போன வாரம் வியாழன் அன்று ”ஹலோ ஜெயாடிவி” நிகழ்ச்சியில் நேரலையாகவும், மறு ஒளிபரப்பாகவும், நான் பங்கு பெற்ற நேயர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பினார்கள். பல பதிவர்கள் நிகழ்ச்சியில் போன் செய்து கலந்து கொண்டார்கள், பல முயற்சி செய்து, முயற்சி செய்து நொந்து போனதாகவும், சொன்னார்கள். பார்த்தவர்கள் பாராட்டினார்கள், பலர் வலையேற்ற சொன்னார்கள்.
வழக்கமாய் நான் பங்கு கொள்ளும் பல நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காகவே என்னுடய கணினியில் டிவி டியூனர் கார்ட் வைத்திருக்கிறேன். அந்த சனியன் பிடித்த கார்டு அன்னைக்கு பார்த்து மக்கர் செய்துவிட்டது. (அதானே வேணுங்கிற போது வேலை செய்யாதே.) அந்த கடைசி நேரத்தில், யாரிடம் சொல்லி ரிக்கார்ட் செய்ய என்று ஒன்றும் புரியவிலலை. மாலை மறு ஒளிபரப்பு வந்த போது கோவை நண்பர் சஞ்செயிடம் சொல்ல, அவர் பதிவர், நண்பர் கும்கியிடம் சொல்லி ரிக்கார்ட் செய்வதாய் சொன்னார். அவர் இதற்காக அவசர அவசரமாய் அலுவலகத்திலிருந்து ,வீட்டுக்கு வந்து பதிவு செய்ய ஆரம்பிப்பதற்குள், பத்து நிமிட நிகழ்ச்சி போய்விட்டது. இருந்தாலும் பதிவு செய்து டிவிடியை அனுப்பினார். அந்த அன்பான நெஞ்சுக்கு மிக்க நன்றி.
இதற்குள் தமிழிசை என்றொரு நண்பர் முழு நிகழ்ச்சியையும் வலையேற்றி அதற்கான லிங்க எனக்கு அனுப்பினார். அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இதோ அந்த உலக புகழ் நேரலை நிகழ்ச்சி.. ஹி.ஹீ..ஹி
முழுசா..பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நண்பர்களே..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஆஹா ஓஹோ அண்ணே பேஷ் பேஷ்....
அட்டகாசமான நிகழ்சிண்ணே... பின்னீட்டீங்க.....
நிகழ்ச்சியில் நானும் போன் பண்ணி பேசியது ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே...
இன்னும் பல அரங்கங்களில் உங்கள் திறமை வென்றிட வாழ்த்துக்கள்ண்ணே....
(அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா பின்னால யூஸ் பண்ணிக்குவோம் )
:))
நீங்க சொல்லமா வந்து இருக்க மாட்டிங்களே..:))
வாழ்த்துக்கள்.
நன்றி சுகுமார்
(அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா
பின்னால யூஸ் பண்ணிக்குவோம்//
:)
நீங்க சொல்லமா வந்து இருக்க மாட்டிங்களே..:))//
ஹி..ஹி.. நம்மள பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சுப்பா..
நன்றி கவுதம்.
எப்படி இருந்திச்சுன்னு சொல்லவேயில்லையே..பாலா..
//
நன்றி ராதாகிருஷ்ணன் சார்..
//
நன்றி அக்னிபார்வை..
நான் நல்ல புள்ள தானே அக்னி..
:))//
காலையில ஒரு முக்கியமான வேலையிருக்கு.. அதுனாலதான் ராத்திரியே போட்டுட்டேன். அண்ணே....
என் போன்றவர்களால் நேரடியாக பார்க்க வாய்ப்பே இல்லை எனும் நிலையில், இது போன்ற பதிவேற்றத்தில் பார்க்க வழி செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆர்வமாய் இருந்தாலும், அலுவலகத்தில் இயலாது. மாலைக்காக காத்திருக்கிறேன், உங்களின் கலக்கலை கான...
பிரபாகர்.
sema handsome aa irukkinga
நல்ல நிகழ்ச்சிதானே சார்... அப்புறம் என்ன சிரிப்பு வேண்டி கிடக்குது?
