விடாதுகருப்பு…
p>இந்த தொடர் பதிவு கருப்பு என்னையும் விடவில்லை.. கொஞ்ச நாளைக்கு முன் அழைத்த அத்திரி, ரெண்டு நாளைக்கு முன் அழைத்த ஹாலிவுட் பாலா, நேற்று அழைத்த அக்னிபார்வை என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்ததால் இந்த விடாது கருப்பு.. 1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? ஏதாவது வித்யாசமா பேர் வைக்கணும்னு நினைச்சுகிட்டேயிருந்தேன் வழக்கமா என்னோட தொழிலையும் சேர்த்து கூப்பிடற நண்பர்கள் அந்த பேரே நல்லாருக்குன்னு சொல்ல அதையே வச்சிட்டேன். ஆரம்ப காலத்தில ஏதோ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு நிறைய பேர் பயந்தாங்க. 2.கடைசியாக அழுதது எப்பொழுது? என்னுடய சித்தப்பாவுக்கு திடீர்னு ப்ள்ட் கேன்சர்னு தெரிஞ்சு ஒரு பதினைஞ்சு நாள்ல அவர் இறந்த அன்னைக்கு. 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா? திரும்ப படிக்க்கும் போது புரிஞ்சாத்தானே பிடிக்கிறதுக்கு. நல்ல வேளை நான் படிக்கிற காலத்துல நம்மளை பாஸ் போட்டு விட்டுட்டாங்க.. 4).பிடித்த மதிய உணவு என்ன? நல்ல வெங்காய வத்தக்குழம்பு, உருளை ரோஸ்ட்.பொரிச்ச அரிசி அப்பளம். நான்வெஜ்ஜில்.. அம்மா ஹோட்டல் மீல்...