காதல் ஜோடிகளுக்கு ரிஸ்க் எடுத்து கல்யாணம் செய்து வைத்தவரா நீங்கள்? இல்லை செய்ய துடிக்கும் நட்பு திலகமா..? அப்படியானால் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். சசிகுமார், சமுத்திரகனி இருவரின் சுப்ரமணிய புர வெற்றியால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் மாஜி எம்.பியின் மகன் சரவணன், அவன் ஒரு பணக்கார ஏரியா பெரிய ஆளான ஒருவரின் பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல் தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க் எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட நண்பர்களின் கதி..? வலிக்க, வலிக்க, உண்மையை சொல்லியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக ஆரம்பித்தாலும், எல்லா கேரக்டர்களை அறிமுகபடுத்தியதும் படம் பரபரவென சூடு கிளப்புகிறது. காதல் ஜோடிகளூக்கு திருமணம் செய்து வைக்க அலையும் காட்சியில் திரை தகிக்கிறது. அட இண்டர்வெல்லிலேயே கதை முடிந்த மாதிரி இருக்கிறதே, இனிமேல் என்ன செய்ய போகிறார்கள் என்று யோசிக்க வைத்ததை சரியாய் காட்சி படுத்தி நெத்தி அடி அடித்திருக்கிறார்கள்.
சசி தனக்காக நண்பர்கள் இருவரின் உடல் பாதிப்பு அடைந்ததி நினைத்து குமுறும் காட்சியில் மிக அருமையாய் நடித்திருக்கிறார். ரொம்பவும் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறார், மாமாவிடம் அவ்வப்போது “உஙக் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்வது, மாமன் மகளை பிரியும் போதும் சொல்வது டைரக்டர் பஞ்ச். படத்தில் மிளிர்பவர் பரணி, முதல் பாதியில் கலகலப்புக்கு பயன்படுபவர், பின் பாதியில் கோபம், துக்கம், ஆவேசம் என்று பின்னுகிறார். சசியின் மாமன் மகளாய் வரும் அந்த பெண் அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. சோ…ஸ்வீவீட். விஜய்க்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண வழியில்லை. அவரின் காதலியாய் வரும் சசியின் தங்கை கேரக்டர், அப்பா இயக்குனர் ராஜா, நிமிட நேரத்தில் ப்ளக்ஸ் பேனர் கட்டும் அந்த லோக்கல் எம்.எல்.ஏ, வில்லன் ஜெயபிரகாஷின் முதல் மாப்பிள்ளை, உதவப்போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்ளும் கஞ்சா கருப்பு, ஆ.. ஊவென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று, பயமுறுத்தி தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் ஹீரோயின் அப்பா, என்று பல புது முகங்களும், பழைய முகங்களூம் தஙக்ள் பங்கை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. அதிலும் அந்த திருமண சேசிங் காட்சி சூப்பர்ப் கதிர். அதே போல் எடிட்டிங்கும், சுந்தர் சி பாபுவின் இசையில் வரும் சம்போ.. சம்போ பாட்லும் நம்மை உசுப்பேற்றுகிறது.
நண்பனின் காதலுக்கும், தன் தங்கையின் காதலுக்கும், அவவளவு போராடும் சசி ஏன் தன் காதலுக்கு அவ்வளவு போராடவில்லை.? இரண்டாவது பாதியில் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், தங்களை பற்றி, தங்கள் குடும்பத்தை பற்றி கவலை படாமல் நண்பர்களின் காதலுக்கு துணை போகும் இளைஞர்களுக்கு சரியான உண்மைகளை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் பரபரக்கும் திரைக்கதையும், பின் பகுதியில் அந்த பரபரப்புகு ஈடான மிதமான நிதர்சன நிகழ்வுகளால் சமுத்திரகனி தன் மூன்றாவது முயற்சியில் நம் மனதில் நிற்கிறார்.
நாடோடிகள் – ராஜபாட்டையில்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
அதுக்கு அப்புறம் அவரு "அவரோட தலய" வச்சி படம் கிடம் எடுக்காமே இருக்கனுமே????
100% சரியான விமர்சனம்.பாராட்டுக்கள்.
அப்படியே நாளைக்கு வால்மீகி விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறேன்..
தொடரட்டும் உங்கள் பணி
பின்னீருப்பாங்க போல???
