Thottal Thodarum

Jun 3, 2009

விடாதுகருப்பு…

p>இந்த தொடர் பதிவு கருப்பு என்னையும் விடவில்லை.. கொஞ்ச நாளைக்கு முன் அழைத்த அத்திரி, ரெண்டு நாளைக்கு முன் அழைத்த ஹாலிவுட் பாலா, நேற்று அழைத்த அக்னிபார்வை என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்ததால்  இந்த விடாது கருப்பு..
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஏதாவது வித்யாசமா பேர் வைக்கணும்னு நினைச்சுகிட்டேயிருந்தேன்  வழக்கமா என்னோட தொழிலையும் சேர்த்து கூப்பிடற நண்பர்கள் அந்த பேரே நல்லாருக்குன்னு சொல்ல அதையே வச்சிட்டேன். ஆரம்ப காலத்தில ஏதோ ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு  நிறைய பேர் பயந்தாங்க.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
என்னுடய சித்தப்பாவுக்கு திடீர்னு ப்ள்ட் கேன்சர்னு தெரிஞ்சு ஒரு பதினைஞ்சு நாள்ல அவர் இறந்த அன்னைக்கு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
திரும்ப படிக்க்கும் போது புரிஞ்சாத்தானே பிடிக்கிறதுக்கு. நல்ல வேளை நான் படிக்கிற காலத்துல நம்மளை பாஸ் போட்டு விட்டுட்டாங்க..

4).பிடித்த மதிய உணவு என்ன?

நல்ல வெங்காய வத்தக்குழம்பு, உருளை ரோஸ்ட்.பொரிச்ச அரிசி அப்பளம்.  நான்வெஜ்ஜில்.. அம்மா ஹோட்டல் மீல்ஸும், டிரம்ஸ்டிக் சிக்கனும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? 
எல்லாரோடையும் ரொம்ப் ஈஸியா ப்ரெண்ட்லி ஆயிடுவேன். நீங்க வேற யாருடனாவதுன்னு கேட்கறாத பார்த்தா விவகாரமா இருக்கும் போலருக்கு ( ஆங்.. அவனா..நீ) நான் அந்த மாதிரி ஆள் இல்லைங்க..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்க பிடிக்கும் ஆனா உள்ளூக்குள்ள மண் போறதுதான் பிடிக்காது. அருவி குளியல் ரொமப் பிடிக்கும், அதிலும் குத்தாலத்துல ரூம் போட்டு சரக்கை அடிச்சிட்டு, நேரே அருவிக்கு கீழே நின்று அடிச்ச மப்பை இறக்கிட்டு, மறுக்கா ரூமுக்கு வந்து ஏத்திட்டு, இறக்கிற சுகம் இருக்கே.. ம்ஹூம் போய் பல் வருச்ம் ஆச்சு. யாராவது கூட்டிட்டு போறீங்களா..?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா.... பெண்ணா...?

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம்: ஒரு வேலை செய்ய ஆரம்பிச்சா.. அதை முடிக்கிற வரைக்கும், தூங்காம கூட வேலை பார்ப்பேன்.
பிடிக்காத விஷயம் :   அந்த வேலைக்கு ஒரு டார்கெட் வர்ற வரைக்கும் சும்மாவே சுத்தறது.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னையும், என் தொழிலையும், புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தாப்போல அட்ஜெஸ்ட் செஞ்சுக்கிறது.  பிடிக்காத விஷயம் : என்னை அவங்களுக்கு ஏத்தாப்போல அட்ஜெஸ்ட் செய்ய விடாம இருக்கிறது.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
ஊருக்கு போனா பொண்டாட்டி புள்ளைங்க பக்கத்தில இல்லாம இருக்கிறதுக்கு வருந்துவேன். ஊருக்கு வந்தவுடனே.. இருக்கிறதுக்கு வருந்துவேன் :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
தூத்தேறி.. என்ன கேள்விப்பா இது.. எழுத சொல்ல எதையாச்சும் போட்டுகினுதான் எளுதணுமா என்னா..? சரி.. நீ கேட்டுகினாங்காட்டியும் ச்ம்மாவாச்சும் சொல்றேன். பழுப்பு கலர் டவுசர்ன்னுகீறேன்னு வச்சுக்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ரஹ்மானின் மசக்களீ..
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14.பிடித்த மணம்?
பட்டாசு வெடிச்ச பின்னாடி வரும் வாசனை.  அதே போல் பெட்ரோல் வாசனை,  மல்லிப்பூ வாசனை, ஆக்ஸ் பாடி ஸ்ப்ரே வாசனை, அத்த போட்டா எல்லா பிகரும் பின்னாடியே வரும்னு சொன்னாங்க..  இதுவரைக்கும் நூறு டப்பா வாங்கியாச்சு.. மளிகைகடைகாரன் தான் மாசா மாசம் பில் வாங்குறதுக்கு பின்னாடி வர்றான்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தண்டோரா ; பாக்குறதுக்கு கொஞ்சம் ரப்பா இருந்தாலும் நல்ல மனுஷன்.  AD பிலிம் டைரக்டர் . ஷார்ட் பிலிம் எடுத்திருக்காரு.. குடிய பத்தி.. ஷோக்கா இருக்கும்.

