Posts

Showing posts from May, 2025

Love Story -2

போன் அடித்தது. “ஹலோ?” “தல ..நான் தான் ராதா பேசுறேன்” “சொல்லுங்க எப்படி இருக்கீங்க? புருஷனை கண்கலங்காம பாத்துக்குறீங்களா?” :ம்ம்..ம்ம் அதெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்கேன்” “சந்தோஷம்” “என்னைக்காவது என்னை எப்படி வச்சிருக்கீங்கன்னு அவரு கிட்ட கேட்டிருக்கீங்களா?” “பொண்டாட்டி புருஷனை நல்லா வச்சிருந்தாலே போதாதா?. அதுலேயும் நீங்க முன்னாள் காதல் ஜோடி வேற” “சரி சரி.. அத வேற நியாபகப் படுத்தாதீங்க தல” “சரி விஷயத்துக்கு வாங்க” “ஒண்ணுமில்லை. ஒரு விசாரணை செய்யணும்.” “யாரைப் பத்தி?” “நமக்கு தெரிஞ்சவரு ஒருத்தரோட பொண்ணு. எட்டு வருஷமா ஒரு பையன லவ் பண்ணுதாம்” “வாட்..??? எட்டு வருஷமா ஒரே பையனையா?. ஸோ.. சேட்” “ஆமா தல நானே அப்படித்தான் ஆடிப் போயிட்டேன். நானும் தான் லவ் பண்ணேன். எட்டு மாசம்தான் தாக்குபிடிச்சிச்சு. விட்டா ப்ரேக்கப் ஆயிரும்னு கல்யாணம் பண்ணிட்டேன். இவனுங்க என்னடான்னா எட்டு வருஷமா லவ் பண்ணுறாங்களாமே?. எல்லாம் கலி காலம். “சரி.. என்ன பண்ணணும்? “உங்களுக்கு தான் மீடியா கம்பெனி பூரா தெரியுமே. இந்த... கம்பெனில ஒரு பையன் வேலை பாக்குறான். பையனைப் பத்தி விசாரிச்சு சொன்னீங்கன்னா பொண்ணோட அப்பன் கிட்ட சொல்லி...

Box Office உண்மைகள்

  தியேட்டர்ல ஓடவே இல்லை வ்ரோ!! அப்புறம் எப்படி லாபம் என பல படங்களுக்கு ரசிகர்கள் கேட்பதுண்டு. ஒரு தயாரிப்பாளராய், விநியோகஸ்தராய், இயக்குனராய் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஹாரர் ப்ரான்ஸைஸ் படம். 13 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டது. அதை மொத்தமாய் எல்லா உரிமைகளையும் ஒரு நிறுவனம் 16 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதை சுமார் 10 கோடிக்கு சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை விற்றது. தெலுங்கு மற்றும் ஹிந்திக்கு 3 கோடிக்கும், வெளிநாட்டு உரிமையில் சுமார் 1 கோடிக்கும் விற்றது. சோ படம் வெளியாவதற்கு முன்னமே வாங்கிய விலையில் 14 கோடி வசூல் ஆகிவிட்ட நிலையில். தியேட்டரில் வெளியாகி சுமார் 40+கோடிகள் கிராஸ் செய்தது அந்தத் திரைப்படம். அந்த நடிகரின் கேரியரில் முதல் பெரிய வசூல் என்றே சொல்ல வேண்டும். தியேட்டர் ஷேர் மட்டுமே பத்து கோடிக்கு மேல். என்னடா குழப்புறே? 40கோடி வசூல்னு சொல்லுறே அப்புறம் பத்து கோடிக்கு மேல் தான் கலெக்‌ஷனு சொல்லுறே? என்று கேட்பவர்களுக்கு கிராஸ் என்றால் என்ன?, நெட் என்றால் என்ன?. கட்டங்கடைசியாய் தயாரிப்பாளருக்கு கிடைக்க...

லவ் ஸ்டோரி -1

 ”நான் ஏன் அவனை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியலை” “அழகா இருந்தானோ?” “அழகுன்னா.. அப்படியும் சொல்ல முடியாது. ஆனா அழகாத்தான் இருந்தான்” “சரி எப்ப உங்க லவ் ஸ்டார்ட் ஆச்சு?” “அதையேன் சார் கேக்குறீங்க?” “நான் அப்ப +1 படிச்சிட்டு இருந்தேன். “+1 ஆ” “அவன் எதிர் வீட்டுல இருந்தான்.” “ம்” “நான் படிச்சிட்டு இருக்கும் போது தெனம் என்னை சைட் அடிச்சிட்டே போவான்” “வயசுல எல்லாரும் பண்றதுதானே?” “இல்லை சார் என்னை சைட் அடிக்குறதுக்காகவே ஒரு நாளைக்கு 100 முறையாட்டும் வந்து பார்ப்பான்” “சரி” “ஒரு நா திடீர்னு  சாயங்காலம் வெளிய உக்காந்து படிச்சிட்டு இருக்கேன். என்னாண்ட வந்தான்” “லவ் பண்ணுறேன்னு ப்ரோப்போஸ் பண்ணாரா? ”இல்லைங்க” “பின்ன?” “நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்” “உடனே சரின்னுண்டேன்” “வாட்?” “ஆமாங்க ஏன் சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை.+2 ல ஸ்கூல் பர்ஸ்ட். எவ்வளவோ சொன்னாங்க. மேல படின்னு கல்யாணம் கல்யாணம்னு அரிச்சிட்டே இருந்தான். நான் படிக்க வைக்குறேன்னான். வீட்டுல சண்டை போட்டு கல்யாணம் பண்ணேன். இந்த ஏழு வருஷத்துல ரெண்டை பெத்தது தான் நான் செஞ்ச சாதனை.” “இன்னும் அந்த காதல் இருக்கா?” “தெரியல....

மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள்

  மூடப்பட்ட அண்ணாநகர் ரோட் சைட் கடைகள் கொஞ்சம் ஹைஃபை உணவங்கள் எங்கே புதியதாய் திறக்கப்படும் என்று பார்த்தால் அது நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடாகத்தான் இருக்கும். அதே போல மிடில் ரேஞ்ச் கடைகள் என்றால் அது அண்ணாநகர் சாந்தி காலனியாய் இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாய் சென்னையின் முக்கிய இடங்கள் ரோட் சைட் புட் ஷாப்புகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. அதுவும் நடு ராத்திரி பிரியாணி கடைகள். ஒருசின்ன டிரக்கில் ஆரம்பித்தார்கள். தையல் இலை பிரியாணி, வாழை இலை பிரியானி, அந்த பாய் பிரியாணி, இந்த பாய் ப்ரியாணி. என ஆரம்பித்து அண்ணாநகர் 5வது அவின்யூவில் இடது வலது எங்கும் டேபிள் எல்லாம் போட்டு கடை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். விதவிதமான உணவுகள். தள்ளுவண்டிகளில், வீட்டிலிருந்து காரை எடுத்துவந்து டிக்கியில் வைத்து குடும்பமாய் கடை பரப்பி பானிபூரி முதல் நெய் சோறு வரை விற்றார்கள். மெல்ல 5வது அவின்யூ புல் ஆகி, நான்காவது, அண்ணாநகர் மெயிண்ட் ரோட் என எல்லா இடங்களிலும் கடைகள் முளைத்து செம்ம வியாபாரம் ஆகிக் கொண்டிருந்த வேளையில் கடந்த ஒரு வாரமாய் எல்லாக் கடைகளும் தூக்கப்பட்டு அண்ணாநகரே அலம்பி விட்டார்ப் போ...