இதுபோல அடிக்கடி நிகழ்ச்சிகளை தங்கள் வலைப்பூவில் ஒளிபரப்புங்கள் நண்பரே...!
வலையேற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.
ச்சீ..ச்சீ நைட் பாக்குற அளவுக்கு அதுல ஒன்னுமே இல்லையே..!
நம்மாளுக ரொம்பத்தான் கடைமை உணர்ச்சியோட இருக்காக..!
எல்லாருமே ஆபீஸ் அவர்ஸ்ல பாக்க மாட்டாங்க போல.
இந்த வர விகடன் கதை இதுக்கு முன்னாடி படிச்சமடிரி இருக்கு blog ல எழுதன கதைய
பார்த்துவிட்டுக் கருத்துத் தெரிவிக்கிறேன். பதிவர் சந்திப்பு பற்றி விரிவான பதிவு எழுதியிருக்கிறேன். வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஸ்ரீ....
தெரிஞ்சிக்கலாமா?
( எப்படிங்க, இதெல்லாம்? ;) )
டிவியில் பார்ப்பதை விட அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது இணையம்.. :(
sema handsome aa irukkinga//
நல்லா சத்தமா சொல்லுங்க.. மாயாவி.. ஹே.. நான் ஹாண்ட்சம், நான் ஹாண்ட்சம்.. ஹி.ஹி.ஹி
பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்
@லொல்லு சபா..
நன்றி
@முத்துராமலிங்கம்
மிக்க நன்றி
நன்றி, யூர்கேன் க்ருக்கர், டோன்லி, சுரேஷ்
நன்றி கார்க்கி, டக்ளஸ், முரளிகண்ணன்.
நன்றி பிஸ்கோத்துபயல், ராஜன், ஸ்ரீ,
கதிர், அன்பு, அன்புடன் அருணா, தமிழ்மாங்கனி, மணிப்பக்கம்,
இப்படித்தான் தேவையான போது எதுவும் விளங்காது.. :(
//
சொன்னேன்.. ஆனா லைவ்ல இல்ல...
பாலபாரதி அண்ணே.. ஊருக்கு ஒரு தல தான்.. அது நீஙக் மட்டும்தான்.. ரொம்ப நன்றிண்ணே..
ஏன் அங்கயேதானே இருக்கு.. விஜய்..
ரொம்ப நன்றி குடுகுடுப்பை.. பாவம் பாக்க போறது ஜனங்க தானே..?
வாலுக்கு என்னவோ.. அந்த பொண்ணு மேல ஒரு கண்ணாவே இருக்காரூ..
வாழ்த்துக்கள் சங்கர்!!
என்ன, பேட்டி முடிஞ்சு கிளம்பும்போது நம்ம வழக்கமான "லுல்லா" ஜோக்க எடுத்துவிட்ருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்.. :)
இரண்டு மூன்று நாட்களாக விட்டு விட்டு மொத்த நேர்முகத்தையும் பார்த்து ரசித்தேன். பரபரப்பு இல்லாமல் சகஜமாக உங்கள் பதில்களை கூறிய பாணி அலாதி.
// (அப்புறம்... முகத்தை எப்டி இப்டி பச்சை குழ்ந்தை போல வச்சிகிரதுனு தனியா ஒரு பதிவு போட்டீங்கன்னா
பின்னால யூஸ் பண்ணிக்குவோம்//
சிரிச்சு மழுப்புனா விட்டுருவோமா.... பதில பதிவா போட்டா எல்லோரும் தெரிஞ்சுப்போமுல்ல :)
//ஹி..ஹி.. நம்மள பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சுப்பா.. //
அப்ப சொல்லிட்டீங்களா... சரி அந்த பொண்ணு ப்ளாக் அட்ரஸா தெரியபடுத்துங்க ;)
// /ஒரே ஒரு பிரச்சினை அண்ணே... நம்ம வழமையான பஞ்ச்.. அதாங்க ‘ஏ' ஜோக் இல்லையே
//
சொன்னேன்.. ஆனா லைவ்ல இல்ல...//
இதெல்லாம் ரொம்ப ஓவரு... ஆமா சொல்லிபுட்டேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ....
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
I read this and saw the video today only. Excellent. Your interview was good and simple language and flow. Good that you did not try to speak in written tamil and used normal speech tamil.
the lady also interviewed well.
All the best..!