Posts

Showing posts with the label கந்துவட்டித்தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா?

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -7

கந்து வட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -8 தமிழ் சினிமாவின் முக்கிய ஏரியாவான வடபழனியில் ஒவ்வொரு துறையினருக்கும் ஒரு டீக்கடை முக்கு உண்டு. பிரசாத ரெக்கார்டிங் முன்பு பார்த்தால் நிறைய உதவி இயக்குனர்கள், ஏன் ஒரு படம் செய்து அடுத்த படத்திற்காக காத்திருப்பவர்கள். முதல் பட தோல்விக்கான காரணங்களை நின்று அலசுகிறவர்கள் என பெரும்பாலும் இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே அதிக்கம் செலுத்துமிடம் காவேரி கார்னர். அடுத்து கொஞ்சம் தூரம் போனால் மரங்கள் அடர்ந்த பாரதியார் தெரு. நீங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவை பார்க்கிறவர்கள் என்றால் நீங்கள் பல படங்கள் பார்த்த,அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய அளவில் பிரபலமான பல துணை நடிகர்களை அங்கே பார்க்கலாம். அந்த தெரு ஒரு நம்பிக்கை தெரு. அந்த தெருவிலிருந்துதான் சூரி, மூனீஷ்காந்த், என பல நடிகர்கள் பிரபலமாகியிருக்கிறார்கள். அங்கே கூடும் ஒவ்வொருக்கும் எனர்ஜி கொடுக்ககூடிய ஒர் முக்கிய விஷயம் அவர்களின் வெற்றிதான். “தோ.. இங்கதான் நானும் சூரியும் தெனம் முனை கடையில டீ குடிச்சுட்டு, ஆபீஸ் ஆபீஸா ஏறிட்டு வருவோம்” எனும் நண்பரை நீங்கள் நிறைய படங்கள் பார்த்திருப்பீர்கள். “என்ன...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6 சில வருடங்களுக்கு முன் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர். திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக் கொள்வார். ஒரு நாள் வழக்கம் போல அழைத்தார். படம் ஒண்ணு ஓகே ஆயிருக்கு. நம்ம காமெடிக்கதைதான். ப்ரொடியூசர் ஓகே சொல்லிட்டாரு. ஆபீஸ் பார்க்க சொல்லியிருக்காரு. என்றார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ”அப்ப நாம உடனே கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு காமெடிய சேர்த்துருவோம்’ என்றேன். நண்பரும் உற்சாகமாக தலையாட்டினார். அங்கே இங்கே என அலைந்து ஒரு வழியாய் கோயம்பேடில் அலுவலகம் வாடகைக்கு பிடித்தாயிற்று. ஒரு சுபயோக சுபதினத்தில் அலுவலக பூஜை போடப்பட்டது. தயாரிப்பாளர் மட்டுமே வந்து கலந்து கொண்ட நிகழ்வு. உடன் யாரும் வரவில்லை. தயாரிப்பாளருக்கு 50 வயது இருக்கும். நல்ல ஸ்லிம்மாய், வயது தெரியாமல் இருந்தார். இருந்த டபுள் பெட்ரூம் ப்ளாட்டில் எந்த அறையை அவருக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்று கேட்டோம். இரண்டு அறைகளில் பால்கனி உ...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -5 நண்பருக்காக படம் தயாரிக்க வந்து கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் இழந்து இன்னும் முடிக்காமல் இருக்கும் படத்தை கையில் வைத்துக் கொண்டிருந்தவரிடம் நான் சொன்ன பதில் யோசனை செய்ய வைத்தது. ” அப்ப படத்த அப்படியே விட்டுற சொல்றீங்க?” “நான் சாதகம் பாதகம் ரெண்டையும் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் “ என்றேன். நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டு, “நல்லதோ கெட்டதோ நான் ஒரு விஷயத்தை எடுத்தா முடிக்காம விட்டதில்லை. இனி யோசிக்கிறதுக்கு ஒண்ணுமில்லை. இன்னும் ஒரு ஐம்பதுலட்சம் தானே.. போகட்டும்” என்று சொல்லிவிட்டு, ஊருக்கு சென்றவர் தான். இது வரை பட ரிலீஸ் அன்றைக்கு கூட அவர் வரவில்லை. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு குழந்தையைப் போல யாருக்கும் தெரியாமல் அந்த படம் சென்னையில் மொக்கை தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்பட்டு ரெண்டொரு ஷோவில் தூக்கப்பட்டு முடிந்து போனது. கந்து வட்டிதான் சினிமாவை இயக்குகிறதா? என்று கேட்பீர்கள் என்றால் நிச்சயம் இல்லை இம்மாதிரியான தயாரிப்பாளர்களினால் தான் சினிமா இயங்குகிறது என்று சொல்வேன். இவராவது சினிமா எனும் மாயை தெரியாமல் நண்பருக்காக மா...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 4

