Thottal Thodarum

Jun 6, 2009

மாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்

mayandi

தமிழ் சினிமாவில் திடீர்ரென்று ஏதாவது அதிரடியாய் செய்வார்கள். அப்படி இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்டிருக்கிறார்கள். அதை தவிர ஏதும் புதுமையா எதுவுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படத்தில் நடித்த ஒரு சில இயக்குனர்கள் இயக்கத்தை விட்டு நடிப்பதையே தொழிலாய் கொண்டு ரொம்ப நாளாகிவிட்டவர்கள்.

மாயாண்டியான மணிவண்ணனின் குடும்பத்தில் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத்,  கடைகுட்டி தருண்கோபி, அக்கா, அக்கா கணவராய் ராஜ்கபூர், இன்னொரு பக்கம், மணிவண்ணனின் அண்ணனான ஜி.எம்.குமார், அவரது நான்கு மகன்கள், ரவிமரியா, நந்தா பெரியசாமி, சிங்கம்புலி. இருவர் குடும்பத்திற்கும், சொத்து தகராறு அதனால் பகை. ஆனால் இதுதான் கதை என்று நினைதால் அதுதான் இல்லை.

மாயாண்டி இறந்ததும் கடைகுட்டி தருண் கோபியை எல்லோரும் கைகழுவி விடுவதும், சொத்துக்களை பிரித்து கொண்டு வாழ்வதும்,  பின்னால் குடும்பத்துக்காக, எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டு, எல்லாரையும் சேர்ப்பதும், இதற்கு நடுவில் தருணின் காதல், படிப்பு என்று ஒரு ட்ராக். போய் இரண்டு குடும்பமும் ஒன்றாய் சேர்கிறதா..? என்று ஒரு டிராக் கதை ஓடுகிறது.

நடிப்பதில் இயக்குனர்கள் மணிவண்ணனும்,  லூசு பையனாய் வரும் சிங்கம்புலி, ஜெகன்,  ஸ்கோர் செய்கிறார்கள்.  சிங்கம் புலி அவர் அப்பாவின் ஒவ்வொரு பொருளை கேட்கும் போதும் “:நீ செத்தா இது எனக்குதானே “ என்று கேட்பதும், ஐஸ் வாங்கி கொடுத்ததுக்காக,  இரண்டு குடும்பத்துக்கும் ஒரு பெரிய சண்டை நடக்க, தூரத்தில் ஐசை சப்பியபடி, “ஏன்டா ஐஸுக்காக சண்டை போடறீஙக். கேட்டா வாங்கி தராமாட்டாரு சித்தப்பா என்பதும்,  எப்படி குழந்தை பொறக்குது என்று கேட்டபடி அலைவதும் செம காமெடி, இவரும் , மயில்சாமியும் இல்லையென்றால் நொந்து போயிருபோம். சீமான் விவசாய போராட்டம் நடத்துபவராக வருகிறார். ஒரு பாட்டை பாடிவிட்டு ரெண்டு சீனுக்கு ஒரு முறை டயலாக் பேசிவிட்டு போகிறார். பொன்வண்ணனுக்கு ஒண்ணும் சொல்லி கொள்ளும்படியாய் இல்லை., ஜெகன் இயல்பான கேரக்டர்.  பழைய பாடல்களை போட்டு எதிர் கடை செவிட்டு பெண்ணை கரைக்க டிரை பண்ணுவதும், அது தோல்வியாவதும், இயல்பான நகைச்சுவை.  தருண் கோபி  எப்ப பார்த்தாலும் இடுங்கிய கண்களுடன் எந்த விதமான எக்ஸ்பிரஷனும் இல்லாமல் நடிக்கிறார். நடிப்பது எவ்வளவு கஷ்டமென்று புரிந்திருக்கும்.  அவரது காதலியாய் தமிழரசி.. வழக்கமான கிராமத்து பெண்.

படத்தில் தருண் காலேஜில் சேர வேண்டும் என்று போகிறார். ஆனால் என்ன காலேஜ் என்று தெரியவேயில்லை. ஒரு காட்சியில் கதாநாயகி சொல்லும் போதுதான் அவர் இஞ்சினியருக்கு படிக்கிறார் என்று தெரிகிறது. மூன்றே காட்சிகளில் இஞ்சினியருக்கு படித்து, காம்பெஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு சேர்ந்துவிடுகிறார் கொடுத்டு வைத்தவர். எல்லோரும் சொல்லி வைத்தார் போல் ஒரு சீன் முடிந்து அடுத்த சீனில் திருந்தி விடுகிறார்கள். நந்தா பெரியசாமி, ரவிமரியா எல்லாம் யாரென்று தெரியாதவர்களுக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரிதான்.

