Love Story -2
போன் அடித்தது.
“ஹலோ?”
“தல ..நான் தான் ராதா பேசுறேன்”
“சொல்லுங்க எப்படி இருக்கீங்க? புருஷனை கண்கலங்காம பாத்துக்குறீங்களா?”
:ம்ம்..ம்ம் அதெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்கேன்”
“சந்தோஷம்”
“என்னைக்காவது என்னை எப்படி வச்சிருக்கீங்கன்னு அவரு கிட்ட கேட்டிருக்கீங்களா?”
“பொண்டாட்டி புருஷனை நல்லா வச்சிருந்தாலே போதாதா?. அதுலேயும் நீங்க முன்னாள் காதல் ஜோடி வேற”
“சரி சரி.. அத வேற நியாபகப் படுத்தாதீங்க தல”
“சரி விஷயத்துக்கு வாங்க”
“ஒண்ணுமில்லை. ஒரு விசாரணை செய்யணும்.”
“யாரைப் பத்தி?”
“நமக்கு தெரிஞ்சவரு ஒருத்தரோட பொண்ணு. எட்டு வருஷமா ஒரு பையன லவ் பண்ணுதாம்”
“வாட்..??? எட்டு வருஷமா ஒரே பையனையா?. ஸோ.. சேட்”
“ஆமா தல நானே அப்படித்தான் ஆடிப் போயிட்டேன். நானும் தான் லவ் பண்ணேன். எட்டு மாசம்தான் தாக்குபிடிச்சிச்சு. விட்டா ப்ரேக்கப் ஆயிரும்னு கல்யாணம் பண்ணிட்டேன். இவனுங்க என்னடான்னா எட்டு வருஷமா லவ் பண்ணுறாங்களாமே?. எல்லாம் கலி காலம்.
“சரி.. என்ன பண்ணணும்?
“உங்களுக்கு தான் மீடியா கம்பெனி பூரா தெரியுமே. இந்த... கம்பெனில ஒரு பையன் வேலை பாக்குறான். பையனைப் பத்தி விசாரிச்சு சொன்னீங்கன்னா பொண்ணோட அப்பன் கிட்ட சொல்லிருவேன். பாவம் அவரு எங்க பரம்பரையில யாருமே லவ் பண்ணதில்லைன்னு அழுவுறாரு?”
“ டீடெயில் அனுப்புங்க.. பார்த்துட்டு சொல்லுறேன்.”
வாட்ஸப்பில் மெசேஜ் வந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு
‘ஹலோ?”
“சொல்லுங்க தல..என்ன உடனே அடிச்சிருக்கீங்க”
“பையனைப் பத்தி விசாரிச்சுட்டேன். நல்ல பையனாம். திறமையான பையனாம். அதுனால பொண்ண கட்டிக் கொடுக்கலாம்னு சொல்லுங்க”
“அது சரி தல. என்ன உடனே இந்த நடு ராத்திரிக்குள்ள விசாரிச்சு சொல்லிட்டீங்க?”
“பின்ன எட்டு வருஷமா லவ் பண்ணுற்தே ஆச்சர்யமா இருக்கு. அவங்க மட்டும் அப்படியே லவ் பண்ணிட்டு சந்தோஷமா இருந்துட்டா.. கல்யாணம் பண்ணி வச்சிர வேணாம். அதுக்குத்தான்”
கேபிள் சங்கர்
Comments