போன கட்டுரையில் நான் சந்தித்த தயாரிப்பாளரை கடனிலிருந்து காப்பாற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். ஐ நல்லா கதை வுடுறே என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார்.. நீ தெய்வ லெவல் என்று பாராட்டியும் இருந்தார்கள். பாராட்டு எனக்கு தகுதியில்லாத ஒன்றுதான். ஏனென்றால் அந்த தயாரிப்பாளரை நான் வேண்டாம் என்று சொன்னதும், அவரை காப்பாற்ற மட்டுமல்ல. என்னை காப்பாற்றிக் கொள்ளவும் கூட. தவறான ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டு வெளியே வரவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் போராடுவதற்கு பதில் எனக்குதேவையான பட்ஜெட்டில் படமெடுக்க ஆள் தேடுவதுதான் புத்திசாலித்தனம். சுயநலமும் கூட.. வட்டியிலிருந்து காப்பாற்றியது எல்லாம் சுயநலத்தில் ஒர் பொதுநலம் தான். ஆனால் பெரும்பாலான புது தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள் படம் கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தில் எல்லாவற்றிக்கும் தலையாட்டி விட்டு பின்பு அவஸ்தைபடுவது மிக சாதாரணமாய் நடக்கும் விஷயம்.  சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு போயிருந்தேன். படத்தின் தயாரிப்பாளர் சுய தொழில் செய்பவர். அவரது நண்பர் பல வருடங்களாய் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவர். நண்பனின் போராட்டத்தைப் பார்த்து சரி நான் உனக...

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -1

எங்கு பார்த்தாலும் கந்துவட்டி.. கந்து வட்டி என்கிற பேச்சுத்தான். ஒரு மாதத்துக்கு முன் கந்துவட்டிக் காரணமாய் தீக்குளித்த குடும்பத்திற்கு கிடைத்த கவன ஈர்ப்பை விட சமீபத்தில் பைனான்ஸ் பிரச்சனையால் தூக்கு மாட்டிக் கொண்ட இயக்குனர்/ நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளருமாகிய அசோக்குமாரின் மரணம் ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவின் பவர் அப்படி. இறந்தவர் தன் இறப்புக்கு காரணமானவர் அன்பு செழியன் என்கிற பைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்துவிட்டு போக, ஏற்கனவே அவரின் பேரில் பல செவிவழிக்கதைகள் உள்ள நிலையில் பற்றிக்கொண்டது. உடனடியாய் கைது செய் என்று ஒரு கோஷ்டி போர்க்கொடி ஏந்தி களத்தில் இறங்க, அடுத்த நாளே அன்பு செழியன் நல்லவர் , வல்லவர், உத்தமர் எங்களீடம் அவர் நன்றாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். என்று பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு பேட்டிக் கொடுக்க ஆரம்பித்த ஒரு கோஷ்டி என தமிழ் சினிமா ரெண்டாய் பிளந்திருக்கிறது. இதில் அரஸ்ட் செய்யச் சொல்லி போராடுகிறவர்கள் அதே அன்புவிடம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களும் இருக்க, இந்த பிரச்சனையை பெரிது செய்து அதில் அவர்களி...