Thottal Thodarum

Jun 17, 2009

ராகவன் -திரைவிமர்சனம்

ragavan_m

செல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.

ragavan-stills14

சென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான்?, அவனின் காதல் என்னவாயிற்று? என்பதே க்ளைமாக்ஸ்.

ragavan-wallpaper05

ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை.  படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண்  மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான்? சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான்? அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான்? ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே? போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.

ragavan-wallpaper04

அவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின் இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.

ராகவன் -  எஸ்கேப்.

டிஸ்கி

பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே  கசமுசா..  இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.


Post a Comment

41 comments:

டக்ளஸ்....... said...

**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**
**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **

ரைட்டு...!

தராசு said...

படம் பாக்க போனா வெறும் படத்தை மாத்திரம் பாக்க வேண்டியது தான, படத்தை பாக்காம சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் பாக்க வேண்டியது, அப்புறமா படத்துல அது புரியல, இது புரியலன்னுட்டு, சின்னப் புள்ளத்தனமாய்ருக்கு.

சித்து said...
This comment has been removed by the author.
சித்து said...

ரிஸ்க் எடுக்குறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி போல?? இப்படி ஒரு படம் வந்துருக்குனு நீங்க சொல்லலைனா சத்தியமா தெரியாதுங்க.

கலையரசன் said...

//சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம்//

தலைவா.. அப்ப யாருதான் இல்லங்கறீங்க?

இவ்ளோ சொன்னத்துக்கு அப்புறமும், படம்
பாக்காம இருக்க நான் என்ன டோமாங்கோலியா?
இன்னகே பாத்துடுறேன்!

வசந்த் ஆதிமூலம் said...

நையாண்டி நைனா நீ எந்த கார்னர்ல இருந்த ? சைடுல ஓடுன மூணு படத்துல ஒரு படம் உன் படம்னு சொல்லிகிறாங்கப்பு.....

எவனோ ஒருவன் said...

//இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது//
இப்படியே அடிக்கடி சொல்றீங்களே! நம்ம ஆளுங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் திறமை பத்தாதோ?

//தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//
எந்த தியேட்டர் அண்ணே?

வெண்பூ said...

//
ஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். //

:((((((((

வெண்பூ said...

//
பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.
//

நீங்க தனியாவா போனீங்க??????

Cable Sankar said...

நன்றி டக்ளஸூ..

வடிவேலன் ஆர். said...

**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**
**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **

வீட்ல பட விமர்சனத்திற்கு என்று சொல்லிவிட்டு பிட்டு படம் பார்த்துவிட்டு வந்து எங்களிடம் இது ஒரு பிட்டுபடம் பார்த்த பீலிங் என்று சொல்கிறீர்கள். தங்கமணியிடம் நன்றாக மாட்டிக் கொள்ள போகிறீர்கள்

நையாண்டி நைனா said...

அண்ணே... உங்க டிஸ்கி தான் சூப்பர்....
அப்புறம் இந்த மாபெரும் திரை காவியம் எல்லாம் இங்கே வராது.... நான் பாவப்பட்டவன், என்னலே பாக்க முடியாது.
* * * * * * * * * * * * * * * * * * * * * *

/*வசந்த் ஆதிமூலம் said...
நையாண்டி நைனா நீ எந்த கார்னர்ல இருந்த ? சைடுல ஓடுன மூணு படத்துல ஒரு படம் உன் படம்னு சொல்லிகிறாங்கப்பு.....*/

எப்பா சாமி.... இது என்ன புது கலாட்டா....???
(எனி ஹவ், மேட்டரை அப்படியே அமுக்கு...)

கார்க்கி said...

:)))

Anbu said...

அண்ணா டிஸ்கி சூப்பர்...

ஆனா இப்படி ஒரு படம் வருவது நீங்க சொல்லிதான் தெரியும்..

வெங்கிராஜா said...

உங்க மன தைரியத்தை பாராட்டி அமெரிக்காவிலிருந்து ஹாலிவுட் பாலா அண்ணன் சார்பில் ஒரு சோப்பு டப்பா! :P

☀நான் ஆதவன்☀ said...

தெய்வமே! தெய்வமே! நன்றி சொன்னேன் தெய்வமே!

தண்டோரா said...

சொல்லியிருந்தா நேத்து காமிச்ச ஐயிட்டத்தை ....

முரளிகண்ணன் said...

