Posts

Showing posts with the label Blindness

BLINDNESS -2008

Image
பரபரப்பான சாலையில் கார்கள் பறக்கின்றன, எல்லாரிடமும் வேகம், வேகம்.. ஒரு சிக்னலில் பச்சை விழ, முன்னிருக்கும் வண்டி மட்டும் கிளம்பாமல் இருக்க, ஆரன்களின் அணிவகுப்பு ஆரம்பிக்க, அந்த வண்டியில் டிரைவர் சீட்டில் இருந்தவனுக்கு அந்த நிமிடத்திலிருந்து, நல்ல கண் பார்வை கொண்ட் அவனுக்கு பார்வை தெரியவில்லை.. வொயிட் ப்ளைண்ட்னெஸ்.. ஒரு விதமான ப்ளேக் போல இந்த வியாதி ஒவ்வொருவருக்காய் தொற்ற, பயந்து போன அரசாங்கம், என்ன செய்வது என்று தெரியாமல் பாதிக்க பட்டவர்களையெல்லாம், ஒரு மெண்டல் அசைலமில் தனியாக்கப்பட்டு, தங்க வைக்கப்படுகின்றனர். பாதிக்க பட்ட ஆட்களில் முதல் காட்சியில் பாதிக்கப்பட்ட முதல் ஆளான பணக்கார சைனாக்காரனும், அவனுக்கு உதவி செய்ய முயன்று, அவனின் காரை திருடிக் கொண்டு போக, முயற்சி செய்தவனும், அவனது மனைவியும், ஒரு கண் டாக்டரும் ஆவார். கண் டாக்டரையும் அரசாங்கம் அந்த மெண்டல் அசைலமில் வைத்திருக்க முடிவு செய்யும் போது, இந்த ப்ளேக்கால் பாதிக்கபடாத அவரது மனைவியும் தன் கணவனை விட்டு பிரிய மனமில்லாமல், தனக்கும் பார்வை போய்விட்டது என்று கூறி அவனுடன் போகிறாள். பின்பு அந்த அசைலமில் நடக்கும் காட்சிகள் தான் படம். த...