ரெட்டச்சுழி – திரை விமர்சனம்.
தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம், இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு, அங்காடித்தெரு அஞ்சலி நடித்திருக்கும் படம், என பலவிதமான எதிர்பார்புகளோடு வெளியாகியிருக்கும் படம்.. ஒரு ஊரில் இரண்டு தாத்தா இருந்தார்கள். இருவருக்கும் நாற்பது வருஷ பகை. இவர்களின் பகை இவர்களின் கடைக்குட்டி வாரிசுகளுக்கும் தொற்றிக் கொள்ள, இரண்டு பக்கமும் பகை. ஒரு கட்டத்தில் பாலசந்தர் வீட்டு பையனும், பாரதிராஜா வீட்டு பெண்ணும் காதலிக்க, இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள் ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை தீர்ந்த்தா என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்ப காட்சி முதலே ஒரு குழப்பம் கிளம்பிவிடுகிறது. இது சீரியஸ் படமா? அல்லது காமெடி படமா? என்று. ஏனென்றால் பாலசந்தர், பாரதிராஜா இருவரது நடிப்பும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் காழ்ப்புணர்ச்சி ஏதோ காமெடி பட சீன்கள் போல இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லை. அப்படி காமெடி படம் தான் என்றால் அதிலும் சீரியஸ்னெஸ் இல்லை. அதிலும் இந்த தள்ளாத...