click here

TT

Thottal Thodarum

Jun 26, 2009

முத்திரை - திரைவிமர்சனம்

Muthirai

டேனியல் பாலாஜி, நிதின் சத்யா, ஸ்ரீநாத, யுவன், என்று கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி.  கிடைத்த வாய்ப்பில் முத்திரை பதிக்காமல் போய்விட்டார்கள்.

இரண்டு ஸ்மால் டைம் திருடர்கள், ஒருவன் ஹைடெக், இன்னொருவன் லோக்கல் பிக்பாக்கட், இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.  ஹைடெக் லஷ்மிராயையும், நிதின் மஞ்சரியையும், காதலிக்கிறார்கள். அவர்களின் ப்ளாட்டில் வசிக்கும் சேத்தனிடம் ஒரு அரசியல் கொலை ரகசியம்  மாட்ட அவனிடமிருக்கும் ரகசியம் அடங்கிய  லேப்டாப் இவர்களிடம் மாட்டுகிறது. ஒரு பக்கம், போலீஸ், இவர்களை துரத்த, மறுபக்கம், வில்ல்ன் பார்ட்டிகள் துரத்த, என்று மாறி, மாறி ஓடுகிறார்கள். திடீரென திரும்பி நிற்கிறார்கள்.  அதற்கு அப்புறம் என்ன என்பதுதான் க்ளைமாக்ஸ்.

4-281-10695

பரபரப்பாக சொல்ல வேண்டிய கதை. படு சொதப்பலாக சொல்லியிருக்கிறார்கள். அதிலும் முதல் பாதியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள்,  என்று ஒரே உட்டாலக்கடி, இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட டுவிஸ்டுகள வைத்திருக்கிறார்கள். எல்லாமே கொஞ்சம் டூமச்சாய், ஏதோ முடிக்க வேண்டும் என்ற அவரசம் தெரிகிறது.

டேனியல் பாலாஜியை சட்டென்று ஹீரோவாக ஏற்று கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அவரது டயலாக் டெலிவரி இன்னும் வேட்டையாடு விளையாடுவை ஞாபகபடுத்துகிறது. நிதின் சத்யா கொஞம் இயல்பாய் இருக்கிறார். இடையிடையே ஒன்லைனர்களில் மிளிர்கிறார். லஷ்மிராய் ராக்கி சவந்துக்கு போட்டியாய் சும்மா பின்னி எடுக்கிறார். அவருக்கு வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள், தாலி செண்டிமெண்ட் எல்லாஒம் படு அமெச்சூர்.  மஞ்சரி தொலிப்ரேமா என்கிறா தெலுங்கு பட ஹீரோயினை ஞாபகபடுத்துகிறார். நடிக்கிறேன் என்று நம்மையும் படுத்துகிறார். நிதினை சிபிஐ ஆபிசர் என்று நம்புவது காமெடியாய் இருந்தாலும், ஒரு ராணுவ ஆபிசரின் பெண் இப்படி நம்புவது நம்பும்படியாய் இல்லை.
untitled-19-copy

இசை யுவன் சங்கர் ராஜாவாம். சொன்னாத்தான் தெரியுது. இந்த வருட்த்திய ஒர்ஸ்ட் ஆல்பம் ய்வனுக்கு இதுவாகத்தான் இருக்கும்.சலீமின் ஒளிப்பதிவு ஆங்காங்கே மிரளவும், ஆங்காங்கே திரளவும், காட்டியிருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீநாத், கதை, திரைக்கதை, கிரியேட்டிவ் டைரக்‌ஷன் செய்திருக்கும் அனீசின் சொதப்பல் திரைக்கதையால் இவர் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்சி அமைப்புகளிலாகட்டும், மேக்கிங்கில் ஆகட்டும் பழைய ஹிந்தி படஙக்ளை பார்க்கும் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ராத்திரியோடு ராத்திரியாக வீட்டை விட்டு ஒடும் நால்வரும், அடுத்த அடுத்த காட்சிகளில் புது , புது காஸ்டியூமில் அலைவது, பொட்டை காட்டில் லாப்டாபிலிருந்து, இண்டெர்நெட் கனைக்ட் செய்வது, ஏதோ பக்கத்து பேட்டை வஸ்தாதை மிரட்டுவதுவ் போல் கமிஷனரை மிரட்டுவது எல்லாம் ஓவர். க்ளைமாக்ஸ் சீனில் காட்டில் ஒளிந்திருக்கும் ஹீரோக்கள், திடீரென ஸ்போர்ட்ஸ் காரில் வந்திற்ங்குவது,  ஹனீபா, லஷ்மிராய், டேனியல் பாலாஜி  டிராக் படு சொதப்பல். அனீசின் இடையூறு இல்லாதிருந்தால் நிச்சயம் ஸ்ரீநாத முத்திரை பதித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