குகன் : குகன் கட்டுரைகள்ங்க்கிற பேர்ல எழுதிட்டு வர்றாரு.. ரொம்பவும் நகைச்சுவை உணர்வுள்ள இளைஞர். பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதின வடிவேலு ட்ராக்(பதிவுல) நல்ல காமெடியா இருக்கும்.

வித்யா : எனக்கு தெரிஞ்சு தமிழ் ப்ளாக் உலகில் வெரைட்டியா எழுதற பெண் பதிவர்களில் இவரும் ஒருவர். அதனால. 

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
பதிவர் இல்ல பதிவர்கள்.. அத்திரி, ஹாலிவுட்பாலா, அக்னிபார்வை  அவர்களுடய எல்லா பதிவுகளுமே எனக்கு பிடித்ததுதான்.

17. பிடித்த விளையாட்டு?
இண்டோரா.. ? அவுட் டோரா..?

18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம் (இந்த கேள்வியால் என்ன பயன்?)

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
எல்லா விதமான படங்களும். மொத்ததில நலலா இருக்கணும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

போன வெள்ளிக்கிழமை தோரணை டிவிடில Pursuit of Happyness

21.பிடித்த பருவ காலம் எது?

டீன் ஏஜ்... காலம்தான். பின்னே நாமெல்லாம் யூத்தில்ல..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சேட்டன் பகத்தின் : One night @ call center., 
டாக்டர் பிரகாஷின் சிறை அனுபவங்கள்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி (இந்த கேள்வியினாலும் என்ன பயன்? எதாவது புது படம் அனுப்ப போறீங்களா..?)

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தையின் சிரிப்பு,

பிடிக்காதது : ரோட்டில் வரும் ஹார்ன் இரைச்சல்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அலகாபாத், ஹைதராபாத், பெங்களூர் இதுல எது ரொம்ப தூரம்..?

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கு ஆனா சொல்ல மாட்டேன். அதுதான் தனி திற்மையாச்சே.. பின்ன எதுக்கு பப்ளிக்கா சொல்லணும்..? ஹி..ஹி..ஹி

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொதுவா லஞ்சம், மற்றும் ஏமாற்றுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்…

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலாவுக்கு யார் கூட்டிட்டு போறாங்க என்கிறத பொருத்தது, யார் கூட போறோம்கிறத பொருத்ததும் கூட..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
பெரிய சினிமா டைரக்டரா, ஒரு கார்பரேட் கம்பெனி தலைமையா.. கலாநிதி மாறன் போல் இருக்க ஆசை..  இரண்டு ஆசைக்குமான அடிப்படை தகுதிய வளத்துட்டிருக்கேன்.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நீங்க எதை நினைச்சு கேட்டீங்களோ அதே தான்.. என்ன சந்தோசம் தானே..?

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
Interesting

அப்பாடி முடிச்சிட்டேன்.. கொஞ்சமா கேள்வி கேட்க தெரியலையே.. கோன் பனேகா குரோர்பதிலேயே பதினைஞ்சு கேள்விதான்.>>>
கொத்துபரோட்டா 15/05/09 ஐ படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

வந்தியத்தேவன் said...
This comment has been removed by the author.
வந்தியத்தேவன் said...