:)))
மற்றொரு காரணம் நாடோடிகள் எங்கள் ஊரிலும் படப்பிடிப்பு நடத்தினார்கள் எப்படி இருக்குன்னு போய் பார்கிறேன்
விமர்சனத்துக்கு நன்றிண்ணே.... படம் பார்த்துருவோம்... :)
நீங்க எது நல்ல இருக்குதுன்னு சொல்லுறிங்களோ அந்த படம் தான் ஒழுங்கா தியேட்டர்ல ஓடுது . உங்க விமர்சனம் எல்லா சூப்பர் .
கண்டிபா மனைவிக்குட போய் பார்துடுறேன் .
ஆனாலும் நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துகள்.
நல்ல அலசல் அண்ணே
//
எத்தனாவதா இருந்தா என்ன பாலாஜி.. உங்க வருகையும், கருத்தும், எனக்கு சந்தோஷமே..
100% சரியான விமர்சனம்.பாராட்டுக்கள்//
மிக்க நன்றி சார்..உங்கள் பின்னூட்டம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகிறது.
நன்றி அன்பு,
நன்றி கதிர், ராம்
உடனே பாருங்க முரளிகுமார்பத்மநாபன்
டிரை பண்ணாதீங்க முத்துராமலிங்கம்.. நிச்சயமா பாருங்க..
நன்றி அக்பர்,
நன்றி பப்பு.. இயக்குனரின் முதல் இரண்டு முயற்சி.. உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு..
உங்கள் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள் பாலாஜி.
ஆமாம் மாயாவி..
ஆமாம் உடனே கிளம்புங்க சுகுமார்..
நிச்சயமாய் குடும்பத்தோடு பார்க்கலாம். ராஜராஜன்.
நன்றி அருண் குமார்.
நன்றி எஸ். ஜி. ரமேஷ்,
நன்றி கடைக்குட்டி,
நன்றி அபு அப்ஸர்
ஆனாலும் நல்ல விமர்சனத்திற்கு வாழ்த்துகள்//
தப்பு என்னுதுல்ல வண்ணத்துபூச்சியாரே.. அது உங்களுக்கே தெரியும்.
appa padatha partheravendiyadhuthan!
இவருடைய மூன்றாவது படம் நம்பிக்கை தருவதாக சொல்கிறீர்கள். பார்த்துவிட்டு மிச்சம் சொல்கிறேன்.
ஆமாம் புது கீ போர்ட் அதுனால. சரி பண்ணிடறேன்.
ஆமா உதயம்லதான்.. சீ ரோ..
நன்றி நர்சிம்.
i will c this movie
சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்பரம் செய்த கேபிள் ஜி வாழ்க
ரொம்ப வெகுளி... நல்ல நடிப்பு.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்....
அப்புறம் சொல்ல மறந்த , சசி தங்கச்சி ...கேரக்டர்.. ஒரு வாய் பேச , காது கேட்காத .. பெண் என தெரியாதவாறு ..இயல்பாக நடித்துள்ளார்..
சொல்ல நிறைய நல்ல விஷயங்கள் கொண்ட படம், மீண்டும் ஒருமுறை நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் மூலமாக விளம்பரம் செய்த கேபிள் ஜி வாழ்க//
நன்றி முரளி பத்மநாபன்.
ஆமாம் பேரரசன் சொல்லணும்னு நினைச்சேன்.. மற்ந்திட்டேன்.
இந்தத் தகவல் சரியா என்ன? அவர் லோக்கல் அரசியல்வாதிதானே .... எம்.எல்.ஏ இல்லையே?
உடனுக்குடன் விமர்சனம் பின்றீங்க போல... படத்தின் தகவல்களும் தவறில்லாம கொடுத்தா சிறப்பு... படம் பார்த்துட்டு வந்துதான் உங்க விமர்சனம் படிச்சேன்.. முன்பே படிச்சிருந்தா சீக்கிரம் போயிருப்பேன். வாழ்த்துகள்
நாடோடிகள் பொழுதுபோக்குக்காக மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல... இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய ஓர் சிறந்த பாடம்.
நான் பார்த்ததில் 2009ன் சிறந்த படம் இதுவென நினைக்கிறேன்.
தங்களின் விமர்சனத்தால் மகிழ்சியடைகிறேன். பாரபட்சமற்ற விமர்சனம் அளித்துள்ளீர்கள் பாராட்டுகள்.