'கேபிள் சங்கரின்' பக்கங்கள் November 07, 2006 Get link Facebook X Pinterest Email Other Apps சுந்தவடிவேல் உங்களுடய தந்தையின் மறைவிற்க்கு என் அனுதாபங்கள். உங்களுக்கு நடந்த சம்பவம் வருந்ததக்கதுதான் ஆனால் அந்த ஒரு சம்பவத்தை வைத்து ஓரு சமுதாயத்தையே கேவலமாய் பேசுவது என்ன நியாயம்? உங்களுக்கு அந்த மாதிரியான சட்ங்குகளீல் நம்பிக்கையில்லையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருந்து உங்கள் சித்தப்பாவிடம் சொல்லியிருக்கவேண்டும். அடிப்படையில் உங்களுக்கு இந்த சாங்கியங்கள் பிடிக்கவில்லை அதனால் உங்களுக்கு அந்த பூஜை செய்த மனிதரையும் பிடிக்கவில்லை. சில விஷயங்கள், சிலருடய நடவடிக்கைகள் பலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அதை வெளிப்படுத்த அந்த மனிதரிடம் நமது கோபத்தை வெளிப்படுத்த நமது பாடி லேங்குவேஜ் அல்லது நமது குரலின் தொனியின் மூலமே அவருக்கு தெரியப்படுத்துவோம். அங்கே தான் ஆரம்பிக்கிறது இந்த மாதிரியான விஷயம். ஏன் யார்தான் மற்றவர்களை நம்பி, நம்பிக்கையை ஏற்படுத்தி வாழாமல் இல்லை. எல்லாமே நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட விதம்தான். ஏன் உங்க தகப்பனாரின் தகனத்தின் போது அந்த வெட்டியார் எவ்வளவு பேரம் பேசியிருப்பார்? அரசாங்கம் நிர்ணயித்த விலையையா? அவர் பெற்றார்? ஏன் உங்களுக்கு தலைமழித்த நாவிதர் அவர் என்ன உங்களுக்கு என்ன ஏதாவது குறைந்த விலையிலா? சவரம் செய்தார்.? அவர்கள் மேல் எல்லாம் உங்களுக்கு வராத கோபம் ஏன் அந்த பார்பனர் மீது வந்தது? ஏனென்றால் மனதளவில் நீங்கள் பார்பன எதிர்பாளராகவே வளர்ந்திருக்க்கிறீர்கள். பார்பனர்களை எதிரியாகவே பாவிக்க முடிவு செய்து அப்படியே நீங்கள் பழகுகீறீர்கள் அதனால் தான் உங்களுக்கு அந்த மாதிரியான மரியாதை கிடைக்கிறது. முதலில் எல்லா மனிதரையும் மனிதராக ஜாதி,மதம் எல்லாம் பார்க்காமல் பழகுங்கள் பிறகு பாருங்கள்… அதைவிட்டு பார்பனர், சூத்தரன், வெட்டியான், என்று காலம் மாறும் இந்த சமயத்தில் மீண்டும் ப்ழையது பேசி உங்களை பின் தங்கிக்கொள்ளாதீர்கள். அவன் அப்படி இருக்கிறான் , இவன் இப்படி இருக்கிறான் அதனால் தான் நான் இப்படி என்று சொல்வதைவிட எப்படி இருக்கவேண்டும் என்?று உதாரணமாக நீங்கள் செயல் படுத்துங்கள் நன்றி .. இது சுந்தரவ்டிவேல் என்கிற அன்பரின் பதிவுக்கு என் பதிலாக எழுதியது. சங்கர் நாராயண்- கேபிள் சங்கரின்' பக்கங்கள் Comments
Comments