கேபிளாரே ஒரு இடத்தில் வசனத்தை மாற்றுங்கள் வித்தியாசமான அர்த்தம் வருகின்றது. எஸ்ஜே சூர்யா பாணி வசனம் போல் இருக்கின்றது ஹிஹிஹி

ALIF AHAMED said...

கேபிளாரே ஒரு இடத்தில் வசனத்தை மாற்றுங்கள் வித்தியாசமான அர்த்தம் வருகின்றது. எஸ்ஜே சூர்யா பாணி வசனம் போல் இருக்கின்றது ஹிஹிஹி

//


ரீப்பீட்டேய்ய்ய்

பதில் நம்பர் "six" ரொம்ப "sex"

ALIF AHAMED said...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா.... பெண்ணா...?

17. பிடித்த விளையாட்டு?
இண்டோரா.. ? அவுட் டோரா..?
/
/
/


கேள்வி கேட்டா பதில் மட்டும் தான் சொல்லனும்.... இல்லனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// மின்னுது மின்னல் said...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா.... பெண்ணா...?

17. பிடித்த விளையாட்டு?
இண்டோரா.. ? அவுட் டோரா..?
/
/
/


கேள்வி கேட்டா பதில் மட்டும் தான் சொல்லனும்.... இல்லனா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

டபுள் ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

இராகவன் நைஜிரியா said...

// 26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்கு ஆனா சொல்ல மாட்டேன். அதுதான் தனி திற்மையாச்சே.. பின்ன எதுக்கு பப்ளிக்கா சொல்லணும்..? ஹி..ஹி..ஹி //

அதானே.. தனித் திறமையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது..

அக்னி பார்வை said...

///31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
நீங்க எதை நினைச்சு கேட்டீங்களோ அதே தான்.. என்ன சந்தோசம் தானே..?
///

கேபிள் டச்

Thamira said...

க்ளாஸ்..

பாலா said...

கலக்கல்... பதில்கள்.. சங்கர்.!! :))

கோபிநாத் said...

உங்க பதில்களும் Interesting ;)

முரளிகண்ணன் said...

அசத்தல் பதில்கள் கேபிள்ஜி

\\அப்பாடி முடிச்சிட்டேன்.. கொஞ்சமா கேள்வி கேட்க தெரியலையே.. கோன் பனேகா குரோர்பதிலேயே பதினைஞ்சு கேள்விதான்\\

இதுதான் கேபிள் டச்சா?

Sukumar said...

** எல்லாமே கலக்கல் பதில்கள்....
** ஒரே ஒரு டவுட் அண்ணே .....டாக்டர் பிரகாஷின் சிறை அனுபவங்கள் என் படிக்கிறீங்க....
** நீங்க டெஸ்க்டாப் படத்தை மாத்துரீகளோ இல்லையோ முதல இப்ப இருக்குற ஹாட் ஸ்பாட் படத்தை மாத்துங்க..... ஹாட் ஸ்பாட் பேரையே கெடுக்குற மாதிரி ஹோம்லியா இருக்கு....!!!!

Cable சங்கர் said...

மாத்திட்டேன்.. மின்னுது மின்னல்.. வந்தியத்தேவன்.

அவங்க மட்டும் 32 கேள்வி கேட்பாங்களாம் நாங்க ரெண்டு கேள்வி கேட்க கூடாதா..? அவஙகல நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்.

Cable சங்கர் said...

//அதானே.. தனித் திறமையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது..
//

அதானே ராகவன்.. பாவம் நிறைய பேரு சொல்லிட்டு திரியறாங்க..:)

Cable சங்கர் said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி, அக்னி, ஹாலிவுட் பாலா..

Cable சங்கர் said...

நன்றி கோபிநாத்..
நன்றி முரளி.. பின்னே நமக்குன்னு ஒரு டச் வேணாமா.?
சுகுமார்..கத்ரீனாவையா ஹோம்லின்னு சொல்றீங்க..? உஙக் விருப்பத்திக்கு படத்தை மாத்திட்டேன்.

Anbu said...

அசத்தல் பதில்கள் அண்ணா..

Vidhya Chandrasekaran said...

