இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன். சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம். பல்லவி- அனுபல்லவி மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க ஒரு மினி இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள். சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள். அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என...