இயக்குனருக்கு வழக்கம் போல லைவ் மேக்கிங் வியாதி, அதனால் திருவிழா, குடித்துவிட்டு ஆடுவது என்ற எல்லா சிம்டம்ஸும் படத்தில் தெரிகிறது. பழைய திரைபாடல்களை படம் பூராவும் உபயோகபடுத்தியிருக்கும் விதம் ரசிக்கும்விதமாய் இருக்கிறது.  ஆங்காங்கே சில வசனங்கள் ந்ன்றாய் இருக்க, பல இடங்களில் வள, வள,  சில இடஙக்ளில் கண் கலங்க வைக்க முயற்சி செய்ததில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  தருணின் காதல், தோல்வி, அதற்கான காரணம் எல்லாம் சரியாய் ரிஜிஸ்டர் ஆகவேயில்லை க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரு சொடக்கு போடும் நேரத்தில் மாறுவது சினிமா.

சபேஷ் முரளியின் இசையில் ஒரு டூயட் பரவாயில்லை. ஒளிப்பதிவும் ஓகே

மாயாண்டி குடும்பத்தார் – ஆம்பளை மெகா சீரியல்
நிதர்சன கதைகள் -9- மகாநதியை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

34 comments:

Cable Sankar said...

tst

Anbu said...

படம் பார்க்கலாமா அண்ணா

biskothupayal said...

கால் மேல் கால் போட்டுகொண்டு சொன்னால்
மொத்தத்தில்
மாயாண்டி குடும்பத்தார்

போங்காண்டி குடும்பத்தார்

டக்ளஸ்....... said...

ரைட்டு...!
படம் ஊத்திக்கிச்சா....?

saran said...

Thanks Sir..

வண்ணத்துபூச்சியார் said...

மாயாண்டி = போங்காண்டி

இது சூப்பர்.

நன்றி பிஸ்கோத்து...

இராகவன் நைஜிரியா said...

பத்து இயக்குனர்கள் சேர்ந்தாலும், நல்ல படமா எடுக்க முடியவில்லையா?

அக்னி பார்வை said...

//மாயாண்டி குடும்பத்தார் – ஆம்பளை மெகா சீரியல்////

ha ha ha ha

குப்பன்_யாஹூ said...

how dare u r going to watch these kind films

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்பாடா..

இன்னுமொரு நூறு ரூபாய் மிச்சம்..

நல்லாயிரு சாமி..!

நர்சிம் said...

ம்

D.R.Ashok said...

தாங்ஸ் மாயாண்டி அண்னே .. சாரி கேபிளார் அண்னே

T.V.Radhakrishnan said...

//நடிப்பது எவ்வளவு கஷ்டமென்று புரிந்திருக்கும்//

:-)))

Cable Sankar said...

பார்க்கலாம் அன்பு..

Cable Sankar said...

//கால் மேல் கால் போட்டுகொண்டு சொன்னால்
மொத்தத்தில்
மாயாண்டி குடும்பத்தார்

போங்காண்டி குடும்பத்தார்

//

:)

Cable Sankar said...

//ரைட்டு...!
படம் ஊத்திக்கிச்சா....?

//

அவ்வளவு மோசம் கிடையாது டக்ளஸ்.. தோரணையெல்லாம் பாக்கும்போது இது எவ்வளவோ மேல்.

Cable Sankar said...

நன்றி சரண், வண்ணத்துபூச்சியார், இராகவன்.

Cable Sankar said...

நன்றி ராதாகிருஷ்ணன், நர்சிம், அசோக், குப்பன் யாஹூ,அக்னிபார்வை, உண்மைத்மிழன்.. மரியாதையா காசை எடுத்து வைங்க.. ஆமா சொல்லிபுட்டேன்.

thenral_2009 said...

//மாயாண்டி குடும்பத்தார் – ஆம்பளை மெகா சீரியல்//


வழமையா டிவி சீரியல் அம்மாக்களுக்கு பிடிக்கும்ல அப்போ இது அப்பாக்களுக்கு பிடித்த சீரியலா?.ஹா ஹா ஹா

நாடோடி இலக்கியன் said...

//மாயாண்டி குடும்பத்தார் – ஆம்பளை மெகா சீரியல்//

:))

இது நம்ம ஆளு said...

க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரு சொடக்கு போடும் நேரத்தில் மாறுவது சினிமா.