சுவாரசியமான பதில்கள் . அழைத்தமைக்கு நன்றி. கூடிய விரைவில் என் பங்கும்.

கார்க்கிபவா said...

//எனக்கு தெரிஞ்சு தமிழ் ப்ளாக் உலகில் வெரைட்டியா எழுதற பெண் பதிவர்களில் இவரும் ஒருவர்//

இந்தப் பாவம் உங்கள சும்மா விடாது.. வெரைட்டியா சாப்பாடுத்தான் போடறாங்க :))

biskothupayal said...

cable kalakkal
eppovume super!

Raj said...

/டாக்டர் பிரகாஷின் சிறை அனுபவங்கள் //

அடுத்த வாட்டி சந்திக்கும்போது இந்த புக்கோட வாங்க தல

Anbu said...

அண்ணா..200 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

//20.கடைசியாகப் பார்த்த படம்?
போன வெள்ளிக்கிழமை தோரணை டிவிடில Pursuit of Happyness //

Pursuit of Happyness இந்த படத்திற்கு விமர்சனம் படிக்க ஆசை.
நேரமிருப்பின் பதிவில் பதியவும்
நன்றி

Rafiq Raja said...

// ம்ஹூம் போய் பல் வருச்ம் ஆச்சு. யாராவது கூட்டிட்டு போறீங்களா..? //
நீ அவனா.... :) Same Side Goal :)

//பின்னே நாமெல்லாம் யூத்தில்ல.. //
எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... கண்கள் குழமாயிடுச்சுங்கண்ணா.... :)

// கலாநிதி மாறன் போல் இருக்க ஆசை.. இரண்டு ஆசைக்குமான அடிப்படை தகுதிய வளத்துட்டிருக்கேன்.//
அதுக்கு நீங்க அடுத்த ஜென்மத்து வரையல்லவா காத்து கிடக்கணும். பின்ன கலைஞரின் குடும்பத்தில் பிறக்க வேண்டாமோ...

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

தமிழ் அமுதன் said...

/// அருவி குளியல் ரொமப் பிடிக்கும், அதிலும் குத்தாலத்துல ரூம் போட்டு சரக்கை அடிச்சிட்டு, நேரே அருவிக்கு கீழே நின்று அடிச்ச மப்பை இறக்கிட்டு, மறுக்கா ரூமுக்கு வந்து ஏத்திட்டு, இறக்கிற சுகம் இருக்கே..////


குற்றாலத்துல ''தண்ணில'' குளிக்கிற சுகமே தனிதான்!!

சிநேகிதன் அக்பர் said...

அனைத்து பதில்களிலும் நகைச்சுவை தூக்கல்.

"ஊருக்கு போனா பொண்டாட்டி புள்ளைங்க பக்கத்தில இல்லாம இருக்கிறதுக்கு வருந்துவேன். ஊருக்கு வந்தவுடனே.. இருக்கிறதுக்கு வருந்துவேன் :) "


புரிய‌ல‌ த‌ய‌வு செய்து விள‌க்க‌வும்.

குகன் said...

என் பதிவை குறிப்பிட்டதற்கு நன்றி தல..... :)

Mohan said...

சுவாரசியமாய் எழுதி இருக்கீறீர்கள்!
யாரவது சொல்லுங்களேன்! இப்போது தமிலிஷ் சைட் டவுன் ஆகி விட்டதா?

தொடர்பவன் said...

நல்லாதான் இருக்கு

Ashok D said...

Happyness? Happiness?
இப்போதான் படம் பாத்திங்களா... HBOல எப்போவோ போட்டான்... பிரமாதமான படம்..தலைவரே...

//பழுப்பு கலர் டவுசர்ன்னுகீறேன்னு வச்சுக்க//
என்னால யூகிக்கமுடியுது அது டவுசரா..இல்ல..!!!

//இண்டோரா.. ? அவுட் டோரா..?//

நீங்க நம்ம ஃப்ரெண்டுனா..

