இந்த மாதமும், ஐபிஎல் தொடர்ந்ததால் மிக குறைவான அளவில் தான் படங்கள் வெளிவந்தன. சென்ற மாதம் வெளியான அயன் நல்ல வசூலை அறுவடை செய்துள்ளது.
பசங்க
இம்மாத ஆரம்பமே ஒரு அருமையான படத்துடன் ஆரம்பித்தது. வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து வேறுபட்ட சிறுவர்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பப்ளிக் ரிப்போர்ட்டும், பத்திரிக்கைகளின் பாராட்டுகள் ஏராளமாய் இருந்தாலும், பெரிய ஓப்பனிங் இல்லை. பல பி செண்டர் இடங்களில் எடுத்துவிட்டார்கள், ஆனால் ஏ செண்டர்களில் நன்றாகவே போகிற்து. மாதத்தின் கடைசி வாரங்களில் நல்ல பிக்கப் என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான படஙக்ள் ஒட வேண்டும். அப்போதுதான் நல்ல படஙக்ல் வரும். அது நம் ரசிகர்களிடையே தான் இருக்கிறது.
நியூட்டனின் 3ஆம் விதி
பாவம் ஏற்கனவே எஸ்.ஜே. சூரியா செய்த படங்களின் பாதிப்பால், இப்படத்திற்க்கு எதிர்வினை ஆகிவிட்டது என்றும் சொல்லவேண்டும். நல்ல பரபர்ப்பான திரைக்கதையிருந்தும் பெரிதாக போகவில்லை. அதற்கு முக்கிய காரணம் படத்தின் க்ளைமாக்ஸும், லவ் ட்ராக்தான் என்று சொல்கிறார்கள்.
மெய்பொருள்
இப்படம் போன மாதம் ரிலீஸ் ஆகி தொலைத்துவிட்டதால் லிஸ்டில் சேர்க்க வேண்டியதாகி போய் விட்டது. மற்ற்படி சொல்வதற்கு வேறு ஏதுமில்லை.
பில்லாவுக்கு அடுத்தபடியாய் விஷ்ணுவர்தன் படம் என்று மிகவும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம். அருமையான ஒளிப்பதிவு, இசை எல்லாம் இருந்தும், திரைக்கதையால் உக்கார்ந்துவிட்டது.
பிரம்ம தேவா
இந்த படமும் ரிலீஸசாகி விட்டதினால் எழுத வேண்டிய லிஸ்டில் இருக்கு அவ்வளவுதான். இதுக்கு மேல எதாவது எழுதணுமின்னா அழுதுடுவேன்.
ராஜாதி ராஜா
சக்தி சிதம்பரம், மும்தாஜ், லாரன்ஸ், மற்றும் சில பிகர்கள் நடமாடிய படம். மும்தாஜ் பரவாயில்லை.மீனாட்சியின் கவர்ச்சியை நம்பி படம் இருக்கிற்து. ரொம்பவும் சுமாரான ஓப்பனிங். மற்றபடி அடுத்து வரும் படங்களை வைத்துதான் சொல்ல முடியும்.
தோரணை
மாதத்தின் கடைசியில் ரிலீஸாகியிருப்பதால் ரிசல்ட் ஒண்ணும் தெரியவில்லை.. மவுத் டாக் மிகவும் மோசம்.
மொத்தத்தில் ஏழு படஙக்ள் வெளியான மே மாதத்தில் ஓரளவுக்கு அபவ் ஆவரேஜ் படமென்றால் பசங்க மட்டுமே.. மற்றவையெல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. போன மாதத்திய ஹிட்டான அயன் இந்த மாதமும் முண்ண்னியில் நிற்கிற்து. சுமாராய் இந்த படம் 35 கோடிவரை வசூல் செய்யும் என்று சொல்கிறார்க்ள். சைதை ராஜில் மூன்று வார ஷேர் மட்டும் 12 லட்சமாம்.. பக்கத்தில் உதயம், காசி என்று எல்லா தியேட்டர்களில் வெளியிட்டும் இந்த வருமானம்.
சென்னையிலும், ஆந்திராவிலும் வெளியான தெலுங்கு படம் கிக் போன மாதத்திய தமிழ் தவிர ஹிட்டான் படம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
:-))
நல்ல தொகுப்பு கேபிள் சங்கர்.
சைதை ராஜ் பற்றிய தகவல் அருமை
பசங்க யூ.எஸ்ஸில் ரிலிசாக வில்லை.. மற்ற ஊர்களின் நிலைமையை விசாரித்து சொல்கிறேன் மாயாவி..
சைதை ராஜ் பற்றிய தகவல் அருமை//
நன்றி முரளிகண்ணன்.
நல்ல விஷயம் செஞ்சீங்க.. உங்களுக்கென்ன தலையெழுத்தா எல்லா படத்தையும் பாக்கணுமின்னு.. சந்தோஷமா இருங்க வித்யா..
மற்ற எல்லாம் சாய்ஸல விட்டாச்சு {உபயம்: கேபிளார் }
oversea naa US thana.......... malaysia singapore ethuellam ungga kannuku teriyathaaa :((( if no malaysia n singapore then there are no oversea market for tamil movie's.....
வலைப்பதிவர்களே ! நம்பாதீங்க !!!
_________ இது விஷாலின் புலம்பல் !!..
அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் பசங்க மட்டுமே... மத்ததெல்லாம் லோ க்ளாஸ் வேஸ்டேஜ் பொருட்கள்.
ÇómícólógÝ
ஹஹா..
மற்ற எல்லாம் சாய்ஸல விட்டாச்சு
{உபயம்: கேபிளார்
இனிமே மாசா மாசம் கப்பத்த வாங்கிட வேண்டியதுதான். வண்ணத்து பூச்சியாரே..
சிண்டாக்.. ஓவர்சீஸ்னா யூ.எஸ்மட்டுமில்லைன்னு தெரியும் பாஸூ.. மற்ற நாடுகளின் விவரம் தெரியாததால யூ.எஸ் மேட்டரை சொல்லி மற்றதை அப்புறமா சொல்றேந்தான் சொல்லியிருக்கேன்.