பழைய திரைபாடல்களை படம் பூராவும் உபயோகபடுத்தியிருக்கும் விதம் ரசிக்கும்விதமாய் இருக்கிறது.

சூப்பர் விமர்சனம் அண்ணா.

வெண்பூ said...

ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல.. ஹி..ஹி..

வித்யா said...

நோ கமெண்ட்ஸ்:)

Anonymous said...

ஹி ஹி... இந்த விமர்சனத்த நேத்திக்கி நீங்க சொல்லி நேர்லயே கேட்டாச்சே... அத எல்லாருக்கும் சொல்லிக்கத்தான் இந்த பின்னூட்டம்...

ஆதவன் said...

இந்தப் படத்தில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தருண் கோபி நடிப்பு, மற்றும் ஒன்று இரண்டு காட்சிகளைத் தவிர இந்தப் படம் எனக்கு தெரிந்து நல்லப் படம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை இருக்கும். ஆதலால் எல்லோரும் படத்தை போய் பாருங்கள்.. உங்கள் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கும்.. (குறிப்பு. நான் இந்த படத்தின் P.R.O கிடையாதுங்க..)

Cable Sankar said...

நன்றி நாடோடி இலக்கியன், தென்றல்2009, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable Sankar said...

நன்றி வெண்பூ, வித்யா, இது நம்ம ஆளூ..

Cable Sankar said...

நன்றி விஜய கோபால்சாமி..

Cable Sankar said...

//இந்தப் படத்தில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தருண் கோபி நடிப்பு, மற்றும் ஒன்று இரண்டு காட்சிகளைத் தவிர இந்தப் படம் எனக்கு தெரிந்து நல்லப் படம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை இருக்கும். ஆதலால் எல்லோரும் படத்தை போய் பாருங்கள்.. உங்கள் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கும்.. (குறிப்பு. நான் இந்த படத்தின் P.R.O கிடையாதுங்க..)

//

ஆமாம் ஆதவன். நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.. நிச்சயமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிப்பு தன்மை இருக்கும்,

ஆனால் நீஙக்ள் சொன்னது போல் தருண்கோபி நடிப்பும் சில காட்சிகளூம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. தருண்கோபி க்தையின் நாயகன். அவர் நடிப்பு கொடுமையாய் இருந்தால் முழுபடம் பார்ப்பது எப்படி..?

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

ஷண்முகப்ரியன் said...

படம் நன்றாக் இருக்கிற்து என்று பரவலாகப் பேச்சு வந்திருக்கிறது,ஷங்கர்.

Cable Sankar said...

//படம் நன்றாக் இருக்கிற்து என்று பரவலாகப் பேச்சு வந்திருக்கிறது,ஷங்கர்.

//

தோரணை பார்த்தவங்களூக்கு இந்த படமெல்லாம் தேவாமிர்தம்தான் சார்.. கடந்த மூன்று நாட்களாய் கலெக்‌ஷன் மிக மோசம்..

sathya said...

என்னைக் கேட்டால் இந்தாண்டின் சிறந்த படம் (நான் பார்த்தவரையில்) என்று சொல்வேன். புதிதாக கதை பண்ணுகிறேன் பேர்வழி என்று ஜார்ஜ் புஷ்ஷையும் குலோத்துங்க சோழனையும் ஒரே frame-இல் கொண்டு வர போராடாமல், துணை நடிகர்கள் செய்யத் தகுதியான பாத்திரங்களில் கூட நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து, எட்டு மணி நேர மேக்கப் போட்டு தானும் கஷ்டப்பட்டு மத்தவர்களையும் கொடுமை படுத்தாமல் யதார்த்தமாக வாழ்ந்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இது சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படத்தில் காட்டப்படும் ஒவ்வரு கதாபாத்திரமும், தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இன்றும் வாழ்ந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த விமர்சனத்தை படித்து இந்த படத்தை பார்க்காமல் இருப்பவர்களுக்கு ஒரு கோரிக்கை - தயவுசெய்து இந்த படத்தை ஒருமுறை பாருங்கள். You can do much worse!

Gadgets Man said...

இந்த படத்தை சரியில்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்றால், ஒன்று ஒரு சிறந்த படத்தை ரசிக்கத்தெரியாதவர்கள். இரண்டு சினிமாவின் புதையுண்டு போயிருக்கும் யதாத்தமற்ற பிம்பங்களில் ஊறிப்போனவர்கள் ஆக மட்டுமே இருக்க முடியும்.

என்னைப்பொருத்தவரையில் தமிழ் சினிமா உலகில் இப்படம் ஒரு மைல்கல்