//நினைச்சு கேட்டீங்களோ அதே தான்//

புரிலங்கனா

//அருவிக்கு கீழே நின்று அடிச்ச மப்பை இறக்கிட்டு, மறுக்கா ரூமுக்கு வந்து ஏத்திட்டு, இறக்கிற சுகம் இருக்கே.. ம்ஹூம் போய் பல் வருச்ம் ஆச்சு. யாராவது கூட்டிட்டு போறீங்களா..?//

நான் கூட்டிட்டு போறன்னா... செலவ மட்டும் நீங்க பாத்துக்கங்கனா!!!

அடிக்கர வெய்யில்ல... குத்தாலம்..சரக்கு... அடிக்கரது ஏத்தரது... ம்ம்ம்....

அப்துல்மாலிக் said...

//இரண்டு ஆசைக்குமான அடிப்படை தகுதிய வளத்துட்டிருக்கேன்.
//

திறமைக்கு ஒரு நாள் அதிஷ்ட கதவு திறக்கும், முயற்சி பண்ணுங்கள்

பாலா said...

200................

:) :) :) :) :) :) :) :) :)

Kannan.S said...

superappu....

அத்திரி said...

//கொஞ்ச நாளைக்கு முன் அழைத்த அத்திரி, ரெண்டு நாளைக்கு முன் அழைத்த ஹாலிவுட் பாலா, நேற்று அழைத்த அக்னிபார்வை என்று அழைப்பு வந்த வண்ணம் இருந்ததால்// ///

அண்ணே இந்த பதிவு உங்களை எழுதச்சொல்லி கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆவுது... ஆனா இன்னைக்கு ஆலிவுட்டு பாலா கூப்புட்டாரு, அக்னி பார்வை கூப்பிட்டாருன்னு உடனே எழுதுறீங்களே.......... இவ்ளோ நாளும் இன்னா பண்ணிட்டு இருந்தீங்க. உங்க நுண்ணரசியல ரசித்தேன்..நல்லா இருங்க........

அத்திரி said...

பிரபலமான பதிவருங்க?????????????/ கூப்பிட்டாத்தான் எழுதுவீங்களோ??????

Cable சங்கர் said...

நன்றி அன்பு, வித்யா, நர்சிம், முரளீ, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

நன்றி ஹாலிவுட் பாலா, ஆதி, அக்னி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

எழுதுகிறேன் ஜூர்கேன்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க் நன்றி..

Cable சங்கர் said...

கோச்சுக்காதீங்க அத்திரி.. அதான் எழுதிட்டோமில்ல.. அப்புறமென்ன..

Cable சங்கர் said...

அசோக் நான் ஏற்கனவே நான்கு முறை படம் பார்த்துவிட்டேன்.. இருந்தாலும் ஒரு ரெபரன்ஸுக்காக பார்த்தேன்.

அட கூட்டிட்டு போவன்னு பார்த்தா.. :(

Cable சங்கர் said...

/இந்தப் பாவம் உங்கள சும்மா விடாது.. வெரைட்டியா சாப்பாடுத்தான் போடறாங்க :))//

அதானே பார்த்தேன் எங்க கார்கிய காணோமேன்னு.. :)

Cable சங்கர் said...

//அதுக்கு நீங்க அடுத்த ஜென்மத்து வரையல்லவா காத்து கிடக்கணும். பின்ன கலைஞரின் குடும்பத்தில் பிறக்க வேண்டாமோ...//

:) :)

Cable சங்கர் said...

மிக்க நன்றி ஜீவன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

Cable சங்கர் said...

201 பாலோயர்களா.. அய்யோ நான் என்ன செய்வேன். என்ன செய்வேன்.. நன்றி... நன்றி.. நன்றி..

தராசு said...

பதில்கள் அனைத்திலு ஒரு கேபிள் டச்,.... வாழ்த்துக்கள்.

201.... மறுபடியும் வாழ்த்துக்கள்

Romeoboy said...

Can you please tell me where can i buy the Doctor Prakash book .

உண்மைத்தமிழன் said...

இதுக்கு எதுக்குய்யா இவ்ளோ வில்லங்கமான பேரை வைச்ச..?

பார்த்தவுடனேயே பகீர்ன்னு ஆயிப் போச்சு..

சரி.. சரி.. ஒரு ரெண்டு நிமிஷம் நல்லா பொழுது போச்சு..

K.S.Muthubalakrishnan said...

Sir , come to Courtallam i am at Tirunelveli.

all answers r kallakal