முத்திரை மாத்திரை எடுத்து செல்லவும்.


Post a Comment

17 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

ஏற்கனவே பலபேர் அலசிட்டாங்க!
இருந்தாலும் உங்க அலசல் நச்.

சங்கா said...

முத்திரை – மாத்திரை எடுத்து செல்லவும். நாங்க மாத்திரை எடுத்திட்டுப் போய் எதுக்குப் பார்க்கணும்? அதான் பெரியவங்க சொல்லீட்டீங்கல்ல?! பேசாம போர்வையப் போர்த்திட்டுத் தூங்கிடுவோம், அக்காங்!

ஜெகநாதன் said...

நல்ல விமர்சனம். படம் பாக்கும்போது எதாவது கருகிற வாசம் வந்துசுங்களா?? ஏன்னா கதையை படிக்கும் போது இங்கிலீஷ் படத்தைச் சுட்டிருப்பாங்களோன்னு தோணுது

தராசு said...

ரைட்டு, தல வந்துட்டாரு

MayVee said...

"மஞ்சரி தொலிப்ரேமா என்கிறா தெலுங்கு பட ஹீரோயினை ஞாபகபடுத்துகிறார்"

சார் .... அது கீர்த்தி ரெட்டி ; தமிழ்யில் கூட நடிச்சு இருக்காங்க ..

தமிழில் அந்த படம் அனந்த மழை ன்னு வந்துச்சு ......


ஹாட் ஸ்போட் ல இருக்கிற படம் நச்சு ....

( படத்தை பற்றி ஒன்னும் சொல்வதற்கு இல்லை)

கார்க்கி said...

பரிசல் காப்பாத்திட்டாரு

முரளிகண்ணன் said...

பைனைல் டச் சூப்பர்

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல வேளை,கொடைக்கானல் சென்று ஒரு வாரத்திற்குள் திரும்பி விட்டீர்கள்.

உங்க விமர்சன முத்திரை தான் நச்.

நையாண்டி நைனா said...

I think, It may be an "AGMARK" Tamil movie.

ஆனந்தன் said...

அப்பா இந்த படமும் ஊதிக்கிடுச்ச நாற்பது ருபாய் மிச்சம் ...

அக்னி பார்வை said...

இந்த படமும் நட்டுகிச்சா

statistics said...

சூப்பர்ங்கண்ணா ....

Cable Sankar said...

நன்றி சங்கர். முத்துராமலிங்கம்.

Cable Sankar said...

நன்றி ஜெகன்நாதன், அப்படி ஏதும் ஞாபகத்துக்கு வரவில்லை..

Cable Sankar said...

நன்றி கார்க்கி, தராசு, முரளிகண்ணன்.

Cable Sankar said...

/நல்ல வேளை,கொடைக்கானல் சென்று ஒரு வாரத்திற்குள் திரும்பி விட்டீர்கள். //

நீங்கள் எல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் வண்ணத்துபூச்சியாரே..

Cable Sankar said...

நன்றி அக்னிபார்வை, ஸ்டாடிஸ்டிக், ஆனந்தன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.