரி" என்று வடநாடு பூராவும் பிரபலமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த படத்திற்க்கு வரிவிலக்கு அளிக்கபட்டுள்ளது. இதை பற்றி ஏதாவது சொல்ல விருப்பமிருப்பவர்கள் உடனே சொல்லலாம்.
நன்றி .. வணக்கம்..
சங்கர்நாராயண்

Oct 11, 2006

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: கேபிள் சங்கரின் பக்கங்கள்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்