எதையும் தாங்கும் இதயம்

ஜெட்லி said...

தலைவரே நீங்க உட்லண்ட்ஸ்ல தானே படம் பார்த்திங்க?
கரெக்ட்ஆ?

வண்ணத்துபூச்சியார் said...

தனியா போனா இப்படிதான்.. அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி பார்க்க தோன்றும்...


தெய்வமே.. உங்க பொறுமைக்கும் சகிப்புதன்மைக்கும் கோயில் கட்டணும்.

வாழவைக்கும் கேபிளாருக்கு ஜே..

Cable Sankar said...

/தலைவரே நீங்க உட்லண்ட்ஸ்ல தானே படம் பார்த்திங்க?
கரெக்ட்ஆ?//

அப்ப வந்த மூணுல ஒண்னு நீங்க தானா..:)

Cable Sankar said...

நன்றி வண்ணத்துபூச்சியாரே..
முரளிகண்ணன். நான் ஆதவன்,கார்க்கி, அன்பு, வெங்கி ராஜா..

Cable Sankar said...

/நீங்க தனியாவா போனீங்க?????//

அதுக்காக நான் ரொம்பத்தான் வருத்தப்படுறேன்.

Cable Sankar said...

ஊருக்கு போவதால் மிச்ச பேருக்கு நான் வந்து பின்னூட்டம் போடறேன்.

ஜெட்லி said...

//அப்ப வந்த மூணுல ஒண்னு நீங்க தானா..:)
//

இல்லங்க எனக்கும் அப்படி ஒரு அனுபவம் உண்டு....
அதான் theatre பெயரை கரெக்ட்ஆ சொன்னேன்.

நமக்கு எதுவும் சிக்கலங்க அதான் உண்மை.

KaveriGanesh said...

தெய்வம்யா நீங்கள்

R.Gopi said...

//பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//

**********

Thala

Motham 8 perunnu sonnaangaley??

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்கள மாதிரி தெகிரியமான ஆளுங்கதாம்ணே இந்த மாதிரி படங்களையெல்லாம் பாக்க முடியும்..

pappu said...

**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**
**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **

கொடுத்த காசுக்கு சில பல பிட்டுகள பாத்துட்டீங்க போல!

குப்பன்_யாஹூ said...

i heard this film name only from yr post.

but please avoid the word, herine sema item.

anthanan said...

எல்‌லா‌ படத்‌தை‌யு‌ம்‌ இப்‌படி‌ கி‌ழி‌ச்‌சு தொ‌ங்‌க போ‌டுறீ‌ங்‌களே‌, உங்‌க டி‌க்‌கெ‌ட்‌டை‌யு‌ம்‌ சுக்‌கு நூ‌றா‌ கி‌ழி‌ச்‌சு கொ‌டுக்‌கி‌றா‌ங்‌களோ‌?

அந்‌தணன்‌

sgramesh said...

neenga romba nallavarunga

MayVee said...

அப்ப தமிழ் எம்ஏ பார்ட் டூ ன்னு சொல்லுங்க

ஷண்முகப்ரியன் said...

சித்து said...
ரிஸ்க் எடுக்குறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி போல?? //
இது உண்மைதான் போலிருக்கிறதே,ஷங்கர்!

Indian said...

தலைவா, பாப்பா பத்தின ட்டீடெய்ல்ஸ் ஏதாவது இருக்கா?

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Saravana Kumar MSK said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்கள மாதிரி தெகிரியமான ஆளுங்கதாம்ணே இந்த மாதிரி படங்களையெல்லாம் பாக்க முடியும்..//

RIPPEETTTTTU..

statistics said...
This comment has been removed by the author.
akbar said...

மொக்கை படம் பாத்து ஆதரவு கொடுக்குற நீங்க நம்ம பக்கமும் வருவிங்க என்ற ஆசை இருக்கு

கேபிள் அண்ணா நம்ம பக்கமும் கொஞ்சம் இணைப்பு கொடுங்க...


http://sinekithan.blogspot.com

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

Rafiq Raja said...

// தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//

உங்க கடமை உணர்ச்சிய எப்படி பாராட்டுறதுனே தெரியலே..... ஹீரோ ஹீரோயின் முகங்களையே பாக்க முடியல... நீங்க எப்படிதான் படம் முழுவதையும் ரசிக்கீங்களோ தெரியல சங்கரே... :)

ÇómícólógÝ